மடிக்கேரி தசரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மடிக்கேரி தசரா (Madikeri Dasara) என்பது இந்திய மாநிலமான கருநாடகாவில் உள்ள மடிக்கேரி நகரில் கொண்டாடப்படுகிறது.[1] இதற்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. மடிகேரி தசரா என்பது பத்து நாள் கொண்டாட்டமாகும், இது 4 கரகங்கள் மற்றும் 10 மண்டபங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது சூரர்களால் (தெய்வம்) அசுரர்களை கொன்றதை சித்தரிக்கிறது. மடிகேரி தசராவுக்கான ஏற்பாடுகள் 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். இந்த கொண்டாட்டத்திற்கான பெரும்பகுதி தொகை குடகு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது . இந்த 10 மண்டப அமைப்பாளார்களின் குழுவிலும் 50 முதல் 100 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு மண்டபமும் 8 முதல் 15 அடி உயரமுள்ள சிலைகளைக் கொண்டுள்ளது. இது ஒரு விளக்குப் பலகையின் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபம் கட்டுவதற்கு ₹ 10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை செலவாகும் என்று கணக்கிடப்படுகிறது.
Remove ads
வரலாறு
மடிகேரி மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நோயால் பாதிக்கப்பட்டதாக நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. அப்போது மடிகேரி மன்னர் மாரியம்மன் திருவிழாவை தொடங்க முடிவு செய்தார். அப்போதிலிருந்து, மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. மகாளய அமாவாசைக்கு மறுநாள் திருவிழா தொடங்குகிறது. எனவே தசரா நான்கு கரகங்களுடன் தொடங்குகிறது.
மைசூரு தசராவுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது மிகப் பிரபலமான தசரா விழா இதுவாகும்.
Remove ads
மடிக்கேரி தசராவில் கரகா
இந்த ஊரில் 4 மாரியம்மன் கோவில்கள் உள்ளன: அவை முறையே, தண்டின மாரியம்மன், காஞ்சி காமாட்சியம்மன், குண்டூருமோட்டே ஸ்ரீ சவுட்டி மாரியம்மன் மற்றும் கோட்டை மாரியம்மன் ஆகும். இந்த மாரியம்மன் கோயில்கள் ஒவ்வொன்றிலும் நவராத்திரியின் முதல் நாளில் தொடங்கும் கரகம் உள்ளது. இந்த நான்கு கரகங்களும் நகரத்தின் "சக்தி தேவதைகளை" குறிக்கின்றன. அனைத்து கோவில்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இந்த 10 நாட்களில் மடிகேரி முழுவதும் அழகாக காட்சியளிக்கும். கரகம் என்றால் குடம் போன்ற ஒரு பாத்திரத்தில், அரிசி, 9 வகையான நவ தானியங்கள், புனித நீர் நிரப்பப்படுகிறது. இதை விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் தலைமேல் வைக்கப்ப்ட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த கரகங்கள் கவர்ச்சியாக அலங்கரிக்கப்பட்டுகின்றது. இந்த கரகங்கள் தசராவின் 5 நாட்களுக்கு மடிகேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வலம் வரும் . மேலும் இவை மடிகேரியில் வாழும் பக்தர்களால் அர்ப்பணிக்கப்படுகின்றன.
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads