மாஜுலி மாவட்டம்

அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

மாஜுலி மாவட்டம்map
Remove ads

மாஜுலி மாவட்டம் (Majuli district)[1]வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் வடகிழக்கில் மேல் அசாம் கோட்டத்தில், பிரம்மபுத்திரா ஆற்றில் அமைந்த பெரிய தீவான மாஜுலியை 2016ஆம் ஆண்டில் மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டது..[2].[3]ஜோர்ஹாட் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாஜுலி மாவட்டம் 8 செப்டம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது.[4] இதன் நிர்வாகத் தலைமையிடம் கர்மூர் ஆகும்.இம்மாவட்டம் மிசிங் தன்னாட்சிக் குழுவில் உள்ளது.[5]

விரைவான உண்மைகள் மாஜுலி மாவட்டம், நாடு ...
Remove ads

பொருளாதாரம்

இம்மாவட்டத்தின் முதன்மை பொருளாதாரம் நெல் பயிரிடுதல் மற்றும் பருத்தி மற்றும் பட்டுத் துணி நெசவு ஆகும். பிரம்மபுத்திரா ஆற்றில் மீன் பிடித்தல், மட்பாண்டம் செய்தல் மற்றும் பால்பண்ணை ஆகியவை பிற தொழில்கள் ஆகும். பரணிடப்பட்டது 2017-05-01 at the வந்தவழி இயந்திரம்</ref>

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மாஜுலி மாவட்ட மக்கள் தொகை 1,67,304 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 955 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 23,878 (14.27%) மற்றும் 77,603 (46.38%) ஆக உள்ளனர்.[6] Hinduism is the predominant religion, practiced by 99.04% of the population.[7] இம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையாக வைணப் பிரிவான ஏகசரண தர்மத்தைப்[8] பின்பற்றுகின்றனர். இம்மாவட்டத்தில் அசாமிய மொழி 54.47%, மிசிங் மொழி[9] 41.01%, வங்காள மொழி 1.66%, தேவ்ரி மொழி[10] 1.22%, இந்தி மொழி 0.90%, நேபாளி மொழி 0.46% மற்றும் பிற மொழிகள் 1.64% மக்கள் பேசுகின்றனர்.[11]

Remove ads

அரசியல்

இம்மாவட்டம் மாஜுலி சட்டமன்றத் தொகுதி மற்றும் லக்கிம்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads