இந்தியாவின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி (Official Opposition-India) என்பது மேல் அல்லது கீழ் சபைகளில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்ற அரசியல் கட்சியாகும். மேல் அல்லது கீழ் சபைகளில் முறையான அங்கீகாரம் பெற, சம்பந்தப்பட்ட கட்சியினர் அவையின் மொத்த பலத்தில் குறைந்தது 10% உறுப்பினர்களுடன் இருக்க வேண்டும்.[1] ஒரு கட்சி 10% இடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். கூட்டணியின் எண்ணிக்கை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இந்திய மாநில சட்டமன்றங்களில் பலவும் இந்த 10% விதியேப் பின்பற்றுகின்றன. மீதமுள்ளவை மாநில அவைகள், அந்தந்த அவைகளின் விதிகளின்படி தனிப்பெரும் எதிர்க்கட்சியையே விரும்புகின்றன.
Remove ads
பங்கு
அன்றைய அரசாங்கத்தைக் கேள்விக்குள்ளாக்குவதும், பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறுவதும் எதிர்க்கட்சிகளின் முக்கிய பணியாகும். ஆளுங்கட்சியின் தவறுகளைச் சரிசெய்ய எதிர்க்கட்சிகள் உதவுகின்றன. நாட்டு மக்களின் நலன்களை நிலைநாட்டுவதில் எதிர்க்கட்சிகளுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. நாட்டு மக்களுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது என்பதை எதிர்க்கட்சி உறுதிப்படுத்த வேண்டும்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் பங்கு என்பது ஆளும் அல்லது மேலாதிக்கக் கட்சியின் அதிகப்படியானவற்றைச் சரிபார்ப்பதே தவிர, முற்றிலும் விரோதமாக இருக்கக்கூடாது. ஆளுங்கட்சியினரின் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் செயல்பாடுகளில் எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத்தில், எதிர்க்கட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது, அதாவது:
- அரசாங்கத்தின் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனம்.
- ஆளுங்கட்சியின் தன்னிச்சையான போக்கைக் கட்டுப்படுத்துதல்.
- மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாத்தல்.
- ஆட்சி அமைக்க ஆயத்தம்.
- பொதுக் கருத்து வெளிப்பாடு.
Remove ads
தற்போதைய அலுவல்பூர்வ எதிர்க்கட்சிகள்
பாராளுமன்றம்
இது இந்திய நாடாளுமன்றத்தில் தற்போதைய எதிர்க்கட்சிகளின் பட்டியல்:
சட்டப் பேரவைகள்
இது இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகளின் சட்டப் பேரவைகளில் தற்போதைய எதிர்க்கட்சிகளின் பட்டியல்:[2]
சட்ட மேலவை
இது இந்திய மாநிலங்களின் சட்ட மேலவைகளில் தற்போதைய எதிர்க்கட்சிகளின் பட்டியல்:
Remove ads
மேலும் பார்க்கவும்
- தற்போதைய இந்திய எதிர்க்கட்சி தலைவர்களின் பட்டியல்
- தற்போதைய இந்திய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads