மாண்டு, மத்தியப் பிரதேசம்

மத்தியப்பிரதேச பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாண்டு (Mandu) அல்லது மாண்டவ்காட் என்பது தார் மாவட்டத்தின் இன்றைய மாண்டவ் பகுதியில் உள்ள ஒரு பழங்கால நகரமாகும். இது இந்தியாவின் மேற்கு மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியில் தார் நகரிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 11 ஆம் நூற்றாண்டில், மார்டு தரங்காகத் அல்லது தரங்கா இராச்சியத்தின் துணைப் பிரிவாக இருந்துள்ளது.[1] இந்தோரிலிருந்து சுமார் 100 கி.மீ (62 மைல்) தொலைவில் உள்ள பாறைகள் நிறைந்த இந்த கோட்டை நகரம் அதன் கட்டிடக்கலைக்காக கொண்டாடப்படுகிறது.

Remove ads

வரலாறு

தலன்பூரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு (மாண்டுவிலிருந்து சுமார் 100 கி.மீ) சந்திர சிம்மன் என்ற வணிகர் மண்டப துர்காவில் அமைந்துள்ள பார்சுவநாதர் கோவிலில் சிலையை நிறுவியதாகக் கூறுகிறது. "துர்க்" என்பதற்கு "கோட்டை" என்று பொருள், "மண்டு" என்ற வார்த்தை "மண்டபம்", "மண்டபம், கோயில்" ஆகியவற்றின் பிரகிருத நீட்சியாகும்.[2] கல்வெட்டு 612 விக்ரம் நாட்காடி (பொ.ச. 555) தேதியிடப்பட்டடுள்ளது. இது 6 ஆம் நூற்றாண்டில் மண்டு ஒரு செழிப்பான நகரமாக இருந்தது என்பதைக் குறிக்கிறது.[3]

10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில் பரமார்களின் கீழ் மாண்டு முக்கியத்துவம் பெற்றது. 633 மீட்டர் (2,079 அடி) உயரத்தில் அமைந்துள்ள மாண்டு நகரம், விந்திய மலைத்தொடரில் 13 கி.மீ (8.1 மைல்) வரை நீண்டுள்ளது. அதே நேரத்தில் வடக்கே மால்வாவின் பீடபூமியையும் தெற்கே நருமதை நதியின் பள்ளத்தாக்கையும் கண்டும் காணாதுள்ளது. இது கோட்டை தலைநகராக பரமராக்களுக்கு இயற்கை அரணாக செயல்பட்டுள்ளது. "மண்டப-துர்கா" என, இரண்டாம் ஜெயவர்மன் தொடங்கி பரமரா மன்னர்களின் கல்வெட்டுகளில் மாண்டுவை அரச குடியிருப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயவர்மன் அல்லது அவரது முன்னோடி ஜெய்துகி அண்டை இராச்சியங்களின் தாக்குதல்களால் பாரம்பரிய பரமாரா தலைநகர் தாராவிலிருந்து மாண்டுவுக்கு மாறியிருக்கலாம். தில்லியின் சுல்தான் நசீர்-உத்-தினின் தளபதியான பல்பான் இந்த சமயத்தில் பரமாரா பிரதேசத்தின் வடக்கு எல்லையை அடைந்தார். அதே நேரத்தில், பரமாரர்கள் தியோகிரியின் யாதவ மன்னர் கிருஷ்ணர் மற்றும் குஜராத்தின் வாகேலா மன்னர் விசலதேவா ஆகியோரிடமிருந்தும் தாக்குதல்களை எதிர்கொண்டனர். சமவெளிகளில் அமைந்துள்ள தாராவுடன் ஒப்பிடும்போது, ​​மாண்டுவின் மலைப்பாங்கான பகுதி ஒரு சிறந்த தற்காப்பு நிலையை வழங்கியிருக்கும்.

1305 ஆம் ஆண்டில் , தில்லியின் முஸ்லீம் சுல்தான் அலாவுதீன் கில்சி, பரமாரா பிரதேசமான மால்வாவைக் கைப்பற்றினார். மால்வாவின் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநரான அய்ன் அல்-முல்க் முல்தானி, பரமாரா மன்னர் மகாலகதேவனை மாண்டுவிலிருந்து வெளியேற்றவும், அந்த இடத்தை "துரோகத்தின் வாசனையிலிருந்து" தூய்மைப்படுத்தவும் அனுப்பப்பட்டார். ஒரு உளவாளியின் உதவியுடன், முல்தானியின் படைகள் கோட்டைக்குள் ரகசியமாக நுழைய ஒரு வழியைக் கண்டுபிடித்தன. 1305 நவம்பர் 24 அன்று தப்பி ஓட முயன்றபோது மகாலகதேவன் கொல்லப்பட்டார்.

Remove ads

குரி வம்சம்

1401 இல் தைமூர் தில்லியைக் கைப்பற்றியபோது, மால்வாவின் ஆளுநரான ஆப்கானிய திலாவர் கான் தனக்குச் சொந்தமான ஒரு சிறிய இராச்சியத்தை அமைத்து குரி வம்சம் நிறுவினார்,[4]  அவரது மகன், கோசன் ஷாவிடமிருந்து தலைநகரை தாரிலிருந்து மாண்டுவுக்கு மாற்றி அதன் மிகப் பெரிய மகிமைக்கு உயர்த்தினார். அவரது மகனும், குரி வம்சத்தின் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்சியாளருமான முகமது, இராணுவவாத முகமது கில்சியால் கொல்லப்படும் வரை ஓராண்டு மட்டுமே ஆட்சி செய்தார்.

Remove ads

கில்சி வம்சம்

முகமது கில்சி மால்வாவின் கில்சி வம்சத்தை (1436-1531) நிறுவி அடுத்த 33 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார். இருப்பினும், அவரது ஆட்சியின் கீழ் தான் மால்வா சுல்தானகம் அதன் மிக உயர்ந்த உயரத்தை எட்டியது. அவருக்குப் பிறகு அவரது மகன் கியாஸ்-உத்-தின் 1469 இல் அடுத்த 31 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[4] அவர் ஒரு பெரிய அந்தப்புரம் ஒன்று வைத்திருந்தார். ஆயிரக்கணக்கான பெண்களை தங்க வைப்பதற்காக ஜகாஸ் மகால் என்பதைக் கட்டினார். கியாஸ்-உத்-தினின் 80 ஆவது வயதில், அவரது மகன் நசீர்-உத்-தின் கொன்றார்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads