மணிப்புரியம்

From Wikipedia, the free encyclopedia

மணிப்புரியம்
Remove ads

மணிப்புரியம் (Manipuri, মণিপুরি) அல்லது மேதி மொழி (Meitei-lon, মৈতৈলোন্, Meitei-lol, মৈতৈলোল্) என்பது, வடகிழக்கு இந்தியாவிலும், வங்காளதேசம், மியான்மார் நாடுகளிலும் பேசப்படும் மொழியாகும். குறிப்பாக இந்தியாவிலுள்ள மணிப்பூரில் மாநிலத்தில் அதிகமானோரும், அசாம், திரிபுரா மாநில மக்களால் குறைந்த அளவிலும் பேசப்படுகிறது. இந்திய அலுவலக மொழிகளுள் ஒன்றாக (பட்டியல்-8) இருக்கிறது. இது பர்மிய மொழிகளுள் ஒன்றும் ஆகும். மேலும், நாகா மொழிகளின் பண்புகளுடனும் ஒத்துவருகிறது. இந்தியாவில் இம்மொழியை, ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள் பேசுகின்றனர்.

விரைவான உண்மைகள் மணிப்புரியம்Meetei Mayek, எழுத்து முறை வகை ...
Thumb
இந்தியாவில் பேசும்பகுதி
(வெளிர் சிவப்பு நிறம்)

1992-ஆம் ஆண்டு, இந்திய அரசியலமைப்பில் ஆட்சி மொழிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பட்டியல்-8-இல், இம்மொழியும் இணைக்கப் பட்டது. இவ்விணைப்பை, 71வது இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது. அதனால் மணிப்புரியம், இந்திய ஆட்சிமொழிகளில் ஒன்றானது.

Remove ads

மொழியின் தன்மைகள்

  • இது பிராமிய மொழிக்குடும்பத்திலுள்ள அபுகிடா எழுத்துமுறையை உள்ளடக்கியுள்ளது.
  • இம்மொழியில் 15 மெய்யெழுத்துகளே உள்ளன. மற்றும் 9 மெய்யெழுத்துக்களை அசாமியம், வங்க மொழியில் இருந்தும் எடுத்துக் கையாளப்படுகிறது.[1]
  • 1891-இல் ஆங்கிலேயர் இம்மொழி பேசுவோரிடம், அசாமியம், வங்களாம் மொழிகளை வற்புறுத்தி பயன்படுத்த செய்ததால், இம்மொழியின் பெரும்பாலான எழுத்துமுறை அழிக்கப்பட்டு விட்டது. எனினும், இந்திய அரசின் முயற்சியால் இம்மொழியின் எழுத்துமுறை வளர்ந்து வருகிறது.
Remove ads

மணிப்புரிய எண்களின் ஒலிப்பு

1 - அம, 2 - அனி, 3 - அகும், 4 - மரி, 5 - மேன்க, 6 - தருக், 7 -தரட், 8 -நிய்பன், 9 - மபன், 10 -ட்டர

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads