பௌராணிகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பௌராணிகர் (சமசுகிருதம்:पौराणिक) பண்டைய இந்தியாவில் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களையும், புராணங்களையும் மன்னர்களிடத்திலும், ரிஷிகளிடத்திலும் எடுத்துக் கூறும் பணி செய்பவர் ஆவார். சூதர் குலத்தினரான பௌராணிகர்களை சுருக்கமாக சௌதி என்று அழைப்பர். சூதர்கள் சத்திரியர் தந்தைக்கும், பிராமணத் தாய்க்கும் பிறந்தவர்கள். பண்டைய பௌராணிகர்களில் புகழ்பெற்றவர்கள் ரோமஹர்சணர் மற்றும் அவரது மகன் உக்கிரசிரவஸ் ஆவார்.[1]

Remove ads
மகாபாரத்தில் பௌராணிகள்
வேதவியாசர் இயற்றிய மகாபாரதம் இதிகாசத்தை, ஜனமேஜயன் நடத்திய பாம்பு வேள்வியின் போது, வியாசரின் சீடரான வைசம்பாயனர் எடுத்துக் கூறும் போது, அங்கிருந்த சூதர் குல திலகம் உக்கிரசிரவஸ் என்ற சௌதி மகாபாரதக் கதையைக் கேட்டார்.
பின் குருச்சேத்திரம் போன்ற பல புனித இடங்களைச் சுற்றி, [[நைமிசாரண்யம் நைமிசாரண்யத்திற்கு]] வந்தார் சௌதி என்ற உக்கிரசிரவஸ். நைமிசாராண்யம் காட்டில் குலபதி சௌனகர் மகரிஷி தலைமையில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரிஷிகளுக்கு மகாபாரத இதிகாசத்தை உக்கிரசிரவஸ் என்ற சௌதி எடுத்துக் கூறினார்.[2]
Remove ads
உபந்நியாசகர்
தற்காலததில் இதிகாச, புராணங்கள் மற்றும் இந்து சமய சாத்திரங்களை பொதுமக்களிடத்தில் விளக்கி கூறுபவர்களை உபந்நியாசகர்கள் என அழைக்கின்றனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
