மங்களூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

மங்களூர் சந்திப்பு தொடருந்து நிலையம்map
Remove ads

மங்களூர் சந்திப்பு தொடருந்து நிலையம் (முன்னர் கங்கநாடி தொடருந்து நிலையம்) (நிலையக் குறியீடு: MAJN) என்பது தெற்கு இரயில்வே மண்டலத்தின் பாலக்காடு இரயில்வே பிரிவில் உள்ள ஒரு என். எசு. ஜி.-3 வகை இந்திய இரயில்வே தொடருந்து நிலையமாகும்.[2][3] இது கொங்கண், மேற்குத் தொடர்ச்சி மலை (மங்களூர் ஹாசன் மைசூர் பாதை), மலபார் இரயில்வே ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கியமான தொடருந்து நிலையமாகும். தர்பார் மலை, பாடில் அமைந்துள்ள, இது துறைமுக நகரமான மங்களூருக்கான நுழைவாயிலாகும். இந்த நிலையம் மங்களூர் மத்தியத் தொடருந்து நிலையத்தைத் தெற்கில் கேரளா, வடக்கில் மகாராட்டிரா/கோவா, மங்களூர் துறைமுகம், கிழக்கில் பெங்களூரு-சென்னை ஆகியவற்றுடன் இணைக்கும் ஒரு சந்திப்பாகும். வடக்கு, தெற்கே செல்லும் அனைத்துத் தொடருந்துகளும் இந்த நிலையத்தின் வழியாக மங்களூரைத் தொடுவதால், இப்பகுதியில் மிகவும் பரபரப்பான தொடருந்து சந்திப்பு இதுவாகும்.

விரைவான உண்மைகள் மங்களூர் சந்திப்புMangaluru Junction, பொது தகவல்கள் ...

நகரத் தொடருந்து நிலையம் மங்களூர் தொடருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டபோது இது கங்கநாடி தொடருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் பெயர்க் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக இரண்டுமே முறையே மங்களூர் சந்திப்பு, மங்களூர் மத்தியத் தொடருந்து நிலையம் என்று மறுபெயரிடப்பட்டன.

கொங்கன் இரயில்வே மண்டலத்திற்குப் பிறகு தெற்கு இரயில்வே மண்டலத்தில் உள்ள முதல் நிலையம் இதுவாகும். இது வடக்கே முந்தைய நிலையமான தோக்கூரில் முடிவடைகிறது. நிலையத்தை ஒட்டியுள்ள இரயில்வேக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலப்பரப்பில் மங்களூர் சந்திப்பை உலகத் தரம் வாய்ந்த நிலையமாக மேம்படுத்த இரயில்வே விரும்புகிறது.[4]

Remove ads

சேவை

மும்பை, கொச்சி, புது தில்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இந்தத் தொடருந்து நிலையம் தினசரி சேவையினைக் கொண்டுள்ளது.

திருவனந்தபுரம் ராஜதானி விரைவுவண்டி, புது தில்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் தொடருந்து நிலையத்துடன் மங்கள லட்சத்தீவு விரைவுவண்டி, கேரள சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி போன்ற பிற தொடருந்துகளுடன் சேவையினை இணைக்கிறது.

திருநெல்வேலி-காந்திதம் ஹம்சாபர் விரைவுவண்டி, மருசாகர் விரைவுவண்டி, கொச்சுவேளி-ஸ்ரீ கங்காநகர் சந்திப்பு விரைவுவண்டி ஆகிய தொடருந்துகள், ஜபல்பூர்-கோயம்புத்தூர் அதிவிரைவு வண்டி, கொச்சுவேளி லோகமான்ய திலக் முனையத்தின் கரீப் ராத் விரைவுவண்டி, நேத்ராவதி விரைவுவண்டி, மும்பை அதிவிரைவு வண்டி, நேத்ராவதி விரைவுவண்டி, மங்களூரு மும்பை சி. எஸ். எம். டி. எஸ். அதிவிரைவு வண்டி பிற முக்கிய தொடருந்துகளாகும்.

Remove ads

இடம்

அருகிலுள்ள முக்கிய போக்குவரத்து மையங்கள்

  • அருகிலுள்ள வானூர்தி நிலையம்: மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் (11 கி. மீ.)
  • அருகிலுள்ள துறைமுகம்: புதிய மங்களூர் துறைமுகம் (14 கி. மீ.)
  • அருகிலுள்ள பேருந்து நிலையங்கள் ஹம்பன்கட்டா (6 கி. மீ) மற்றும் லால்பாக், மங்களூர் (8 கி. மீ.)
  • அருகிலுள்ள பேருந்து நிறுத்தம்: நாகுரி (200 மீ) பாதில் (500 மீ) பஜல் குறுக்குச்சாலை (100 மீ)
  • மங்களூர் மத்தியத் தொடருந்து நிலையத்திலிருந்து 6 கி. மீ. தொலைவில் உள்ளது.
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads