மளிர் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

மளிர் மாவட்டம்
Remove ads

மளிர் மாவட்டம் (Malir District), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் கராச்சி கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மளிர் நகரம் ஆகும். மளிர் நகரமானது, சிந்து மாகாணத் தலைநகரான கராச்சிக்கு வடகிழக்கே 25.5 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 1,390 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இதுவே கராச்சி கோட்டத்தில் உள்ள பெரிய மாவட்டம் ஆகும்.

விரைவான உண்மைகள் மளிர் ضلع ملیر, நாடு ...
Thumb
கராச்சி கோட்டத்தின் 7 மாவட்டங்கள்
Remove ads

மாவடட நிர்வாகம்

குல்சன் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு மளிர் மாவட்டம் 1996ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இம்மாவட்டம் மளிர் நகரம், பின்-காசிம் நகரம், கடாப் நகரம் எனும் 3 நகரங்களையும், 6 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.

  1. பின்-காசிம் வட்டம்
  2. கடாப் நகர்புற வட்டம்
  3. இப்ராகீம் ஐதரி நகர்புற வட்டம்
  4. ஷா முராத் வட்டம்
  5. முராத் மேமன் கோத் வட்டம்
  6. ஏர்போர்ட் வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 421,426 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 2,432,248 ஆகும்[5]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 112.70 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 63.14% ஆகும்[3][6]. இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 624,172 (25.8%) ஆக உள்ளனர்.[7]நகர்புறங்களில் 1,166,340 (47.95%) மக்கள் வாழ்கின்றனர்.[3]

சமயம்

இம்மாவட்ட மக்கள் தொகையில் இசுலாம் சமயத்தை 96.45% மக்களும், இந்து சமயத்தை 1.66% மக்களும், கிறித்துவ சமயத்தை 1.82% மக்களும் மற்றும் பிற சமயங்களை 0.07% மக்களும் பின்பற்றுகின்றனர்.[8]

மொழி

இம்மாவட்ட மக்கள் தொகையில் பஞ்சாபி மொழியை 9.94%%, சிந்தி மொழியை 34.98%%, பஷ்தூ மொழியை 17.71%%, பலூச்சி மொழியை 7.88%%, சராய்கி மொழியை 3.22%%, இந்த்கோ மொழியை 3.22%%, பிற மொழிகளை % மக்கள் பேசுகின்றனர்[9]

Remove ads

அரசியல்

இம்மாவட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு (National Assembly) மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது.

  1. NA-229 கராச்சி மளிர்-I
  2. NA-230 கராச்சி மளிர்- II
  3. NA-231 கராச்சி மளிர்-III

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads