மார்ட்டினா நவரத்திலோவா

From Wikipedia, the free encyclopedia

மார்ட்டினா நவரத்திலோவா
Remove ads

மார்ட்டினா நவரத்திலோவா (Martina Navratilova (Czech: Martina Navrátilová உச்சரிப்பு[ˈmarcɪna ˈnavraːcɪlovaː];; {பிறப்பு: அக்டோபர் 18, 1956) என்பவர் முன்னாள் டென்னிசு வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார்.[1][2][3]செக்கோசிலோவாக்கியாவில் பிறந்த இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியுரிமையைப் பெற்றார்.[4] 2005 ஆம் ஆண்டில் டென்னிஸ் எனும் இதழானது 1965 முதல் 2005 வரையிலான காலகட்டங்களில் சிறந்த பெண் டென்னிசு வீரர் என இவரைக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அனைத்துக் காலங்களுக்குமான சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[5][6]

விரைவான உண்மைகள் நாடு, வாழ்விடம் ...

நவரத்திலோவா மகளிர் டென்னிசு சங்கத்தின் புள்ளிவிவரத்தின் படி 332 வாரங்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தில் நீடித்தார். மேலும் இரட்டையர் பிரிவில் 237 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்தார். தற்போது வரை டென்னிசு வரலாற்றில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 200 வாரங்களுக்கும் மேலாக முதல் இடத்தில் நீடித்தது இவர் மட்டுமே ஆவார். இவர் ஏழு முறைகள் ஒற்றையர் பிரிவில் ஆண்டு முழுவதும் முதல் இடத்தில் நீடித்தார், மேலும் அதில் ஐந்து முறைகள் தொடர்ச்சியாக முதல் இடத்தில் நீடித்தார். இரட்டையர் பிரிவில் இந்தச் சாதனையானது ஐந்து முறையும் அதில் மூன்றுமுறை தொடர்ச்சியாகவும் முதல் இடத்தில் நீடித்தார்.[1]

நவரத்திலோவா 18 முறைகள் பெருவெற்றித் தொடரில் (டென்னிசு) கோப்பையில் வெற்றி பெற்றுள்ளார். 31 முறைகள் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) வெற்றி பெற்றுள்ளார்.[1][2] மேலும் 10 முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஒரு தனி நபர் அதிக முறை ஆண் மற்றும் பெண் பிரிவில் பெரு வெற்றித் தொடரில் வெற்றி பெற்றவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 12 முறைகள் விம்பிள்டன் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.[2] அதில் 1982 முதல் 1990 வரையிலான ஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக விம்பிள்டன் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். மேலும் ஒன்பது முறை தொடர்ச்சியாக வாகையாளராகத் திகழ்ந்தார். இதன் மூலம் 8 முறை தொடர்ந்து இந்தச் சாதனை புரிந்த ஹெலன் வில்ஸ் மூடியின் சாதனையை இவர் முறியடித்தார்.[7]

நவரத்திலோவா மற்றும் பில்லீ ஜீன் கிங் ஆகிய இருவரும் தலா 20 விம்பிள்டன் கோப்பையை வென்றுள்ளனர்.[4] டென்னிசு வரலாற்றிலேயே அதிக முறை ஒற்றையர் பிரிவில் 167 முறைகள் வாகையாளராகவும் , இரட்டையர் பிரிவில் 177 முறைகள் வாகையாளராகவும் திகழ்ந்து சாதனை புரிந்துள்ளார்.[4] இதுவரையிலான தொழில் முறை டென்னிசு போட்டிகளில் 1982 முதல் 1986 வரை தரவரிசையில் முதல் இடத்தில் நீடித்த இவரின் சாதனை முறியடிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளில் நடந்த ஒற்றையர் பிரிவில் 442 போட்டிகளில் 428 இல் வெற்றி பெற்றுள்ளார். ஒரு ஆண்டில் மூன்றிற்கும் குறைவான போட்டிகளில் தான் இவர் தோல்வி அடைந்துள்ளார். இவரின் வெற்றி சராசரி 96.8 விழுக்காடு ஆகும். தான் ஒரு சமபாலுறவாளர் என்பதில் வெளிப்படையாக இருந்தவர்.[8]

Remove ads

விருதுகள்

பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு வாகையாளர் விருதினை 1979, 1982, 1983, 1984, 1985, 1986 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார்.[9] பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு ஆன்டுதோறும் வழங்கக் கூடிய சிறந்த வீரர் விருதினை 1978, 1979, 1982, 1983, 1984, 1985, 1986 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார்.[9] பிபிசியின் விளையாட்டு வீரர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை 2003 ஆம் ஆண்டில் வழங்கியது. செக் குடியரசு சிறந்த வீரருக்கான விருது 2006 இல் பெற்றார்.[9]

Remove ads

பெருவெற்றித் தொடர்

ஒற்றையர் ஆட்ட காலக்கோடு

மேலதிகத் தகவல்கள் கோப்பை, 1995–03 ...

– = போட்டி நடைபெறவில்லை

A = போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

வெவி = கலந்துகொண்ட போட்டிகளும் அதில் வென்ற போட்டிகளும்

குறிப்பு: 1977ம் ஆண்டில் சனவரி, டிசம்பர் ஆகிய மாதங்களில் ஆத்திரேலிய ஓப்பன் நடந்தது. 1986 ம் ஆண்டு நடைபெறவில்லை.

பெருவெற்றித் தொடர் - ஒற்றையர்: 32 (18–14) முடிவு

மேலதிகத் தகவல்கள் முடிவு, ஆண்டு ...

பெருவெற்றித் தொடர் - இரட்டையர்: 37 (31–6)

மேலதிகத் தகவல்கள் முடிவு, ஆண்டு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads