கிளிநொச்சி தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

கிளிநொச்சி தொடருந்து நிலையம்
Remove ads

கிளிநொச்சி தொடருந்து நிலையம் (Kilinochchi railway station, கிளிநொச்சி புகையிரத நிலையம்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வட மாகாணத் தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து 1990 ஆம் ஆண்டு யூலை முதல் இயங்காமல் இருந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து கிளிநொச்சி வரையான தொடருந்துப் பாதை சீரமைக்கப்பட்டு 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் கிளிநொச்சி வரை பயணம் மேற்கொண்டது.[1] பின்னர் கிளிநொச்சி முதல் பளை வரையான 21 கி.மீ. நீளப் பாதை புனரமைக்கப்பட்டு 2014 மார்ச் 4 இல் சேவைக்கு விடப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் கிளிநொச்சிKilinochchi, பொது தகவல்கள் ...
காங்கேசன்துறை
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை
மல்லாகம்
சுன்னாகம்
இணுவில்
கோண்டாவில்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
புங்கங்குளம்
உப்பாறுக் கடற்காயல்
நாவற்குழி
தச்சன்தோப்பு
சாவகச்சேரி
சங்கத்தானை
மீசாலை
கொடிகாமம்
மிருசுவில்
எழுதுமட்டுவாள்
பளை
ஆனையிறவு
சுண்டிக்குளம் கடல் நீரேரி
பரந்தன்
கிளிநொச்சி
முறிகண்டிக் கோவில்
முறிகண்டி
மாங்குளம்
புளியங்குளம்
ஓமந்தை
தாண்டிக்குளம்
வவுனியா
ஈரப்பெரியகுளம்
புணாவை
மன்னார் தொடருந்துப் பாதை தலைமன்னாருக்கு
மதவாச்சி சந்தி
மதவாச்சி
மெதகமை
பரசங்கவேவா
சாலியபுரம்
மிகிந்தளை
கிளைத் தடம் மிகிந்தளைக்கு
மிகிந்தளை சந்தி
அனுராதபுரம்
அனுராதபுரம் புதிய நகர்
அருவி ஆறு
சிராவஸ்திபுரம்
தலாவை
தம்புத்தேகமை
சேனரத்கமை
கல்கமுவை
அம்பான்பொலை
இரந்தெனிகமை
மாகோ
மட்டக்களப்பு வழித்தடம் மட்டக்களப்பிற்கு
மாகோ சந்தி
திம்பிரியாகெதர
நாகொல்லாகமை
இரியாலை
கணேவத்தை
தெதரு ஆறு
வெல்லாவை
முத்தெட்டுகலை
குருணாகல்
நையிலியா
பொத்துகெர
தளவெத்தகெதர
கிரம்பே
பதுளைக்கு
பொல்காவலை சந்தி
கொழும்பு கோட்டைக்கு

2014 மார்ச் 4 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் அனுராதபுரம், வவுனியா ஊடாக பளை வரை பயணிக்கின்றன.[3]

Remove ads

சேவைகள்

2013 செப்டம்பர் 14 முதல் நாள்தோறும் கொழும்பில் இருந்து கிளிநொச்சி வரை யாழ்தேவி, நகரிடை விரைவு வண்டி (இன்டர்சிட்டி), மற்றும் இரவுத் தபால் வண்டி ஆகிய பயணிகள் சேவைகள் இடம்பெறுகின்றன.[4]

  • தினமும் காலை 5.45க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் யாழ்தேவி பகல் 12.35 மணிக்கு கிளிநொச்சியை சென்றடைகின்றது.
  • தினமும் காலை 6.00 மணிக்கு யாழ்தேவி கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு பகல் 1.00 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடைகின்றது.
  • தினமும் காலை 6.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் நகரிடை விரைவு வண்டி காலை 11.50 க்கு கிளிநொச்சியை சென்றடையும். இதே வண்டி பிற்பகல் 2.10 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு இரவு 7.15 க்கு கொழும்பு கோட்டையை வந்தடைகின்றது.
  • இரவு 8.15 க்கு புறப்படும் தபால் பயணிகள் வண்டி அதிகாலை 4.10 க்கு கிளிநொச்சியை சென்றடைகின்றது. இரவு 8.30 க்கு கிளிநொச்சியிலிருந்து புறப்படும் தபால் வண்டி அதிகாலை 4.35 க்கு கொழும்பு கோட்டையை வந்தடைகின்றது.[4]
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads