சிவ சேனா
இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவ சேனா (சிவசேனை) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். சிவ சேனா என்பது சிவாவின் படைகள் என்னும் பொருள்படும். இங்கே சிவா என்பது மராட்டிய மன்னனும், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வீரத்துடன் போரிட்டவனுமான சிவாஜியைக் குறிக்கிறது. இந்துக் கடவுளான சிவனை அல்ல. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பலமாக உள்ள கட்சியாகும். ஜூன் 19 1966 அன்று பால் தாக்கரேவால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் உத்தவ் தாக்கரே ஆவார்[1][2]. மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இக் கட்சி தொடக்க காலத்தில் தென் இந்தியர்களுக்கு எதிராக மும்பை நகரில் நடந்த பல கலவரங்களுக்கு காரணமாக இருந்தது.
பின் இந்துத்துவ கொள்கைகளுக்கு மாறிய இக்கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இதன் தேர்தல் சின்னம் வில் - அம்பு ஆகும்.
சிவ சேனாவின் பால் தாக்ரே, பாசகவின் மகாஜன் முயற்சியில் 1989ஆம் ஆண்டு முதல் தொடரும் பாசக சிவசேனாவின் 25 ஆண்டுகால கூட்டணி தொகுதிப்பங்கீடில் உடன்பாடு ஏற்படாததால் 2014 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் 2014, செப்டம்பர் 25 அன்று பாசக- சிவ சேனா கூட்டணி முறிந்ததாக பாசக அறிவித்தது[3][4] 1995இல் இக்கூட்டணி மகாராட்டிராவில் ஆட்சியமைத்தார்கள்.[5] 1984 இல் சிவசேனாவும் பாசகவும் கூட்டணி வைத்து 1984 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார்கள். அப்போது சிவசேனாவுக்குத் தனி சின்னம் இல்லாததால் பாசகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டது. அத்தேர்தலுக்குப் பின் அக்கூட்டணி முறிந்தது.[6]
- 2019 சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் 19வது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2022ல் கட்சியில் பிளவு ஏற்பட்டடது. ஏக்நாத் சிண்டே தலைமையில் மகாராட்டிரா அரசு நிறுவப்பட்டது. பெரும்பாலான சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் சிண்டே பக்கம் சென்றனர். தேர்தல் ஆணையம் ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவ சேனா பிரிவு தான் உண்மையான சிவ சேனா கட்சி என 17 பிப்ரவரி 2023 அன்று அங்கீகாரம் வழங்கியது.[7]
Remove ads
முதலமைச்சர்கள்
Remove ads
கட்சியில் பிளவு
சூன் 2022-இல் சிவசேனா கட்சியின் பெரும்பான்மையான சட்டமன்ற & நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் சிண்டே தலைமையில் சிவ சேனா கட்சியின் தனிப்பிரிவாக செயல்படுவதுடன், மகாராட்டிரா சட்டமன்றத்தில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.[8] சிவசேனா கட்சியின் சின்னம் மற்றும் பெயர் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் சிண்டே அணியினர் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கோரிய நிலைவில், சிவசேனா கட்சியின் சின்னம் மற்றும் பெயர் 9 அக்டோபர் 2022 அன்று தற்காலிகமாக முடக்கப்பட்டது.
இந்நிலையில் அந்தேரி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 3 நவம்பர் 2022 அன்று இடைக்காலத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் 10 அக்டோபர் 2022 அன்று உத்தவ் தாக்கரே பிரிவுக்கு சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) என்றும் மற்றும் தீப்பந்தம் சின்னமும் ஒதுக்கியது.[9][10]ஏக்நாத் சிண்டே தலைமையிலான கட்சிக்கு இரட்டை வாட்கள் & கேடயம் சின்னமும், கட்சியின் பெயராக பாலாசாகேபஞ்சி சிவ சேனா எனப்பெயர் வழங்கப்பட்டது.[11][12]
Remove ads
தேர்தல் ஆணயத்தின் அங்கீகாரம்
சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடிகளை பயன்படுத்தும் உரிமையை ஏக்நாத் சிண்டே தலைமையிலான பாலாசாகேபஞ்சி சிவ சேனா பிரிவுக்கு மட்டுமே உரியது என இந்தியத் தேர்தல் ஆணையம் 17 பிப்ரவரி 2023 அன்று உத்தரவிட்டது.[13][14][15][16]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads