பொந்தியான் மாவட்டம்

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

பொந்தியான் மாவட்டம்map
Remove ads

பொந்தியான் மாவட்டம் (ஆங்கிலம்: Pontian District); மலாய்: Daerah Pontian; சீனம்: 笨珍县; ஜாவி: فونتيان) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தின், தென் மேற்கில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு பொந்தியான் கிச்சில் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

விரைவான உண்மைகள் பொந்தியான் மாவட்டம்Pontian District Daerah Pontian, நாடு ...

இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு நகரங்களின் பெயர்களிலும் பொந்தியான் எனும் பெயர் பயன்படுத்தப்படுகிறது, பொந்தியான் பெசார் மற்றும் பொந்தியான் கிச்சில். அவற்றுள் பொந்தியான் கிச்சில் நகரம், பொந்தியான் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது.

இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் சதுப்பு நிலங்களால் ஆனவை. முக்கியத் தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது.

Remove ads

பொருளாதாரம்

பொந்தியான் மாவட்டம் மீன்பிடி, அன்னாசிப் பண்ணைகள் மற்றும் செம்பனை தோட்டங்களின் மையமாக இருந்தது. இருப்பினும் அண்மைய காலமாக விவசாயம், மீன்பிடி, தொழில்துறை மற்றும் சுற்றுலாத் துறையாக வளர்ச்சி கண்டு வருகிறது.[2]

இந்த மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள் இயற்கைச் சூழல் சுற்றுலா, மீன்பிடி, கடல்சார் மீன் வளர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் உணவு பதப்படுத்துதல்.[3]

நிர்வாகப் பகுதிகள்

பொந்தியான் மாவட்டம் 10 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

  • அப்பி அப்பி (Api-Api)
  • ஆயர் பாலோய் (Ayer Baloi)
  • ஆயர் மாசின் (Ayer Masin)
  • பெனுட் (Benut)
  • ஜெராம் பத்து (Jeram Batu)
  • பெங்காலான் ராஜா (Pengkalan Raja)
  • பொந்தியான் (Pontian)
  • ரிம்பா தெர்ஜுன் (Rimba Terjun)
  • செர்காட் (Serkat)
  • சுங்கை காராங் (Sungai Karang)
  • சுங்கை பீங்கான் (Sungai Pinggan)

தேர்தல் முடிவுகள்

மலேசியப் பொதுத் தேர்தல் 2022

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...

மலேசியப் பொதுத் தேர்தல், 2018

மலேசிய மக்களவையில் பொந்தியான் மாவட்டத்தின் தொகுதிகள்

மேலதிகத் தகவல்கள் #, தொகுதி ...

ஜொகூர் மாநிலச் சட்டமன்றம்

மலேசியப் பொதுத் தேர்தல், 2018

ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் பொந்தியான் மாவட்டப் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[5]

மேலதிகத் தகவல்கள் #, மாநிலம் ...
Remove ads

பொந்தியான் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி

Thumb
பொந்தியான் மாவட்ட மன்றம்

பொந்தியான் மாவட்டத்தில் ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி. 1939-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[6]

இந்தப் பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை 64. ஆண்கள் 35 பேர்; பெண்கள் 29 பேர். 14 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

  • பள்ளி தொடர்பான படங்கள்:

பொந்தியான் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads