மாங்குளம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாங்குளம் தொடருந்து நிலையம் (Mankulam railway station) இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் 1990 யூலை முதல் வவுனியாவில் இருந்து வடக்கே சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வடக்குப் பாதையின் மாங்குளத்தூடான ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்கும் இடையேயான பாதை புனரமைக்கப்பட்டு 2013 செப்டம்பர் 14 இல் திறந்து வைக்கப்பட்டது.[1][2] 2015 சனவரி 2 முதல் மாங்குளம் ஊடாக காங்கேசன்துறை வரை தொடருந்துகள் செல்கின்றன.[3][4]
|
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads