பைங்குடில் வளிமம்

From Wikipedia, the free encyclopedia

பைங்குடில் வளிமம்
Remove ads

பைங்குடில் வளிமங்கள் அல்லது பைங்குடில் வாயுக்கள் (Greenhouse gas) என்பவை வளிமண்டலத்தில் உள்ள வெப்பக்கதிர்வீச்சைக் கொடுக்கும் அகச்சிவப்புக் கதிரை உறிஞ்சி, பின் வெளிவிடும் தன்மை கொண்ட வளிமங்களாகும். இவ்வாறு அவை வெப்பத்தை வெளியேற்றும்போது ஏற்படும் விளைவே பைங்குடில் விளைவு[3] க்கான அடிப்படைக் காரணமாகும். பூமியின் வளிமண்டலத்தில் உள்ள முக்கியமான பைங்குடில் வளிமங்கள் நீராவி, காபனீரொக்சைட்டு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், மற்றும் க்ளோரோஃப்ளூரோகார்பன்கள் ஆகியவையாகும்[4][5][6]. நம்முடைய சூரிய மண்டலத்தில், வெள்ளி, செவ்வாய் மற்றும் டைடன் (en:Titan)ஆகியவற்றின் வளிமண்டலங்களிலும் பைங்குடில் விளைவுகளுக்குக் காரணமான வாயுக்கள் உள்ளன. பைங்குடில் வளிமங்கள் புவி வெப்பத்தை அதிகமாக பாதிக்கிறது. அவை இல்லாமலிருந்தால், புவியின் மேற்பரப்பு வெப்பநிலை இப்போது உள்ளதைவிட சராசரி 33°செ (59°பா) குறைவாக இருக்கும். தற்போதைய மேற்பரப்பு சராசரி வெப்பநிலை ஏறக்குறைய 14 °செ (57 °பா) ஆகும்[7][8][9]

Thumb
இந்த வரைபடத்தில் 1979 ஆம் 2008 ஆம் ஆண்டுக்கிடையிலான, வருடாந்த பைங்குடில் வளிமச் சுட்டெண் (Annual Greenhouse Gas Index – AGGI) கொடுக்கப்பட்டுள்ளது. [1]இந்த வருடாந்த பைங்குடில் வளிமச் சுட்டெண்ணானது, பூமியின் காலநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய தன்மையின் அடிப்படையில், வளிமண்டலத்திலுள்ள பைங்குடில் வளிமங்களின் மட்டத்தை அளக்கின்றது.[1]
Thumb
இந்தச் சட்டவரைபடத்தில், 1990 ஆம் 2005 ஆம் ஆண்டுக்கிடையில் உலகளாவிய அளவில் நிகழ்ந்த பைங்குடில் வளிம வெளியேற்றத்தை காபனீரொக்சைட்டு சமவலுவில் (en:carbon dioxide equivalent) அளந்து குறிப்பிடப்பட்டுள்ளது. [2]
Thumb
நவீன உலகளாவிய மனிதவழி கரிமம் வெளியேற்றத்தை அல்லது உமிழ்வைக் காட்டும் வரைபடம்.

தொழில் புரட்சி தோன்றியதிலிருந்து தொல்படிவ எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் வளிமண்டலத்தில் உள்ள காபனீரொக்சைட்டின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. வளிமண்டலத்திலுள்ள காபனீரொக்சைட்டின் பெரும்பகுதி கார்பன் சுழற்சியின் மூலம் பயன்படுத்தப்பட்டாலும் கூட, வளிமண்டலத்தில் 40% காபனீரொக்சைட்டு செறிவு அதிகரித்துள்ளது[10][11].

Remove ads

புவி வளிமண்டலத்தில் இருக்கும் வளிமங்கள்

பைங்குடில் வளிமங்கள்

Thumb
வளிமண்டலத்தில் மின்காந்த அலைகள் வெவ்வேறு அலைநீளத்தில் உறிஞ்சப்படுவதும், சிதறப்படுவதும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. காபனீரொக்சைட்டின் மிக அதிகளவிலான உறிஞ்சல் நடைபெற்ற பட்டை அகச்சிவப்புக் கதிராக உள்ளதைக் காணலாம்.

பைங்குடில் வளிமங்கள் வளிமண்டலத்தில் உள்ள கண்ணுக்குப் புலப்படும் ஒளி அலைகளையன்றி, அதிர்வெண் கூடிய வெப்பக்கதிர்வீச்சைக் கொடுக்கும் அகச்சிவப்புக் கதிரை உறிஞ்சி, பின் வெளிவிடும் தன்மை கொண்ட வளிமங்களாகும்.[3] புவியின் வளிமண்டலத்தில் அதிகளவில் இருக்கும் வரிசைப்படி பைங்குடில் வாயுக்கள் கீழே:

இந்த வளிமங்களின் செறிவானது, இயற்கைச் சூழல் மண்டலம் மற்றும் மனிதனின் தொழிற்பாட்டால் ஏற்படும் வளிம வெளியேற்றத்திற்கும், வெவ்வேறு வேதிப்பொருட்களாக அந்த வளிமங்கள் மாற்றப்படுவதிற்குமான சமநிலையில் தங்கியிருக்கும்.[12] மனிதத் தொழிற்பாட்டால் ஒரு வளிம வெளியேற்றம் அதிகரிக்கும்போது, வளிமண்டலத்தில் குறிப்பிட்ட வளிமத்தின் செறிவும் அதிகரிக்கும்.

சில பைங்குடில் விளைவைத் தரக்கூடிய வளிமங்கள் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக en:nitrogen trifluoride மிக உயர்ந்த புவி சூடாதலுக்கான தன்மையைக் கொண்டிருந்தாலும், மிகச் சிறிய அளவிலேயே வளி மண்டலத்தில் இருப்பதனால், அத் பட்டியலில் இணைக்கப்படவில்லை.[13]

பைங்குடில் விளைவற்ற வளிமங்கள்

வளிமண்டலத்தில் அதிகமாக உள்ள நைட்ரசன் (N2), ஆக்சிசன் (O2), ஆர்கான் (Ar), போன்ற வளிமங்கள் வேறு பல இயற்பியல், வேதியியல் தாக்கங்களில் பங்கெடுத்தாலும், பைங்குடில் விளைவைக் கொடுப்பதில்லையாதலால், அவை பங்குடில் வளிமங்களில் அடங்காதவையாகும். இது ஏனெனில், N2 மற்றும் O2 போன்ற ஒரே தனிமத்தின் இரு அணுக்களைக் கொண்டுள்ள மூலக்கூறுகள் மற்றும் ஆர்கான் போன்ற ஓரணு மூலக்கூறுகள் அதிரும்போது அவற்றின் இருமுனையியில் எவ்வித மாற்றமும் அடையாததால் கிட்டத்தட்ட முழுவதுமாக அகச்சிவப்பு ஒளியால் பாதிக்கப்படாததே காரணமாகும். இவை அகச்சிவப்புக் கதிரினால் எந்த மாற்றங்களுக்கும் உட்படாமல் இருப்பவையாகும்.

கார்பன் மோனாக்சைடு (CO), Hydrogen chloride (HCl) போன்றவை ஓரளவு அகச்சிவப்புக் கதிரை உறிஞ்சினாலும், இவற்றின் வினைதிறன் மற்றும் கரையுந்திறனால், வளிமண்டலத்தில் மிகக் குறுகிய காலம் மட்டுமே இருக்கும். இதனால் இவையும் பைங்குடில் வளிமங்களினுள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இருந்தாலும், CO வானது வேறு வகையில் புவி சூடாதலில் பங்கெடுக்கின்றது.[14]

மறைமுகமான கதிர்வீச்சு விளைவுகள்

சில வளிமங்கள் பைங்குடில் விளைவை நேரடியாகக் கொடுக்கா விட்டாலும், மறைமுகமாக அந்த விளைவைக் கொடுக்கின்றன.

  • பைங்குடில் வளிமம் அல்லாதவற்றிலிருந்து உருவாகும் ஒரு வளிமம் பைங்குடில் வளிமமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக கார்பனோரொக்சைட்டு ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்க்குட்பட்டு CO2ஐ உருவாக்கும். மீத்தேன் ஒடுக்க-ஏற்ற வேதிவினைக்குட்படும்போது, ஓசோன் உருவாகும்.
  • பைங்குடில் வளிமத்தின் சில வினையாற்றல்களால், பைங்குடில் வளிமங்களின் செறிவில் மாற்றமேற்படலாம்.[15]
  • மீத்தேன், கார்பனோரொக்சைட்டு என்பன வளிமண்டலத்திலுள்ள OH உடன் தாக்கமுற்று அதன் செறிவைக் குறைக்கும். இதனால் வளிமண்டலத்தில் மீத்தேனின் செறிவு அதிகரிக்கும். இவற்றின் தாக்கத்தால் நீராவியும் அதிகரிக்கும். இவ்வாறான தாக்கத்தால், CO2 ஐவிட CO வின் புவி சூடாதல் மீதான தாக்கம் 3 மடங்காக இருப்பதாக அறியப்படுகின்றது.[16]

பைங்குடில் விளைவில் முகிலின் பங்களிப்பு

பைங்குடில் வளிமம் இல்லாதிருப்பினும், முகில் அகச்சிவப்புக் கதிரை உறிஞ்சுவதால், கதிர்வீச்சு இயல்புகளைக் கொண்டிருந்து, பைங்குடில் விளைவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொடுக்கின்றது. முகில்கள் வளிமண்டலத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் நீர்த் துளிகள் அல்லது பனிப்படிகங்களேயாகும்.[17][18]

Remove ads

புவி வளிமண்டலத்தில் பைங்குடில் விளைவுகள்

Thumb
வளிமண்டலத்தில் நிகழும் பைங்குடில் விளைவு

ஒரு வளிமத்தின் பைங்குடில் விளைவுக்கான பங்களிப்பானது, வளிமத்தின் பண்புகள், வளிமண்டலத்தில் அதன் அளவு, அதன் மறைமுகமான தாக்கங்களின் அளவு என்பதைப் பொறுத்தாகும். உதாரணத்திற்கு, ஒரு 20 ஆண்டுகள் காலவரையில், குறிப்பிட்ட திணிவு காபனீரொக்சைட்டைவிட, அதே திணிவுள்ள மீத்தேனின் கதிர்வீச்சத் திறன் 72 மடங்காகும்.[19] ஆனால் மீத்தேன் வளிமண்டலத்தில் குறுகிய காலமே நிலைத்திருப்பதனால், இதன் செறிவு குறைவாகவே இருக்கும். அதனால், இதன் பைங்குடில் விளைவுக்கான பங்களிப்பும் குறைவாகவே இருக்கும். ஆனாலும், மீத்தேனானது ஓசோன் உருவாக்கத்தில் பங்கெடுப்பதனால், மீத்தேனின் மறைமுகமான பைங்குடில் விளைவின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருக்கின்றது. இந்த மறைமுக பங்களிப்பின் காரணமாக, மீத்தேனின் தாக்கமானது முன்பு அறியப்பட்டைருந்ததை விட இரு மடங்காவது அதிகமாக இருக்கும் எனக் 2005 இல் கூறப்பட்டது.[20][21]

இந்த பைங்குடில் வளிமங்களை அவைகளின் மிக முக்கியமான பைங்குடில் விளைவுக்கான பங்களிப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தும்போது, அவற்றின் வரிசை கீழ்வருமாறு இருக்கும்.[17]

மேலதிகத் தகவல்கள் சேர்மம், Formula ...

மேலே பட்டியலிடப்பட்டுள்ள முக்கியமான பைங்குடில் வளிமங்களுடன், ஸல்ஃபர் ஹெக்ஸாஃப்ளோரைடு, ஹைட்ரோஃப்ளோரோகார்பன்கள் மற்றும் பெர்ஃப்ளோரோகார்பன்கள் எனும் மற்ற பைங்குடில் வளிமங்களும் அடங்கும். ஐபிசிசி பைங்குடில் வாயுக்கள் பட்டியலையும் en:IPCC list of greenhouse gases) பார்க்கவும்.

புவி வெப்பமடைதல் சார்ந்த அர்ரேனியஸ் தேற்றத்தை விரிவுபடுத்திய அறிவியலறிஞர்கள், வளிமண்டலத்தில் உள்ள பைங்குடில் வளிமங்களின் செறிவு, சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் கணிசமான அளவு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு முன்பு எப்போதுமில்லாத அளவில் புவி வெப்ப உயர்வுக்கு காரணமாகிறது என்கின்றனர்.

19ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதியில் வாழ்ந்த அறிவியலறிஞர்கள் சோதனை மூலம் N2 மற்றும் O2 அகச்சிவப்பு கதிர்வீச்சை உறிஞ்சவில்லை (அக்காலத்தில் "இருண்ட வெப்பக் கதிர்வீச்சு" என அழைக்கப்பட்டது) என்றும் ஆவி மற்றும் மேக வடிவில், CO2 தண்ணீரும் வேறு பல வாயுக்களும் இப்பேற்பட்ட வெப்பக்கதிர்வீச்சை உறிஞ்சுகின்றன என்றும் கண்டுபிடித்தனர். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளிமண்டலத்தில் உள்ள பைங்குடில் வாயுக்கள், அவை இல்லாமலிருந்தால் பூமியின் வெப்பநிலை எவ்வளவு இருக்குமோ அதைவிட அதிகமாக பூமியின் ஒட்டுமொத்த வெப்பநிலை அதிகமாக இருப்பதற்கு காரணமாகின்றன என கண்டறிந்தனர்.

Remove ads

இயற்கை மற்றும் மனிதச்செயலால் நிகழ்ந்தவை

Thumb
400,000 ஆண்டுகள் பனிக்கட்டி உள்ளீடு விவரம்
Thumb
மேல்: சுற்றுச்சூழலில் அளந்தறியப்பட்ட சுற்றுச்சூழலில் அதிகரிக்கும் கார்பன் டைஆக்சைடின் அளவுகள் மற்றும் பனிக்கட்டி உள்ளீடுகளில் அவற்றின் பிரதிபலிப்பு.கீழே: தொல்பொருள் எரிப்பதன் மூலம் வெளிவரும் கார்பன் உமிழ்வுகளை ஒப்பிட்டு, சுற்றுச்சூழலில் அதிகரிக்கும் கார்பனின் நிகர அளவு.

மனிதனால் தயாரிக்கப்பட்ட செயற்கை ஹாலோகார்பன்களைத் தவிர்த்துப் பார்த்தால், அநேகமான பைங்குடில் வளிமங்கள் இயற்கை மற்றும் மனிதனால் உருவான மூலப் பொருட்களிலிருந்து பெறப்பட்டவையாக இருக்கின்றன. தொழிற்சாலைகள் ஏற்படுவதற்கு முன்னாட்களான ஹோலோசீன் (Holocene) காலத்தில், வளிமண்டலத்தில் இருந்த வளிமங்களின் செறிவு ஏறக்குறைய நிலையானதாக இருந்தது. தொழிற்புரட்சிக் காலத்தில், முக்கியமாக தொல்படிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலமாகவும் மற்றும் காடுகளை அழிப்பதன் மூலமாகவும், மனிதச் செயல்கள் வளிமண்டலத்தில் உள்ள பைங்குடில் வளிமங்களின் அளவைக்கூட்டியுள்ளன.[22][23]

IPCC ஆல் தொகுக்கப்பட்ட 2007ஆம் ஆண்டின் நான்காம் மதிப்பீட்டு அறிக்கை (AR4) "வளிமண்டலத்தில் உள்ள பைங்குடில் வளிமங்கள், வளிமத் தொங்கல்கள் (Aerosols), பூமியை மூடியுள்ள பரப்பு மற்றும் சூரிய வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், காலநிலையின் சமநிலைத் தன்மையை மாற்றிவிடுகின்றன" எனக் குறிப்பிடுவதுடன், "20ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து ஏற்பட்டுள்ள கணிசமான சராசரி புவி வெப்ப உயர்வுக்கு முக்கிய காரணமாக, மனிதச்செயலால் நிகழ்ந்த பைங்குடில் வளிமங்களின் செறிவின் கூடுதல் அமைகிறது" என்ற முடிவுக்கும் வந்துள்ளது.[24] AR4ல், "கணிசமான" என்பது 50%க்கு மேற்பட்டதென வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் வாயு, தொழிற்காலத்திற்கு முன் நிலை ...

ஆய்வு செய்யப்பட்ட பனி உள்ளகங்கள், கடந்த 800,000 ஆண்டுகளுக்கும் மேலாக பைங்குடில் வளிமங்களில் செறிவின் ஏற்பட்ட மாற்றங்களைக் எடுத்துக்காட்டும் சான்றுகளைத் தந்திருக்கின்றன. பனிக்கட்டி உள்ளக ஆய்வு முடிவுகளின்படி, உறைபனி மற்றும் உறைபனிப் படலங்களுக்கு இடையில் காணப்படும் CO
2
, CH
4
ஆகிய பைங்குடில் வளிமங்களின் செறிவில் வேறுபாடு காணப்படுகின்றது. இவ்விரு வளிமங்களின் செறிவும் வெப்பநிலையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. பனிக்கட்டி உள்ளக ஆய்வு முடிவுகளால் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் தவிர, அதற்கு முன்னரான காலத்தைப் பற்றி அறிய நேரிடையான புள்ளிவிவரம் ஏதும் இல்லை. இதில் கூறப்பட்டுள்ள பதிவுகளின்படி, கடந்த 250 ஆண்டுகளில் ஏற்பட்ட CO2 செறிவு அதிகரிப்பைத் தவிர்த்துப் பார்த்தால், கடந்த 800,000 ஆண்டுகளாக CO2 இன் மோல் பின்னம் 180 ppm இலிருந்து 280 ppm என்ற வீச்சு எல்லைக்குள்ளேயே இருந்ததாக நம்பப்படுகின்றது. இருப்பினும், பல்வேறு மாதிரியமைப்புக்கள் மூலம் பெறப்பட்ட பதிவுகள், 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் CO
2
தற்போதுள்ள நிலையைவிட ஓரளவு 10 மடங்கு அதிகமாக இருந்ததாகக் கூறுகின்றன.[25]

உண்மையில், ஃபனரோசோயிக் (en:Phanerozoic) எனப்படும் பேரூழிக் காலத்தின் (en:Eon) அதிக பகுதியும் CO
2
செறிவு கணிசமான அளவில் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்தப் பேரூழிக் காலத்தில் அடங்கும் மெசோசோயிக் (en:Mesozoic) எனப்படும் ஊழிக் காலத்தில் (en:Era) தற்போது இருப்பதைவிட நான்கிலிருந்து ஆறு மடங்கு அதிக செறிவு இருந்ததாகவும், பலேயோசோயிக் (en:Palaeozoic) ஊழிக் காலத்தின் முற்பகுதியில் இருந்து டெவோனியன் (en:Devonian) ஊழிக் காலத்தின் நடுப்பகுதிவரை, தற்போது உள்ளதைப்போல் பத்திலிருந்து பதினைந்து மடங்கு அதிக செறிவு, இருந்ததாகவும் கூறப்படுகின்றது.[26][27][28]. நிலத் தாவரப் பரவல் டெவோனியன் காலத்தின் பிற்பகுதியில் CO
2
செறிவினைக் குறைத்ததாகக் கருதப்படுகிறது. CO
2
செறிவினை அதிகரிக்கவும், குறைக்கவும் இந் நிலத் தாவரங்கள் செயல்படுவதனால், தாவரச்செயல்பாடுகள் CO
2
செறிவில் நிலையான பின்னூட்டம் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது[29].

இன்னும் முன்னதாக, ஒரு 200-மில்லியன் ஆண்டு இடைக்காலத்தில், மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பிலிருந்து வெளிப்பட்ட வளிமங்களினால், CO
2
செறிவில் ஏற்பட்ட 12% சடுதியான அதிகரிப்பானது, புவி நடுக்கோட்டுக்கு அருகேவரை வந்திருந்த பரவலான உறைபனிப்பரவலை திடீரென முடிவுக்கு வந்ததாகத் நம்பப்பப்டுகின்றது. இதனால் உச்ச அளவில் பைங்குடில் விளைவு நிலைமைகள் ஏற்பட்டதாகவும், நாளொன்றுக்கு 1 மி.மீ. என்ற வீதத்தில் சுண்ணக்கல் வடிவில் கார்பனேட் படிவுகள் ஏற்பட்டதாகவும் அறியப்படுகின்றது[30]. இந்நிகழ்வு ப்ரிகேம்ப்ரியன் எனப்படும் பேரூழிக்காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அதனைத் தொடர்ந்த ஃபனரோசோயிக் எனும் சூடான பேரூழிக் காலத்திற்குள் வந்தது. இக்காலத்திலேயே, பல்கல விலங்குகளும் தாவரங்களும் தோன்றின எனக் கூறப்படுகின்றது. அதற்குப் பின்னர், அந்நிகழ்வுடன் ஒப்பிட்டுக்கூறும் அளவுக்கு எரிமலை வெடிப்பு CO
2
வெளிப்பாடு இருக்கவில்லை. தற்காலத்தில், எரிமலைகளிலிருந்து வளிமண்டலத்துக்கு உமிழப்படும் CO
2
செறிவானது, மனித இனத்தால் வளிமண்டலத்துக்கு வெளிப்படுத்தப்படும் CO
2
செறிவின் 1% மட்டுமே எனக் கூறப்படுகின்றது[30][31][32].

Remove ads

மனிதச்செயலால் தோன்றும் பைங்குடில் வாயுக்கள்

Thumb
தற்கால உலக மனிதச்செயலால் ஏற்படும் கார்பன் உமிழ்வுகள்
Thumb
2000 ஆம் ஆண்டில் மனிதச்செயலால் வெளிவிடப்பட்ட பைங்குடில் வளிமங்களின் பங்குகள் (Emission Database for Global Atmospheric Research ஆல் அளவிடப்பட்டது, version 3.2, fast track 2000 project)
Thumb
2000ஆம் ஆண்டிற்கான நிலப்பயன்பாடு மாற்றத்தை உள்ளடக்கிய நாடுவாரியாக ஒவ்வொருவருக்கான பைங்குடில் வாயு உமிழ்வுகள்.

ஏறக்குறைய 1750ஆம் ஆண்டிலிருந்து மனிதச்செயல் காபனீரொக்சைட்டுடன், ஏனைய பைங்குடில் வளிமங்களின் செறிவினை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது வளிமண்டலத்தில் உள்ள காபனீரொக்சைட்டின் செறிவு, தொழிற்துறை காலத்திற்கு (pre-industrial) முன்னராக இருந்ததைவிட தற்போது காபனீரொக்சைட்டின் செறிவு 100 ppm அதிகமாக உள்ளது.[33] மனிதச்செயல் மூலம் கிடைக்கும் காபனீரொக்சைட்டைவிட இயற்கையாகக் கிடைக்கும் காபனீரொக்சைட்டு 20 மடங்கு அதிகம்,[34] ஆனால் சில ஆண்டுகளில் பொதுவாக அதிகரித்த காபனீரொக்சைட் செறிவானது, இயற்கை மூலங்கள், தாவரங்கள் மற்றும் கடல்வாழ் மிதவைவாழிகள் போன்றவற்றின் ஒளிச்சேர்க்கையால் நிகழும் கார்பன் கூட்டுப்பொருள் தயாரிப்பு போன்ற செயற்பாடுகளால் குறைக்கப்பட்டு சமநிலையாக்கப்படும். இச்சமநிலையின் விளைவாக, அதிகபட்ச உறைபனி காலத்தின் முடிவிற்கும், தொழிற்துறைக் காலத்தின் தொடக்கத்திற்கும் இடையிலான கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு காபனீரொக்சைட்டின் செறிவு 260ppm இற்கும், 280ppm இற்கும் இடையில் இருந்து வந்தது.[35]

பைங்குடில் வளிமங்களின் அளவினை அதிகரிப்பது போன்ற, மனிதச் செயல் மூலமான சூடேற்றல், பல இயற்பியல் மற்றும் உயிரியல் அமைப்புகளில் கவனிக்கத்தக்க விளைவினை ஏற்படுத்தியுள்ளது.[36] இந்த புவி சூடாதலானது பல வேண்டத்தகாத விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகின்றது. கடல்மட்டம் உயர்தல்[37], அதிகளவு பாதிப்புத் தரும் காலநிலை நிகழ்வுகள் நடைபெறுவதுடன், அவை அதிகளவிலும் நிகழ்தல்[37], உயிரியல் பல்வகைமை இழப்பு[38], வேளாண்மை உற்பத்தியில் வீழ்ச்சி[38] போன்ற பல பாதிப்புக்கள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. புதியநீர் ஆதாரங்கள், தொழிற்சாலை, உணவு மற்றும் உடல் நலன் போன்ற பல்வேறு விஷயங்களை சூடேற்றுதல் பாதிப்பதாக அமைகிறது.[39]

மனிதச் செயலால் விளையும் பைங்குடில் வளிமங்களின் முக்கிய மூலங்களாவன:

  • தொல்படிவ எரிபொருட்கள் எரிக்கப்படுதல் மற்றும் காடழித்தல் செயல்களில் ஏற்படும் அதிக அளவு காபனீரொக்சைட்டு செறிவு. நிலப் பயன்பாட்டு மாற்றம் (முக்கியமாக வெப்பமண்டலங்களில் காடழித்தல்) மனிதச்செயலால் ஏற்படும் மொத்த CO
    2
    வெளியேற்றத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு காரணமாகிறது.[35]
  • கால்நடைகளின் குடலில் நிகழும் நொதித்தல் செயற்பாடு, மற்றும் உர மேலாண்மை,[40] நெல் அரிசி பயிரிடும் பண்ணை, நிலப்பயன்பாடு மற்றும் புஞ்சைநில மாற்றங்கள், குழாய்வழி இழப்புகள், மற்றும் நிலவெளியேற்று வழிகளை மூடுதல் ஆகியவை ஏற்படுத்தும் மீதேன் வளிமண்டல செறிவு. நொதித்தல் முறையை அதிகரித்தும், குறிவைத்தும் செயலாற்றும் கழிவுப்பொருள் தேக்கத்தை வெளியேற்றும் பல புதிய முறைகளிலிருந்துகூட வளிமண்டல மீத்தேன் கிடைக்கிறது.
  • குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் க்ளோரோஃப்ளூரோகார்பன்கள் (CFCs), மற்றும் தீயணைப்பான் முறைமைகளில் பயன்படுத்தப்படுவதும், அவற்றின் உற்பத்தியின்போது உருவாவதுமான ஹாலோன்களும் பைங்குடில் வளிமங்களைக் கூட்டுகின்றன.
  • அதிக நைட்ரஸ் ஆக்சைடு (N2O) செறிவினை கொடுக்கும், உரப் பயன்பாடுகளை உள்ளடக்கிய, விவசாயச் செயல்பாடுகள்.

தொல்படிவ எரிபொருள் எரிப்பதன் மூலம் கிடைக்கும் CO
2
க்கான மூலங்கள் ஏழு, 2000–2004 ஆம் ஆண்டுகளில் அவற்றின் பங்களிப்பின் சதவீதத்தின் அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[41]

மேலதிகத் தகவல்கள் எரிக்கப்படும் மூலங்கள், பங்களிப்பு (%) ...

ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) பைங்குடில் வளிமங்களைப் பயன்படுத்தும் பிரிவுகளில் கீழ்க்குறிப்பிட்டுள்ளவற்றை வரிசைப்படுத்தியுள்ளது: தொழிற்சாலை, போக்குவரத்து, தங்குமிடம், வணிகம் மற்றும் விவசாயம்.[42] தனிபட்ட நபரின் பைங்குடில் வளிம வெளியேற்றத்திற்கான முக்கிய மூலங்களாக சூடேற்றுதல், குளிரூட்டுதல், மின் உபயோகம் மற்றும் போக்குவரத்து ஆகியவை அடங்கும். வீட்டு கட்டும்போது, கட்டட அமைப்பில் கடத்தாப் பொருள்கள் பயன்பாட்டை அதிகரித்தல், புவிவெப்ப உறிஞ்சு குழல்கள் மற்றும் குறுகிய ஒளிர் விளக்குகளை பொருத்துதல், மற்றும் ஆற்றல் சேமிக்கும் திறன்கொண்ட வாகனங்களைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவை, அதனையொத்த பாதுகாத்தல் முறைகளில் அடங்கும்.

காபனீரொக்சைட்டு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் புளோரின் கலந்த வளிமங்கள் (கந்தக ஹெக்சாஃப்ளோரைடு (SF6), ஐதரோஃப்ளூரோகார்பன்கள் (en:HFC), பெர்ஃப்ளூரோகார்பன்கள் (en:PFC)) ஆகியவை மனிதச் செயற்பாட்டால் வெளிவிடப்படும் முக்கிய பைங்குடில் வளிமங்களாகும். இந்த வளிமங்களின் அளவு 2005ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த Kyoto Protocol international treaty யின் கீழ் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கப்படுகின்றது.[43]

க்ளோரோஃப்ளூரோகார்பன்கள் (en:CFCகள்) பைங்குடில் வளிமங்களாக இருப்பினும், அவை புவி வெப்பத்திற்கான நேரடிப் பங்களிப்பைவிட ஓசோன் குறைவுக்கு காரணமாக அமைவதனால், அதனைக் கட்டுப்படுத்தும் சீர்முறை Montreal Protocol இன் கீழ் வருகின்றது. ஊடகங்கள் ஓசோன் இழப்பினையும், பைங்குடில் விளைவினால் ஏற்படும் புவி சூடாதலையும் சேர்த்துக் குழப்பிக் கொண்டாலும், ஓசோன் இழப்பின் பங்கு இங்கு குறைவாகவே இருக்கின்றது என்பதைக் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் நாள், ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (en:EPA) "பைங்குடில் வளிமங்கள் பொது சுகாதாரத்தையும் அமெரிக்க மக்களின் நலனையும் பயமுறுத்துகிறது" எனக்கூறி, பைங்குடில் வளிமங்கள் பற்றிய சில கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. இக்கண்டுபிடிப்பு கையோடோ ப்ரோடோகாலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு பைங்குடில் வளிமங்களுக்கும் பொருந்தும்: காபனீரொக்சைட்டு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஹைட்ரோஃப்ளுரோகார்பன்கள், பெர்ஃப்ளுரோகார்பன்கள், மற்றும் கந்தக ஹெக்சாஃப்ளோரைடு என்பவையே அந்த ஆறு பைங்குடில் வளிமங்களுமாகும்.[44][45]

Remove ads

நீராவியின் பங்கு

Thumb
பௌல்டர், கொலொராடோவில் ஸ்ட்ரடொஸ்ஃபியரில் நீராவியின் அதிகரிப்பு.

நீராவியானது பைங்குடில் விளைவில் முக்கிய பங்காற்றுகின்றது.

இது முகில்களற்ற தெளிவான வானம் இருக்கையில் 36% முதல் 66% வரையான பைங்குடில் விளைவுக்கும், முகில்கள் இருக்கையில், 66% முதல் 85% வரையான பைங்குடில் விளைவுக்கும் காரணமாவதாக அறியப்பட்டுள்ளது[18]. நீராவியின் செறிவு இடத்திற்கிடம் மாறுபட்டாலும், மனிதச் செயற்பாட்டால் நீராவியின் அளவில் பெரிய மாற்றம் ஏற்படுவதில்லை. நீர்ப்பாசன நிலங்கள் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே நீராவியின் இடம்சார் செறிவு மனிதச் செயற்பாட்டால் சிறிது மாற்றமடையலாம். வளிமண்டல நீராவியின் செறிவு மிகவும் மாறுபட்டுக் கொண்டிருக்கும். இந்த மாறுபாட்டுக்கு முக்கிய காரணம் வெப்பநிலையாகும். மிகவும் குளிரான இடங்களில்/நேரங்களில் நீராவியின் செறிவு மிகவும் குறைவாகவும், வெப்பநிலை கூடிய இடங்களில்/நேரங்களில் நீராவியின் செறிவு அதிகமாகவும் இருக்கும். குளிர் இடங்களில் 0.01 % வரையும், வெப்பநிலை 32oC யில் நிரம்பல் நிலையில் இருக்கும் வளிமத்தில், 3 % வரையும் நீராவியின் செறிவு இருக்க முடியும்[46].

இருப்பினும்,மேக மூட்டத்தாலான பைங்குடில் விளைவால் ஏற்படும் வெப்பம், பகுதியாகவாவது, பூமியின் எதிரொளிதிறன் மாற்றத்தால் மட்டுப்படுத்தப்படுகிறது. NASA கூற்றின்படி, "வளிமண்டலத்தில் மேகங்கள் இல்லாமல் இருப்பின் அமையும் வெப்பநிலையைவிட அனைத்து மேகங்களாலும் ஏற்படும் விளைவால் பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சியாக உள்ளது." ({0}NASA மேகங்களும் வெப்பக்கதிர்வீச்சும்{/0} தொகுப்பிலிருந்து). சுற்றுச்சூழல் உடல்நல மைய தேசிய பாதுகாப்பு குழுவின் கூற்றுப்படி, நீராவி வளிமண்டலத்தில் 2% உள்ளது.

காபனீரொக்சைட்டு, மீத்தேன் பல ஆண்டுகள் கூட வளிமண்டலத்தில் நிலைத்திருக்கையில், நீராவி மூலக்கூறுகள் ஒரு சில நாட்கள், சராசரியாக 9 நாட்கள், மட்டுமே வளிமண்டலத்தில் இருக்கும்[47]. நீராவியானது ஏனைய பைங்குடில் வளிமங்களின் அளவினை மாற்றுவதில் தொடர்புடையதாக இருக்கும்.

க்ளாசியஸ்-க்ளாபெய்ரான் தொடர்பு (en:Clausius–Clapeyron relation), காற்று சூடாகும்போது, ஓரலகு கனவளவில் அதிக நீராவியை தக்கவைத்துகொள்ள முடியும் என நிறுவியுள்ளது. இதுவும் மற்ற அடிப்படைக் கருத்துக்களும், சாரீரப்பதன் மாறாமல் இருக்குமாயின் மற்ற பைங்குடில் வளிமங்களின் செறிவு அதிகரிக்கும்போது ஏற்படும் வெப்பம் காரணமாக, நீராவியின் செறிவையும் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கிறது. நீராவியும் ஒரு பைங்குடில் வளிமமாக இருப்பதனால், அது வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். வெப்பமாதல் போக்கு மேலும் வெப்பமாக்குதலில் முடியும்போது, அம்முறையானது "நேர் பின்னூட்டம்" என குறிப்பிடப்படுகிறது; அதாவது மூல வெப்பத்தை அதிகரிக்கிறது. வெப்பமாதல் போக்கு குளிர்விப்பதில் முடியுமாயின், அம்முறையானது "எதிர் பின்னூட்டம்" எனக் குறிப்பிடப்படுகிறது; அதாவது மூல வெப்பத்தைக் குறைக்கிறது[48]. நீராவி ஒரு பைங்குடில் வளிமமாக இருப்பதாலும், குளிர்காற்றைவிட வெப்பக்காற்று அதிக நீராவியைத் தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்பதாலும், முக்கியமான நேர் பின்னூட்ட விளைவில் நீராவி பங்கேற்கிறது. வேறு சில எதிர் பின்னூட்டம் கொடுக்கும் செயற்பாடுகள், இதற்கு எதிராகச் செயற்படுவதனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் புவியின் வெப்பச் சராசரியை அதிகரிக்காமல் வைத்திருக்கின்றது. எனவே புவி வெப்பச் சராசரியானது, ஒரு புதிய அளவில் நிலைப்படுத்தப்படுகின்றது. (முக்கியமான ஒரு எதிர் பின்னூட்டமானது, அகச்சிவப்புக் கதிர் போன்ற அலைநீளம் கூடிய கதிர்வீச்சின் பின்னூட்ட விளைவாகும்[49]. Stefan–Boltzmann law இன்படி, ஒரு பொருளின் வெப்பம் அதிகரிக்கும்போது, வெளியாகும் கதிர்வீச்சு அதன் வெப்ப எண்ணின் நான்கு அடுக்காக உயர்கிறது. அதாவது E = σT4; இங்கே E யானது ஓரலகு பரப்பிலிருந்து ஒரு நொடியில் வெளியேற்றப்படும் கதிர்வீச்சு வெப்ப ஆற்றல், σ யானது ஒரு மாறிலி, T பொருளின் வெப்பம் கெல்வின் அலகில்[50].ஏனவே புவியின் வெப்பம் உயரும்போது, அதனால் வெளியேற்றப்படும் கதிர்வீச்சும் அதிகரிக்கும். இந்தக் கதிர்வீச்சு புவியின் மேற்பரப்பை விட்டு வெளியேறுவதனால், புவியின் வெப்பம் குறையும். இதுவே எதிர்ப் பின்னூட்டம் எனப்படுகின்றது.[49])

முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டிய மற்றவற்றில், வளிமண்டலத்தில் வெளி மற்றும் நேரம் ஆகியவற்றில் மிக அதிகமாக வேறுபடும் செறிவைக் கொண்டுள்ள பைங்குடில் வளிமமும், திரவம் மற்றும் திண்மம் ஆகிய இரண்டு நிலைகளிலும் இருக்கும் ஒரே ஒரு பொருளும், மூன்று நிலைகளிலும் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அடிக்கடி மாறியோ அல்லது நிலைகளில் கலந்தோ இருப்பதுமான பொருளும் நீராவி ஆகும். இவ்வகை நோக்கில் மேகங்கள், ஒரே அல்லது வேறுபட்ட வெப்ப நிலையில் இருக்கும்போது காற்று மற்றும் நீராவியின் அடர்த்தியின் அகச்செயல்கள், நீர் ஆவியாதல் மற்றும் ஆவியிலிருந்து உறைதல் நிகழ்வுகளின்போது உறிஞ்சுதல் மற்றும் வெளிவிடப்படும் இயங்கு சக்தி, மற்றும் ஆவியின் குறைவுபட்ட அழுத்தம் சார்ந்த செயல்பாடுகள் ஆகியவை உள்ளன. எடுத்துக்காட்டாக, ITCZல் பெய்யும் மழையால் வெளியிடப்படும் உள்ளுறை வெப்பம் வளிமண்டல பரவலை வேகப்படுத்துகிறது, மேகங்கள் வளிமண்டலத்தின் எதிரொளிதிறன் நிலைகளை மாற்றுகின்றன, மற்றும் சமுத்திரங்கள் மதிப்பிடப்பட்டுள்ள மேற்பரப்பு வெப்பநிலை 67 °செ.க்கு பைங்குடில் விளைவைக் குறைக்கும் ஆவி குளிரூட்டலை கொடுக்கிறது.

Remove ads

நேரடியான பைங்குடில் வாயு உமிழ்வுகள்

அண்டார்க்டிக்காவில் உள்ள பனி உள்ளகம் பயன்படுத்திப் பனிப் பிரதேசங்களில் எடுக்கப்பட்ட அளவுகள், தொழிற்சாலைகள் தோன்றுவதற்கு முன்னால், வளிமண்டல CO2 அளவு, கன அளவில் (ppmv) மில்லியனுக்கு 270-280 பாகங்கள் இருந்ததாகவும், கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக 260க்கும் 280க்கும் இடையிலேயே இருந்தது எனவும் காட்டுகின்றது[51]. வளிமண்டலத்தில் உள்ள CO2 செறிவு 1900 களிலிருந்து அண்ணளவாக 35 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், 2009ஆம் ஆண்டில் கன அளவில் மில்லியனுக்கு 280 பங்கிலிருந்து, மில்லியனுக்கு 387 பங்காக உயர்ந்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. வழிக்காற்று பனிக்கட்டியில் பிடிக்கப்படுதல் (பனிக்கட்டியில் உள்ளத் துவாரங்கள் நிதானமாக மூடி நீர்க்குமிழிகளை அடைபனிக்குள் ஆழ்ந்து உருவாக்க) மற்றும் ஒவ்வொரு மாதிரி பனிக்கட்டியின் பகுத்தறியப்பட்ட கால அளவு ஆகியவற்றால் இவ்வளவுகள் ஆண்டு அல்லது பத்தாண்டுகள் நிலைகளைக் குறிப்பதற்கு மாறாக ஒரு சில நூற்றாண்டுகள்வரையிலான சுற்றுச்சூழல் செறிவு சராசரிகளைக் குறிக்கின்றன.

இவ் வகையான கண்டுபிடிப்புகள் சரியான CO2 மாற்றங்களை அளவிடுதல் தவிர, மாசுபடுதல் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது எனக் கூறியிருப்பினும், உயர் பகுதிறன் இலைத்துளைச் சுட்டெண் (SI)[52] என்ற அளவீட்டைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட வேறொரு ஆய்வு, ஏழு முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கார்பனீரொக்சைட்டு 300 ppmக்கு மேலான அளவில் இருந்ததாகக் கூறுகின்றது[53][54][55].

Thumb
சமீப வருடாவருட சுற்றுச்சூழல் CO2 அதிகரிப்பு.

தொழில் புரட்சி தொடங்கியதிலிருந்து, பெரும்பாலான பைங்குடில் வளிமங்களின் செறிவு அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, கார்பனீரொக்சைட்டின் செறிவு 36%அளவில் அதிகரித்து, 380 ppmv அளவிற்கு உயர்ந்துள்ளது. அதாவது தற்கால நிலையில், தொழில் காலத்திற்கு முன் நிலையைவிட 100 ppmv அதிகமாக கார்பனீரொக்சைட்டின் செறிவு உள்ளது. முதல் 50 ppmv அதிகரிப்பு, தொழில் புரட்சி ஆரம்ப காலத்திலிருந்து 1973ஆம் ஆண்டுவாக்கில் வரையான, சுமார் 200ஆண்டுகளில் ஏற்பட்டது என்றும், அடுத்த 50 ppmv அதிகரிப்பு, 1973ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான சுமார் 33 ஆண்டுகளில் ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது.

சமீபத்திய புள்ளிவிவரம்கூட செறிவு மிக அதிக வேகத்தில் உயர்வதைக் காட்டுகிறது. 1960 ஆண்டுகளில், ஆண்டுச் சராசரி உயர்வு 2000ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரை இருந்ததில் 37% மட்டுமே இருந்தது.[56]

மனிதச் செயல்பாட்டால் உற்பத்தியான, கார்பனீரொக்சைட்டு தவிர்ந்த ஏனைய பைங்குடில் வளிமங்களும் அவற்றின் அளவிலும் மற்றும் அவை அதிகரிக்கும் வேக வீதத்தில் இதுபோன்ற அதிகரிப்பினைக் காட்டுகின்றன. கணினி இணைப்பில் வளிமண்டல வேதியியல் நோக்கு அடிப்படை புள்ளிவிவரங்கள் பல வகையில் கிடைக்கின்றன.

மேலதிகத் தகவல்கள் வாயு, கன அளவு அதிகரிப்பில் (ppm) தற்கால (1998) அளவு ...
மேலதிகத் தகவல்கள் வாயு, தற்கால (1998) கன அளவில் அளவு ...

(ஆதாரம்: IPCC வெப்பக்கதிர்வீச்சு வேக அறிக்கை 1994 திருத்தப்பட்டது (1998வரை) IPCC TARஆல் அட்டவணை 6.1[88][89] ).

சமீபகால மாறுதல் மற்றும் உமிழ்வு வீதங்கள்

Thumb
2000ஆம் ஆண்டில் நிலப்பயன்பாடு மாற்றத்தை உள்ளடக்கிய பைங்குடில் வாயு திண்மம்.
Thumb
தற்கால மனிதச்செயலால் ஏற்படும் வளிமண்டலத்துக்கான ஒவ்வொருவரின் பொறுப்பு [90]
Thumb
பெரும்பாலான பைங்குடில் வாயு போக்குகள்

2000ஆம் ஆண்டிலிருந்து, CO2 உமிழ்வின் அதிவேக அதிகரிப்பு 1990ஆம் ஆண்டுகளிலிருந்த ஆண்டுக்கு 1.1% என்பதிலிருந்து ஆண்டுக்கு 3%க்கும் அதிகமாக உயர்ந்ததற்கான காரணம், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் கார்பன் செறிவில் போதிய கவனம் செலுத்தாதேயாகும். மனிதச்செயலாலான ஒட்டுமொத்த CO2ல் 3/4 பங்குக்கு இப்போதும் வளர்ந்த நாடுகள் காரணமாகின்றன.

சக்தி திறனில் ஏற்பட்டுள்ள நிலையான வளர்ச்சியின் காரணமாகவும், அதிவேக மின்சாரப் பயன்பாடு காரணமாகவும், நேரிடையாக தொழிற்சாலையிலிருந்து பெறப்படும் உமிழ்வுகள் குறைந்துள்ளது. மின்சார உற்பத்தி சார்ந்த மறைமுக உமிழ்வுகளை கணக்கில் கொண்டால் ஐரோப்பவில் தொழிற்சாலையிலிருந்து பெறப்படும் உமிழ்வுகள் 1994ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய நிலையானதாக உள்ளது.[57]

ஆசியா

சீனா முன்னோடியாக உள்ள ஆசிய பொருளாதாரத்தில் தொழில் வளர்ச்சியின் ஒரு அறிகுறியாக விளங்கும் வளிமண்டலத்தின் CO2ன் அளவு அதிகரித்துக்கொண்டே உள்ளது. பின்தங்கிய உள் மாநிலங்களில் பழைய முறையிலான சக்தி ஆலைகளை வேகவேகமாக கட்டப்பட்டதன் காரணமாக, 2000–2010 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவில் கார்பனீரொக்சைட்டின் உமிழ்வுகள் 600 மெ.ட.. அளவில், பெருமளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையும் பார்க்க: en:Asian brown cloud

ஐக்கிய அரசு

ஐக்கிய இராச்சியம் கார்பனீரொக்சைட்டு உமிழ்வுகளை 2010ஆம் ஆண்டில், 1990ஆம் ஆண்டில் இருந்ததைவிட 20% குறைப்பதாக இலக்கு வைத்தது. ஆனால் அந்நாட்டின் புள்ளிவிபரப்படி அந்த இலக்கிலிருந்து ஏறக்குறைய 4% குறையும் எனத் தெரிகிறது.[58]

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 1990ஆம் ஆண்டைவிட 2005ஆம் ஆண்டில் 16.3%அதிக அளவு பைங்குடில் வளிமங்களை உமிழச்செய்தது. நெதர்லாந்து சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஏஜென்சியின் ஆரம்பகால மதிப்பீட்டின்படி, மதிப்பிடப்பட்ட ஆண்டு உற்பத்தி 6200 மெகாடன்கள் என்ற அளவில் 2006ஆம் ஆண்டு முதல் CO2 உமிழ்வுகளை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது. 5,800 மெகாடன்கள் என்ற அளவில் சீனாவுக்கு அடுத்ததாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் வருகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் CO2 உமிழ்வுகள் 2006ஆம் ஆண்டில் 1.4% குறைந்த அதே வேளையில், 2005ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, சீனாவின் தொல்பொருள் CO2 உமிழ்வுகள் 2006ஆம் ஆண்டில் 8.7% அதிகரித்தது. அதன் மதிப்பீடு நிச்சயமற்ற அளவிலான CO2 சில மூலாதாரங்களை[59] உள்ளடக்கியதல்ல என அந்த ஏஜென்சி குறிப்பிடுகிறது. இப்புள்ளிவிவரங்கள், வான்வழிப் போக்குவரத்து சார்ந்த புள்ளிவிவரங்கள் சேராத தேசிய CO2 புள்ளிவிவரங்களைச் சார்ந்துள்ளன. பூமியின் வளிமண்டலத்தில் உள்ள CO2 ஒப்பிடும்போது இந்த டன்னேஜ்கள் குறைவாகும், அவை குறிப்பிடும் அளவுக்கு முன் தொழிற்கால அளவைவிட அதிகமாகும்.

இதனையும் பார்க்க: en:Climate change in the United States

பல்வேறு எரிபொருள்களின் CO2 உமிழ்வு ஒப்பீடு

மேலதிகத் தகவல்கள் எரிபொருள் பெயர், CO2 உமிழ்வு (பவுண்டுகள்/106 பிரிட்.யூனிட்.) ...
Remove ads

வளிமண்டலத்திலிருந்தும் புவி வெப்பமாதலிலிருந்தும் நீக்குதல்

இயற்கை முறைகள்

பைங்குடில் வாயுக்கள் பல்வேறு முறைகளில் வளிமண்டலத்திலிருந்து நீக்கப்படலாம்;

  • ஒரு இயல்பியல் மாற்றத்தின் விளைவாக (சுருக்குதலும் வீழ்படிதலும் வளிமண்டலத்திலிருந்து நீராவியை நீக்குகிறது)
Thumb
இணையதள சர்வர்களால் ஏற்படும் உமிழ்வுகளை [107] சரிசெய்ய ஏற்படுத்தப்பட்ட நெதர்லாண்ட்சில் உள்ள "இணையதள காடு"
  • வளிமண்டலத்திற்குள் ஏற்படும் இரசாயன மாற்றங்களின் விளைவாக. எடுத்துக்காட்டாக, மீதேன் இயற்கையில் உள்ள ஹைட்ராக்சைல் ரேடிகல், OH· மாற்றங்கள் மூலமாகஆக்சிஜனோடு சேர்க்கப்பட்டு தரம் குறைக்கப்படுகிறதுCO
    2
    , மேலும் மீதேன் ஆக்சிஜனோடு சேர்வதால் ஏற்படும் நீராவி (CO
    2
    மீதேனின் புவி வெப்பமயமாதலில்) சேர்க்கப்படுவதில்லை. வளிமண்டல தூசுப்படலத்தில் நிகழும் திரவ மற்றும் திட நிலைப் பொருள்களின் இரசாயன நிகழ்வுகள் மற்ற இரசாயன மாற்றங்களில் அடங்கும்.
  • கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் மற்ற விஷயங்களுக்கும் இடையில் நிகழும் ஒரு இயல்பியல் மாற்றத்தின் விளைவாக. வளிமண்டல வாயுக்கள் கடலில் கலப்பது என்பது ஒரு உதாரணம் ஆகும்.
  • கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் மற்ற விஷயங்களுக்கும் இடையில் இடைமுகப்பில் நிகழும் ஒரு இரசாயன மாற்றத்தின் விளைவாக. தாவரங்களின் ஒளிச்சேர்க்கையால் குறைக்கப்படுகின்றதும், மற்றும் கடலில் கரைந்தபிறகு கார்பானிக் அமிலம் மற்றும் பைகார்பனேட் மற்றும் கார்பனேட் அயான்கள் ஆகியவற்றை உருவாக்க மாற்றங்களில் செயல்படுவதற்குமான நிகழ்வுகளுக்கு இது ஒரு சான்றாகும்CO
    2
    (கடல் அமிலமாதல் என்பதை பார்க்கவும்).
  • ஒரு ஒளி வேதிம மாற்றத்தின் விளைவாக. ஓசோன் மீது தீய விளைவினை ஏற்படுத்தும் Cl· மற்றும் F· ஆகியவற்றை கட்டுப்பாடற்ற ரேடிகல்களாக மீ வளி மண்டலத்தில் வெளிவிடுகின்ற UV(அல்ட்ரா வைலட்) ஒளியால் ஹாலோகார்பன்கள் தொடர்பின்மையாகிறது. (ஹாலோகார்பன்கள் பொதுவாக வேதிமாற்றங்களால் வளிமண்டலத்தில் மறைந்து போகாத அளவுக்கு நிலைப்புத்தன்மை பெற்றது)

வளிமண்டல ஆயுள்

ஒன்பது நாட்கள் தங்கக்கூடிய நீராவிமட்டுமல்லாது, பெரும்பாலான பைங்குடில் வாயுக்கள் நன்கு கலக்கப்படுகின்றன, வளிமண்டலத்திலிருந்து பிரிந்து செல்ல பல ஆண்டுகாலத்தை எடுத்துக்கொள்கின்றன. பைங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்திலிருந்து பிரிந்து செல்ல எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்பதை மிகச்சரியாகத் தெரிந்துகொள்வது சுலபமானதல்ல என்றாலும், முக்கியமான பைங்குடில் வாயுக்களுக்கன கால மதிப்பீடுகள் உள்ளன. ஜேகப் (1999)[112], எக்ஸ் எனும் ஒரு வளிமண்டல உயிரியின் வாழ்நாளை, ஒருபெட்டி வடிவில், எக்ஸின் ஒரு மூலக்கூறு பெட்டியில் தங்கும் சராசரி நேரமாக வரையறுக்கிறார்.

கணிதவாயிலாக, பெட்டியிலிருந்து எக்ஸ் பாய்தலின் கூட்டுத்தொகையாக உள்ள, பெட்டியில் உள்ள எக்ஸின் பொருள்திணிவு m (கிகி.ல்)க்கும் அது நீங்கும் வேகத்திற்கும் உள்ள விகிதமாக, வறையறுக்கப்படலாம்

(), Xன் இரசாயன இழப்பு L !! மற்றும் X ன் படிதல் D !! (அனைத்தும் கிகி/வினாடி):(அனைத்தும் கிகி/வினாடி): [60]

எனவே வளிமண்டலத்தில் ஒருவகை உயிரிகளின், சுற்றுச்சூழலில் அதன் செறிவினை அதிகரிக்கும், வாழ்நாள் சமநிலையைத் திரும்ப ஏற்படுத்தத் தேவையான கால அளவை அளவிடுகிறது. மண், சமுத்திரங்கள் மற்றும் வேறு தண்ணீர், அல்லது தாவரங்கள் மற்றும் வேறு உயிரினங்கள் போன்ற உறிஞ்சு பொருள்களில், அதிகமாக உள்ளதை பின்னணிச் செறிவாகக் குறைக்கும், தனிப்பட்ட அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் இழக்கப்படலாம் அல்லது வீழ்படிவாகலாம். இதை அடைவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் சராசரி நேரம் வாழ்நாள் சராசரி எனப்படும். ஒன்றின் வளிமண்டல வாழ்நாள்CO
2
பெரும்பாலும் ஒரு சில ஆண்டுகளாக தவறுதலாகக் குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் அது எந்தவொரு மூலக்கூறும், சமுத்திரம், ஒளிச்சேர்க்கை, அல்லது வேறு முறைகளில் கலந்து பிரிக்கப்படுவதற்கு முன்பாக வளிமண்டலத்தில் தங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்CO
2
என்பதாலாகும். . இருப்பினும், மற்ற தேக்கிகளிலிருந்து வளிமண்டலத்துக்கு சமநிலைப் படுத்துவதை இது கருத்தில் கொள்வதில்லை. அது, வெறும் நீக்குதல் முறைகளால் மட்டுமல்லாது[சான்று தேவை] வளிமண்டல வாழ்நாளை நிர்ணயிக்கும் எல்லா ஆதாரங்கள் மற்றும் மூழ்கடிக்கும் பொருள்களால் ஏற்படும் பல்வேறு பைங்குடில் வாயுக்களின் நிகர செறிவு மாற்றங்களாகும்.

புவி வெப்பமயமாதல் திறன்

புவி வெப்பமயமாதல் திறன் (GWP) ஒரு பைங்குடில் வாயுவாக மூலக்கூற்றின் திறன், அதனுடைய வளிமண்டல வாழ்நாள் ஆகிய இரண்டையும் சார்ந்துள்ளது. புவி வெப்பமயமாதல் திறன் (GWP) அதே பொருள்திணிவு ள்ள ஒன்றோடுCO
2
ஒப்பிடப்பட்டு அளக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு மதிப்பீடு செய்யப்படுகிறது. இவ்வாறாக, ஒரு வாயு குறைந்த கால அளவில் (20 ஆண்டுகள் என வைத்துக்கொள்வோம்) ஆனால் குறைந்த கால வாழ்நாளையேக்கொண்டு அதிக புவி வெப்பமயமாதல் திறனை (GWP) பெற்றிருந்தால், அவ்வாயு 20 ஆண்டு கால அளவில் அதிக அளவு புவி வெப்பமயமாதலையும், ஆனால் 100 ஆண்டு கால அளவில் குறைந்த அளவு புவி வெப்பமயமாதல் திறனையும் பெற்றிருக்கும். எதிர்மாறாக, ஒரு மூலக்கூறு CO2ஐ விட அதிக சுற்றுச்சூழல் வாழ்நாளைப் பெற்றிருப்பின் அதன் GWP, கணக்கில் கொள்ளப்படும் கால அளவோடு அதிகரிக்கும்.

பல பைங்குடில் வாயுக்களின் சுற்றுச்சூழல் வாழ்நாள் மற்றும் புவி வெப்பமயமாதல் திறன் (GWP) ஆகியவற்றின் உதாரணங்களில் கீழ்வருவன அடங்கும்:[61]

  • கார்பன் டைஆக்சைடு மாறக்கூடிய வளிமண்டல வாழ்நாளைக் கொண்டுள்ளது, அதைச் சரியாகக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது.[62] சமீபகால ஆய்வு, தொல்பொருள் எரிபொருள்களை எரிப்பதன் மூலம் அதிக அளவு வளிமண்டல உள்ளீட்டிலிருந்து பெறப்படுதல்CO
    2
    பல பத்தாயிரம் ஆண்டுகளின் சக்திவாய்ந்த வாழ்நாளைக் கொடுக்கும், என குறிப்பிடுகிறது. கார்பன் டைஆக்சைடு எல்லா காலத்திலும் 1ஐ GWPஆகக் கொண்டுள்ளது என வறையறுக்கப்பட்டுள்ளது.
  • மீதேன் 12 ± 3 ஆண்டுகள் சுற்றுச்சூழல் வாழ்நாளையும் 20 ஆண்டுகளாக 72ஐ, 100 ஆண்டுகளாக 25ஐ, 500 ஆண்டுகளாக 7.6ஐ GWPஆகவும் கொண்டுள்ளது. மீதேன் சுற்றுச்சூழலின் இரசாயன மாற்றங்களின் வாயிலாக தண்ணீராகவும் CO2 ஆகவும் குறைக்கப்படுவதால் நீண்ட காலஅளவில் புவி வெப்பமயமாதல் திறன் (GWP) குறைகிறது.
  • நைட்ரஸ் ஆக்சைடு 114 ஆண்டுகள் வளிமண்டல வாழ்நாளையும், 20ஆண்டுகளில் 289, 100ஆண்டுகளில் 298 மற்றும் 500 ஆண்டுகளில் 153 புவி வெப்பமயமாதல் திறன் (GWP) பெற்றுள்ளது.
  • CFC-12 100 ஆண்டுகள் வளிமண்டல வாழ்நாளையும், 20ஆண்டுகளில் 11000, 100ஆண்டுகளில் 10900 மற்றும் 500 ஆண்டுகளில் 5200 புவி வெப்பமயமாதல் திறன் (GWP) பெற்றுள்ளது.
  • HCFC-22 12 ஆண்டுகள் வளிமண்டல வாழ்நாளையும், 20ஆண்டுகளில் 5160, 100ஆண்டுகளில் 1810 மற்றும் 500 ஆண்டுகளில் 549 புவி வெப்பமயமாதல் திறன் (GWP) பெற்றுள்ளது.
  • டெட்ராஃப்ளூரோமீதேன் 50,000 ஆண்டுகள் வளிமண்டல வாழ்நாளையும், 20ஆண்டுகளில் 5210, 100ஆண்டுகளில் 7390 மற்றும் 500 ஆண்டுகளில் 11200 புவி வெப்பமயமாதல் திறன் (GWP) பெற்றுள்ளது.
  • ஹெக்ஸாஃப்ளூரோஈதேன் 10,000 ஆண்டுகள் வளிமண்டல வாழ்நாளையும், 20ஆண்டுகளில் 8630, 100ஆண்டுகளில் 12200 மற்றும் 500 ஆண்டுகளில் 18200 புவி வெப்பமயமாதல் திறன் (GWP) பெற்றுள்ளது.
  • ஸல்ஃபர் ஹெக்ஸாஃப்ளோரைட் 3,200 ஆண்டுகள் வளிமண்டல வாழ்நாளையும், 20ஆண்டுகளில் 16300, 100ஆண்டுகளில் 22800 மற்றும் 500 ஆண்டுகளில் 32600 புவி வெப்பமயமாதல் திறன் (GWP) பெற்றுள்ளது.
  • நைட்ரஜன் ட்ரைஃப்ளோரைட் 740 ஆண்டுகள் வளிமண்டல வாழ்நாளையும், 20ஆண்டுகளில் 12300, 100ஆண்டுகளில் 17200 மற்றும் 500 ஆண்டுகளில் 20700 புவி வெப்பமயமாதல் திறன் (GWP) பெற்றுள்ளது.

CFC-12ன் உபயோகம் (சில அத்தியாவசியப் பயன்பாடுகள் தவிர), அதனுடைய ஓசோன் குறைதல் பண்புகள்[63] காரணமாக, இல்லாமல் போய்விட்டது. குறைந்த செயலாற்றல் உடைய HCFC-கூட்டுப்பொருள்கள் இல்லாமல் போனது 2030ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படும்.

வான் வழியாக நடைபெறும் பின்னம்

வான் வழியாக நடைபெறும் பின்னம்(AF) என்பது (எ.கா. ) ஒருகுறிப்பிட்ட காலத்திற்குப்பின் வளிமண்டலத்தில் தங்கியிருக்கும் ஒரு உமிழ்வின் விகிதம் ஆகும்.

கேனடெல்(2007)[64] ஆண்டு AFஐ ஒரு குறிப்பிட்ட ஆண்டின் வளிமண்டலத்தின்CO
2
அதிகரிப்புக்கும் அந்த ஆண்டின் மொத்த உமிழ்வுக்கும் உள்ள விகிதம் என வறையறுக்கிறது, மேலும் 2000 முதல் 2006ஆம் ஆண்டுவரை மனிதச்செயலால் ஏற்பட்ட மொத்த உமிழ்வின் சராசரி 9.1 PgC y−1ன் AF 0.45 எனக் கணக்கிடுகிறது. ஏனெனில் CO
2
கடந்த 50 ஆண்டுகளாக (1956–2006) AF ஆண்டுக்கு 0.25 ± 0.21%ஆக உயர்ந்துவந்துள்ளது.[64]

எதிர்மறை உமிழ்வுகள்

கார்பனைப் பிடித்து தேக்கிவைத்துள்ள உயிர்சக்தி, கார்பன் டைஆக்சைடு காற்றை பிடித்து வைத்தல், புவிபொறியியல் மற்றும் பைங்குடில் வாயு குறைதீர்த்தல் ஆகியவற்றைப் பார்க்கவும். '

பைங்குடில் வாயுக்களின் எதிர்மறை உமிழ்வுகளை உற்பத்தி செய்யும் எண்ணற்ற தொழில்நுட்பங்கள் உள்ளன. சுற்றுச்சூழலிலிருந்து கார்பன் டைஆக்சைடைப் பிரித்தெடுப்பனவற்றில் பரவலாகப் பகுத்தறியப்படுவது, நில அமைப்புகள் சார்ந்த கார்பனைப் பிடித்து தேக்கிவைத்துள்ள உயிர்சக்தி[65][66][67] மற்றும் கார்பன் டைஆக்சைடு காற்றை பிடித்து வைத்தல் [67] போன்றவை, அல்லது மண் சார்ந்த பையோகார் போன்றவையாகும்.[67] பல நீண்டகால சீதோஷ்ணநிலை அமைப்புகளில் கடுமையான சீதோஷ்ணநிலை மாற்றத்தைத் தவிர்க்க அதிக அளவிலான மனிதனால் உருவாக்கப்பட்ட எதிர்மறை உமிழ்வுகள் தேவை என்று IPCC குறிப்பிட்டுள்ளது.

Remove ads

தொடர்புடைய விளைவுகள்

Thumb
MOPITT 2000ஆம் ஆண்டின் உலக கார்பன் மோனோக்சைடு

தூய்மைப்படுத்தப்பவில்லை என்றால் அவற்றை அழித்துவிடும் சுற்றுச்சூழலின் உட்பொருள்களைத் தூய்மைப்படுத்துவதன் வாயிலாக (எ.கா.,ஹைட்ரோக்சைல் ரேடிகல், OH ) மீதேன் மற்றும் ட்ரோபோஸ்ஃபெரிக் ஓசோன் செறிவினை உயர்த்துவதன் மூலம் கார்பன் மோனோக்சைடு மறைமுக கதிர்வீச்சு விளைவைக் கொண்டுள்ளது. கார்பன்(கரி) உள்ள எரிபொருள்கள் அரைகுறையாக எரிக்கப்படும்போது கார்பன் மோனோக்சைடு உற்பத்தியாகிறது. [[வளிமண்டலத்தின் இயற்கை முறைகள் மூலமாக, கார்பன் டைஆக்சைடு|வளிமண்டலத்தின் இயற்கை முறைகள் மூலமாக, கார்பன் டைஆக்சைடு]] ஆக மாறுகிறது. கார்பன் மோனோக்சைடின் வளிமண்டல வாழ்நாள் ஒருசில மாதங்களேயாகும்[68], அதன் விளைவாக நீண்டகாலம் வாழும் வாயுக்களைவிட அது விண்வெளியில் அதிக மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது.

மற்றொரு முக்கியமான மறைமுக விளைவைக் கொண்டுள்ளது நேரிடையான கதிர்வீச்சு விளைவோடு ஓசோன் உருவாக்கலுக்கும் காரணமான மீதேன் ஆகும். இதன் விளைவாக மீதேனால் ஏற்படும் சீதோஷ்ணநிலை மாற்றம் முன்பு மதிப்பிட்டதைவிட குறந்தபட்சம் இரண்டு மடங்காகியுள்ளது என ஷிண்டெல் எட் அல். (2005)[69] வாதிடுகிறார்.

Remove ads

இதையும் பாருங்கள்

  • Atmospheric Chemistry Observational Databases for links to freely available data.
  • Atmospheric window
  • Attribution of recent climate change
  • உயிரி கார்பன்
  • Bio-energy with carbon capture and storage
  • List of countries by electricity production from renewable source
  • Carbon emissions by country
  • Carbon cycle
  • Carbon dioxide sink
  • Carbon Disclosure Project
  • Carbon emissions reporting
  • Carbon neutral
  • Carbon Dioxide Information Analysis Center
  • Carbon offset
  • Carbon credit
  • Clean Air Act
  • Climate Group
  • Integrated Carbon Observation System
  • Effects of global warming
  • Emission standard
  • Environmental accounting
  • Environmental agreements
  • European Climate Change Programme
  • External cost
  • Greenhouse debt
  • Greenhouse effect
  • Global Atmosphere Watch
  • Hydrogen economy
  • Low-carbon fuel standard
  • Massachusetts v. Environmental Protection Agency
  • North American Carbon Program
  • Norwegian Polar Institute
  • Physical properties of greenhouse gases
  • Radiative forcing
  • Regional Greenhouse Gas Initiative
  • Thailand Greenhouse Gas Management Organisation (Public Organisation)
  • Virgin Earth Challenge
  • Western Regional Climate Action Initiative
  • World energy resources and consumption
  • Zero carbon economy
  • Zero emission vehicle

புற இணைப்புகள்

கார்பன் டைஆக்சைடு உமிழ்வுகள்
மீதேன் உமிழ்வுகள்
கொள்கை மற்றும் நெறியூட்டல் (ஆலோசனை)
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads