மிர்பூர் சமணக் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிர்பூர் சமணக் கோயில் (Mirpur Jain Temple), இந்தியாவின் மாநிலமான இராஜஸ்தானின், சிரோகி மாவட்டத்தில் உள்ள மிர்பூர் கோட்டை நகரத்தில் அமைந்த நான்கு சமணக் கோயில்களின் தொகுதியாகும். இக்கோயில் மூலவரான பார்சுவநாதர் ஐந்து தலை நாகங்களுடன் அமர்ந்த நிலையில் உள்ளார்.
Remove ads
அமைவிடம்
மிர்பூர் சமணர் கோயில் இராஜஸ்தானின் சிரோகி நகரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும்; அபு மலை சாலையிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
வரலாறு
மிர்பூர் சமணக் கோயில்கள் கிபி 9ஆம் நூற்றாண்டில் இராஜபுத்திர மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயில் 13வது நூற்றாண்டில், குஜராத் சுல்தான் முகமது பேக்டா என்பவரால் அழிக்கப்பட்டது. 15ம் நூற்றாண்டில் இக்கோயில் மீண்டும் கட்டி மறுசீரமைக்கப்பட்டது.
சமண சமய 23வது சமணத் தீர்த்தரங்கரான பார்சுவநாதருக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலை, சுவேதாம்பரர் சமணப் பிரிவின் சேத் கல்யாண்ஜி பரமானந்தஜி பீடம் இக்கோயிலை நிர்வகித்து வருகிறது. இக்கோயில் தில்வாரா சமணர் கோயில் மற்றும் ராணக்பூர் சமணர் கோயில்கள் போன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது கோயிலின் முக்கியப் பகுதி, மண்டபத்துடன் கூடிய உயர்ந்த பீடத்தில் உள்ளது. பீடம் அழகிய சிற்பங்களுடன் கூடியுள்ளது.[1][2]
Remove ads
இதனையும் காண்க
படக்காட்சிகள்
- மிர்பூர் சமணக் கோயில்
- மிர்பூர் கோயில் சுவர்
- கோயில் விமானம்
- அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுவர்கள்
- கோயில் தூண்கள்
- கலைநயத்துடன் கூடிய கோயில் குவிமாடம்
- நாக வாகனத்தில் பத்மாவதி தாயார்
- கோயில் சுவரில் இந்திரனின் சிற்பம்
- கோயில் சுவரில் சிவ - சங்கரியின் சிற்பம்
- சமணத் தேவதைகள்
- சுபர்சுவநாதர் கோயில்
- மகாவீரர் கோயில்
- 13ம் நூற்றாண்டின் மகாவீரரின் பளிங்குச் சிற்பம்
- சாந்திநாதர் கோயில்
- முதன்மைக் கோயில் நுழைவாயில் கதவு
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads