மனிசா மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

மனிசா மாகாணம்
Remove ads

மனிசா மாகாணம் ( துருக்கியம்: Manisa ili ) என்பது மேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் . இதன் அண்டை மாகாணங்களாக மேற்கில் இஸ்மீர், தெற்கில் அய்டன், தென்கிழக்கில் டெனிஸ்லி, கிழக்கே உசாக், வடகிழக்கில் கட்டாஹ்யா, வடக்கே பலகேசீர் உள்ளன. மனிசா நகரம் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். போக்குவரத்து குறியீடு 45 ஆகும்.

விரைவான உண்மைகள் மனிசா மாகாணம் Manisa ili, Country ...
Thumb
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த மனிசாவைச் சேர்ந்த யெராக் கிளிம் தரைவிரிப்பு
Thumb
அலி டான்டோகன், கால்பந்து பயிற்சியாளர் மற்றும் மனிசாவின் முன்னாள் வீரர்
Remove ads

மாவட்டங்கள்

  • அஹ்மத்லி
  • அகிசர்
  • அலசெஹிர்
  • டெமிர்சி
  • கோல்மர்மாரா
  • கோர்டெஸ்
  • கிர்காகாகஸ்
  • கோப்பருபசி
  • குலா
  • சிகசடிலர்
  • சாலிஹ்லி
  • சரகால்
  • சாருஹான்லே
  • செலெண்டி
  • சோமா
  • துர்குட்லு
  • யூனுசெம்ரே

காணத்தக்க தளங்கள்

மனிசா நகருக்கு அருகிலுள்ள மவுண்ட் சிபிலஸ் தேசிய பூங்கா ( ஸ்பில் டாஸ் மில்லி பார்க் ) ஒரு செழிப்பான வனப்பகுதி ஆகும். இங்கு வெந்நீரூற்றுகள், நியோபின் கதையில் புகழ்பெற்ற "அழுகை பாறை" மற்றும் தாய்-தெய்வமான சைபெலினுக்கான இட்டைட்டு கால செதுக்கல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த பூங்கா அதன் எல்லைக்குள் சுமார் 120 வகையான பூர்வீக தாவரங்களை கொண்டுள்ளது, குறிப்பாக காட்டு துலிப் உள்ளது. இந்த பூங்கா மலையேறுதல் மற்றும் முகாமிடுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

இன்றைய சாலிஹ்லி நகராட்சியில் உள்ள சர்திஸ், லிடியாவின் பண்டைய தலைநகராக இருந்தது. ஒரு காலத்தில் கிரீச்சு மன்னரால் ஆளப்பட்டது. அவர் செல்வத்திற்காக புகழ் பெற்றார். ஏராளமான பூகம்பங்களால், ஏற்பட்ட அழிவின் எச்சங்கள் பெரும்பாலும் உரோமானிய காலத்திலிருந்தே உள்ளன. ஆர்ட்டெமிஸ் கோவிலின் எச்சங்களும், மீட்டெடுக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடமும் உள்ளன. இவை இந்த பண்டைய நகரத்தின் கடந்தகால சிறப்பை வெளிப்படுத்துகின்றன. 3 ஆம் நூற்றாண்டின் அற்புதமான யூத தொழிகைக் கூடம் பார்வையிடத்தக்கது. இது அக்காலத்திய மொசைக் கற்கள் மற்றும் கலைரீதியாக செதுக்கப்பட்ட வண்ண-கல் பலகைக போன்றவற்றைக் கொண்டுள்ளது.

பண்டைய நகரமான தியாதிரா (தற்போது அகிசர் என அழைக்கபடுகிறது) திருவெளிப்பாடு புத்தகத்தின் ஏழு தேவாலயங்களில் ஒன்றாகும். மேலும் பண்டைய நகரத்தின் எச்சங்கள் நகரத்தின் ஒரு பகுதியில் டெப் மெசார்லே (மலை கல்லறை) என்ற பகுதியில் காணப்படுகிறது. மிக சமீபத்தில், இது மாகாணத்தில் ஒரு முக்கியமான வணிக மையமாக மாறியுள்ளது.

ஏழு தேவாலயங்களில் ஒன்றான பண்டைய நகரமான பிலடெல்பியாவின் எச்சங்கள் தற்போதைய அலெஹீர் நகரில் காணப்படுகிறது. பைசண்டைன் தேவாலயத்தின் சில இடிபாடுகளைத் தவிர, பண்டைய நகரத்தின் இடதுபுறம் கொஞ்சம் உள்ளது.

யூன்ட் மலை (யுன்ட் டாஸ்) கிராமங்கள் மற்றும் கோர்டெஸ், குலா மற்றும் டெமிர்சி நகரங்கள் கிளிம்கள் எனப்படும் தரைவிரிப்புகளுக்கு பெயர் பெற்றவை. குலாவில் உள்ள வீடுகளும் உதுமானிய கட்டிடக்கலைக்கு உள்ளூர் எடுத்துக்காட்டுகள் ஆகும்.

கூடுதலாக, இப்பகுதி முழுவதும் பல வெந்நீரூற்றுகள் உள்ளன.

தொழில்துறை வளர்ச்சி அடிப்படையில் இந்த மாகாணம் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது, குறிப்பாக மனிசா, துர்குட்லு, அகிசர் மற்றும் சாலிஹ்லி ஆகிய நான்கு பெரிய மையங்களில் தொழில்கள் குவிந்துள்ளன.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads