மஞ்சுளா (கன்னட நடிகை)
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹொன்னேனஹள்ளி சிவண்ணா மஞ்சுளா (Honnenhalli Shivanna Manjula) (8 நவம்பர் 1954-12 செப்டம்பர் 1986) ஓர் இந்திய நடிகை கன்னடத் திரைப்படங்களிலும், தமிழகத் திரைப்படங்களிலும் (குமாரி மஞ்சுளா என்ற பெயரில் ) மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் (கன்னட மஞ்சுளா என்றும் ) நடித்துள்ளார். 1970கள் மற்றும் 1980களில் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் வெற்றிகரமான மற்றும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்தார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பிற்காக பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றார்.[1]
Remove ads
சொந்த வாழ்க்கை
தும்கூர் மாவட்டத்திலுள்ள ஹொன்னஹள்ளி என்ற கிராமத்தில் எம். எச். சிவண்ணா மற்றும் தேவரம்மா ஆகியோருக்கு மஞ்சுளா பிறந்தார்.[2] இவரது தந்தை சிவண்ணா ஒரு காவல் உதவி ஆய்வாளராக இருந்தார். ஹுடுகாதடா ஹுடுகி மற்றும் கனசு நனசு போன்ற படங்களில் தன்னுடன் பணியாற்றிய திரைப்பட இயக்குனர் அம்ருதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு அபிஷேக் என்ற மகன் பிறந்தான்.
தொழில்
மஞ்சுளா தனது நடிப்பு வாழ்க்கையை 1965 இல் பிரபாத் கலவிதரு என்ற நாடகக் குழுவில் தொடங்கினார். 1966 ஆம் ஆண்டு மானே கட்டி நோடு என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் கன்னடத் திரையுலகில் நுழைந்தார். 1972 ஆம் ஆண்டு மூத்த இயக்குனர் எம்.ஆர். விட்டல் இயக்கிய யாரா சாக்ஷி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ராஜ்குமார், விஷ்ணுவர்தன், ஸ்ரீநாத், அசோக் மற்றும் சங்கர் நாக் உட்பட அனைத்து முன்னணி கன்னட நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிகர் ஸ்ரீநாத்துடன் சேர்ந்து சுமார் 35 படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்.[3]
மஞ்சுளா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 1970களின் பிற்பகுதியில் ஒரு சிறந்த கன்னட கதாநாயகியாக இவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த, ஆதிக்க மனப்பான்மை கொண்ட கிராமத்து பெண் வேடத்தில் அடிக்கடி தோன்றினார். சம்பாதிகே சவால், இரடு கனசு, சொசே தாண்டா சௌபாக்யா, பேசுகே மற்றும் சீதாராமு ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படங்களில் சில. ராமகிருஷ்ணா (தெலுங்கு), கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் (தமிழ்) போன்ற பிற மொழிகளிலும் நன்கு அறியப்பட்ட நடிகர்களுடனும் இவர் நடித்தார்.
Remove ads
இறப்பு
1986 செப்டம்பர் 19 அன்று சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுக்கு ஆளாகி மஞ்சுளா இறந்தார்.[4][5] ஆரம்பத்தில் இது ஒரு விபத்தாகக் கருதப்பட்டாலும், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த மரணத்தை தற்கொலை என்று செய்தி வெளியிட்டது.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads