மகாராஜா (2024 திரைப்படம்)

2024-இல் வெளியான தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

மகாராஜா (2024 திரைப்படம்)
Remove ads

மகாராஜா (Maharaja) என்பது 2024 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான அதிரடித் திரைப்படமாகும்.[6] 2017இல் வெளியான குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை இயக்கியிருந்தார். தி ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது.[7][8] விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப், சச்சனா நமிதாஸ், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்பிரமணியம், அபிராமி, அருள்தாஸ், முனீஷ்காந்த், மணிகண்டன், சிங்கம்புலி, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

விரைவான உண்மைகள் இயக்கம், தயாரிப்பு ...
Remove ads

கதைச் சுருக்கம்

படத்தில் விஜய் சேதுபதி ஒரு முடிதிருத்துபவராக நடித்துள்ளார். தனது வீடு கொள்ளையடிக்கப்பட்ட பிறகு தனது லட்சுமி என்ற இரும்பு குப்பைத் தொட்டியை காணவில்லை என்று காவல் துறையிடம் புகார் கூறுகிறார். ஆனால் அவரது உண்மையான நோக்கங்களை போலீசார் சந்தேகிக்கத் தொடங்குகிறார்கள்.

தயாரிப்பு

சேதுபதியின் 50வது திரைப்படமாக இது இருப்பதால், இந்த படம் பிப்ரவரி 2023 இல் தற்காலிகமாக வி. ஜே. எஸ் 50 என்ற தலைப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி அதே மாதத்தில் தொடங்கியது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த இப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவை மேற்கொள்ள மற்றும் பிலோமின் ராஜ் படத் தொகுப்புப் பணிகளை மேற்கொண்டார்.

வெளியீடு

14 ஜூன் 2024 உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட இப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 2024 இன் அதிக வசூல் செய்த தமிழ் படமாக உருவானது.[9] [10] [11]

நடிகர்கள்

Remove ads

இசை

இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசை மற்றும் பின்னணி இசையமைத்துள்ளார்.[12] படத்தின் இசை உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.[13] [14] கவிஞர் வைரமுத்து எழுதி சித் ஸ்ரீராம் பாடிய "தாயே தாயே" என்ற தனிப்பாடல் ஜூன் 2024 ன்று வெளியிடப்பட்டது.[15] "ராஜா பய ஒண்ணு" என்ற இரண்டாவது பாடம் படம் வெளியான பிறகு 15 ஜூன் 2024 அன்று வெளியிடப்பட்டது.[16]

வீட்டு ஊடகம்

ஊடகச் சேவை உரிமையை நெட்பிளிக்சு நிறுவனமும், தொலைகாட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சியும் பெற்றுள்ளனர்.[17] [18] இந்தப் படம் 12 ஜூலை 2024 முதல் நெட்பிளிக்சில் திரையிடப்பட்டது.[19]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads