மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
Remove ads

மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (ஆங்கிலம்:(Technical University of Malaysia, Malacca; மலாய்: Universiti Teknikal Malaysia Melaka) (UTeM) என்பது மலேசியா, மலாக்கா, ஆங் துவா ஜெயா, டுரியான் துங்கல் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம்; மற்றும் பல்துறை தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும்.[6][7]

விரைவான உண்மைகள் முந்தைய பெயர், குறிக்கோளுரை ...
Thumb
மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைவிடம்

776 ஏக்கர் பர்ப்பளவைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம், தொடக்கத்தில் மலேசிய தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரி (ஆங்கிலம்:(National Technical University College of Malaysia; மலாய்: Kolej Universiti Teknikal Kebangsaan Malaysia) (KUTKM) எனும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் அதன் பெயர் மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (ஆங்கிலம்: (Technical University of Malaysia, Malacca) என மாற்றப்பட்டது.[8][9]

Remove ads

பொது

இந்தப் பல்கலைக்கழகம் மலேசியாவின் முதல் தொழில்நுட்ப பொது பல்கலைக்கழகம்; மற்றும் 14-ஆவது பொது பல்கலைக்கழகம் ஆகும். 2007-ஆம் ஆண்டில், முழு பல்கலைக்கழகத் தகுதிக்கு தரம் உயர்த்தப்பட்டது. மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வலையமைப்பில் (Malaysian Technical University Network) (MTUN) ஓர் உறுப்பினராகவும் உள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம் 1971 (சட்டம் 30), பிரிவு 20-இன் கீழ், தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், மலேசியாவில் உயர்நிலைத் தொழில்நுட்பக் கல்விக்கான "நடைமுறை மற்றும் பயன்பாடு சார்ந்த" கற்பித்தல் மற்றும் கற்றல் முறையைப் பயன்படுத்துவதில் முன்னோடியாகக் கருதப்படுகிறது.

Remove ads

பல்கலைக்கழக வளாகம்

இரண்டு முதன்மை வளாகங்களில் எட்டு துறைகளில் கற்பிக்கப்படுகின்றன.

புள்ளி விவரங்கள்

சான்று:[10]

மாணவர் எண்ணிக்கை

31 சூலை 2019 புள்ளி விவரங்கள்:

  • 10,930 மாணவர்கள்
    • 24 எந்திரவியல் பட்டயப் படிப்பு
    • 688 முனைவர்- 403 பன்னாட்டு மாணவர்கள்
    • 664 முதுகலை - 113 பன்னாட்டு மாணவர்கள்
    • 8,383 இளங்கலை - 161 பன்னாட்டு மாணவர்கள்
    • 1,171 பட்டயப் படிப்பு
  • 26,418 பட்டதாரிகள் 2005 வரையில்

கல்வித் திட்டங்கள்

செப்டம்பர் 2019 நிலவரப்படி, 86 கல்வித் திட்டங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன:

  • 13 முனைவர் திட்டங்கள்
  • 37 முதுநிலைத் திட்டங்கள்
  • 29 இளங்கலைத் திட்டங்கள்
  • 5 பட்டயத் திட்டங்கள்
  • 2 புதிய இளங்கலைத் தொழில்நுட்பம்; செப்டம்பர் 2019-இல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள்

இணைப் பல்கலைக்கழ்கங்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads