முறிகண்டி தொடருந்து நிலையம்

இலங்கையில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

முறிகண்டி தொடருந்து நிலையம்map
Remove ads

முறிகண்டி தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Murukandy Railway Station) (சிங்களம்: මුරුකන්ඩි දුම්රිය ස්ථානය) என்பது இலங்கையின் வடக்கே முறிகண்டி நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வட மாகாணத் தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்ததால், 1990 மற்றும் 2013 ஆம் ஆண்டு வரை இந்த நிலையம் செயல்படவில்லை. பின்னர் 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து, வடக்குத் தொடருந்துப் பாதை முறிகண்டினூடாக ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான வடக்குத் தொடருந்து பாதை செப்டம்பர் 14 2013 அன்று மீண்டும் செயல்படத் தொடங்கியது. [1][2]

விரைவான உண்மைகள் முறிகண்டி தொடருந்து நிலையம்Murukandy railway station මුරුකන්ඩි දුම්රිය ස්ථානය, பொது தகவல்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads