மலையாள இலக்கியம்

From Wikipedia, the free encyclopedia

மலையாள இலக்கியம்
Remove ads

மலையாள இலக்கியம் (Malayalam literature) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் பேசப்படும் தென்-திராவிட மொழியான மலையாளத்தில் எழுதப்பட்ட இலக்கிய நூல்களைக் கொண்டுள்ளது. இந்திய மாநிலமான கேரளம் மற்றும் இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி போன்ற ஒன்றியப் பிரதேசங்களின் இணைப்பு மொழி மலையாளம், இந்தியாவின் ஆறு பாரம்பரிய மொழிகளில் ஒன்றாகும்.[1] 1785 இல் பாரேம்மக்கள் தோம கதனார் என்பவர் மலையாளத்தில் எழுதிய வர்த்தமானப்புத்தகம் என்ற நூல் அனைத்து இந்திய மொழியிலும் எழுதப்பட்ட முதல் பயணக் குறிப்பு எனக் கருதப்படுகிறது.[2][3] மலையாள இலக்கியத்திற்கு 6 ஞானபீட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இது அனைத்து திராவிட மொழிக்கும் வழங்கப்பட்ட இரண்டாவது மிக உயர்ந்த விருதும், அனைத்து இந்திய மொழிக்கும் வழங்கப்பட்ட மூன்றாவது மிக உயர்ந்த விருதும் ஆகும்.[4][5]

Thumb
1772 இல் மலையாளத்தில் அச்சிடப்பட்ட நஸ்ரானிகள் ஒக்கேக்கும் அறியேன்ன சம்க்ஷேபவேதார்த்தம் என்ற முதல் புத்தகத்தின் அட்டைப் பக்கம்.
Remove ads

தோற்றம்

சங்க இலக்கியம் மலையாளத்தின் பண்டைய முன்னோடியாகக் கருதப்படுகிறது.[6] மலையாள நாட்காட்டியின் தோற்றம் கி.பி. 825 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.[7][8][9] கி.பி.849/850 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த கொல்லம் சிரிய செப்புத் தகடுகள் பழைய மலையாளத்தில் எழுதப்பட்ட மிகப் பழமையான கல்வெட்டு என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. பழைய மலையாளத்தில் எழுதப்பட்ட இராமசரிதம் (12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)[10] மற்றும் திருநிழல்மாலை ஆகிய இரண்டும் மலையாளத்தில் முதன்முதலில் அறியப்பட்ட இலக்கியப் படைப்புகள் ஆகும்.[10] அடுத்தடுத்த நூற்றாண்டுகளில், பிரபலமான பாடல் இலக்கியத்தைத் தவிர, மணிப்பிரவாள நடை ("மாணிக்க பவளம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) கவிதைகளும் செழித்தது. மணிப்பிரவாள நடை மலையாளம் மற்றும் சமசுகிருதத்தின் கலவையில் கவிதைகளைக் கொண்டிருந்தது.[11] பின்னர் சாம்பஸ் மற்றும் சந்தேசகாவியங்கள் போன்ற படைப்புகள் வந்தன, அவற்றில் உரைநடை மற்றும் கவிதை இடையிடையே இடம்பெற்றன. பின்னர், செருசேரி போன்ற கவிஞர்கள் பக்தி கருப்பொருள்கள் குறித்த கவிதைகளை அறிமுகப்படுத்தினர்.

Remove ads

பங்களிப்பாளர்கள்

2013 ஆம் ஆண்டில் இந்தியாவின் செம்மொழிகள் என்று அங்கீகாரம் வழங்கப்பட்ட மலையாள இலக்கியம்,[12] பொது ஊழி சகாப்தத்தின் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் கவிஞர்களான செருசேரி நம்பூதிரி,[13][14] துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன்,[14] மற்றும் பூந்தானம் நம்பூதிரி,[15] ஆகியோரின் செல்வாக்கால் தற்போதைய வடிவத்திற்கு வளர்ந்தது.[16][17] துஞ்சத்து எழுத்தச்சன் நவீன மலையாள இலக்கியத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.[14] 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞரான குஞ்சன் நம்பியார், மலையாள இலக்கியத்திற்கு அதன் ஆரம்ப வடிவத்தில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.[14] பொன்னானி என்றும் அழைக்கப்படும் பாரதப்புழா ஆறும் அதன் துணை நதிகளும்கூட நவீன மலையாள இலக்கிய வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.[18] 16-17 ஆம் நூற்றாண்டுகளில் பொது சகாப்தத்தில் இயற்றப்பட்ட முஹ்யதீன் மாலா போன்ற அரபி மலையாளத்தில் பிற முக்கியமான படைப்புகளும் இருந்தன. அரபி மலையாள இலக்கியத்தின் வளர்ச்சி இறுதியில் மாப்பிளா பாடல்களுக்கு வழிவகுத்தது. பொது சகாப்தத்தின் 16-17 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய பல அரபி மலையாளப் படைப்புகளில் பயன்படுத்தப்படும் சொற்களும் நவீன மலையாள மொழிக்கு மிகவும் நெருக்கமானவை.[14][19] பக்தி இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான எழுத்தச்சன், மலையாள மொழியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவரது கவிதைகள் கிளிப்பாட்டு வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[20]

Remove ads

நவீன வளர்ச்சி

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குப் பிறகு உரைநடை இலக்கியம், விமர்சனம் மற்றும் மலையாள இதழியல் போன்றவௌ தொடங்கியது. சமகால மலையாள இலக்கியம் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்க்கை சூழலைக் கையாள்கிறது. மலையாள இலக்கியத்தில் நவீன இலக்கிய இயக்கங்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குமரன் ஆசான்,[21] உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர் [22] மற்றும் வள்ளத்தோள் நாராயண மேனன் ஆகியோரைக் கொண்ட பிரபலமான நவீன முப்படையின் எழுச்சியுடன் தொடங்கியது.[23] குமரன் ஆசான் மனோபாவத்தில் ஒரு இழநம்பிக்கையாளராக இருந்தார் - மீவியற்பியலால் வலுப்படுத்தப்பட்ட ஒரு மனநிலை - ஆனாலும் அவரது வாழ்நாள் முழுவதும் அவரது தாழ்த்தப்பட்ட இந்து - ஈழவ சமூகத்தை மேம்படுத்துவதில் தீவிரமாக இருந்தார். உள்ளூர் எஸ். பரமேஸ்வர ஐயர் பாரம்பரிய மரபில் எழுதி உலகளாவிய அன்பை ஈர்த்தார். அதே நேரத்தில் வல்லத்தோள் சமூக முன்னேற்றத்தின் மனித முக்கியத்துவத்திற்கு கவனம் செலுத்தினார். சமகால மலையாளக் கவிதைகள் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்க்கை சூழலைக் கையாள்கின்றன. நவீன கவிதையின் போக்கு பெரும்பாலும் அரசியல் தீவிரவாதத்தை நோக்கியே உள்ளது.[24] 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், ஞானபீட விருது வெற்றி பெற்ற கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களான ஜி. சங்கரா குறுப்பு, எஸ். கே. பொற்றேக்காட்டு, தகழி சிவசங்கரப் பிள்ளை, இடச்சேரி கோவிந்தன் நாயர், எம். டி. வாசுதேவன் நாயர், ஓ. என். வி. குறுப்பு, அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி ஆகியோர் மலையாள இலக்கியத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கினர்.[25][26][27][28][29] பின்னர் ஓ.வி.விஜயன், கமலா தாஸ், எம். முகுந்தன், அருந்ததி ராய், முகம்மது பஷீர் போன்ற எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.[30][31][32][33] நவீன மலையாள இலக்கணம் கி.பி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏ. ஆர். இராஜராஜ வர்மா எழுதிய கேரள பாணினீயம் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.[34]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads