ராயகடா மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராயகடா மாவட்டம் (Rayagada) ஒடிசா மாநிலத்தின் தென் பகுதியில் கனிம வளங்கள் நிறந்துள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] அக்டோபர் 2, 1992 முதல் ராயகடா தனி மாவட்டமாக அங்கீகாரம் பெற்றது[2]. இந்த மாவட்டத்தில் பெரும்பகுதி பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். சௌரா இன மக்களுக்கு அடுத்தபடியாக திராவிட மொழி பேசும் கோந்தாஸ் இன மக்கள் இங்கு அதிகம் வாழ்கின்றனர். இங்கு ஒடியா மொழி தவிர சில ஆதிவாசி மொழிகளும் பேசப்படுகின்றன. குறிப்பாக குய், கோந்தா, சௌரா ஆகிய மொழிகள் இந்த மாவட்டத்தில் உள்ளவர்களால் பேசப்படுகின்றன.
இந்த மாவட்டம் மொத்தம் 7, 584 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பதினொரு தேர்தல் தொகுதிகள் உள்ளன.
இங்கு வேளாண்மை மற்றும் அது தொடர்பான வேலைகளே வருவாய் தரும் முக்கியத் தொழிலாக உள்ளது. நெல், கோதுமை, கேழ்வரகு, பாசிப் பயறு, உளுந்து , மக்காச்சோளம், மற்றும் வற்றாளை ஆகியவை இங்கு முக்கியப் பயிர்களாக உள்ளன.
Remove ads
வரலாறு
கிமு 3-ஆம் நூற்றாண்டில் அசோகப் பேரரசுவின் ஆட்சிக் காலத்தில் கலிங்க சாம்ராஜ்ஜியத்தின் (பண்டைய ஒடிசா) கீழ் இருந்தது. நாகவல்லி மற்றும் பன்சாத்ரா மலைத் தொடர்களுக்கு இடையே கிடைக்கக் கூடிய மசாலாப் பொருள் மிகவும் புகழ் பெற்றது ஆகும் [3].ராஷ்டியாக்களை வெற்றி கொண்ட பிறகு கலிங்க நாட்டை ஆட்சி செய்த ஒரே ஆரிய அரசன் காரவேலன் ஆவார்.[4]
இந்த மாவட்டம் தற்போது சிவப்பு தாழ்வாரம் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.[5]
நிலவியல்
இந்த மாவட்டம் மொத்தம் 7, 584 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பாபிலிமலி, அழிமலி, திக்ரிமலி, போன்ற மலைகள் உள்ளன. இங்குள்ள மலைகளில் அரிய வகையான மூலிகைத் தாவரங்கள் உள்ளன.
பொருளாதாரம்
கடந்த ஆறு தசாப்தங்களாக ஐ எம் எஃப் ஏ மற்றும் ஜே கே காகித ஆலைகள் ராயகடா மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிபுரிகின்றன.
இங்கு கனிமங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. குறிப்பாக பாக்சைட், சிலிக்கான் ஆகியவை பெருமளவில் கிடைக்கின்றன. அண்மையில் உள்ள புள்ளியியல் படி உலகத்தில் உள்ள பாக்சைட்டு அளவில் 56 விழுக்காடு இந்தியாவில் உள்ளதாகவும் அதில் 62 விழுக்காடு ஒடிசாவில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் 84 விழுக்காடு ராயகடாவில் உள்ளது. அதனால் தான் பிர்லா மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய தொழிற்சாலைகள் ராயகடாவில் தொழில் துவங்க விருப்பம் தெரிவிக்கின்றன.
உணவக துறைக்கான இலக்கிடமாக ராயகடா உள்ளது. குறிப்பாக ஜோய்ஹிமஹால், தேஜஸ்வினி, கபிலாஸ் மற்றும் ராஜ் பவன் ஆகியவைகள் உள்ளன.
போக்குவரத்து
ராயகடா தொடருந்து நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா, ஐதராபாத்து (இந்தியா), புவனேசுவரம், ராய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத், மும்பை,ஜம்சேத்பூர், ஜோத்பூர், புது தில்லி மற்றும் பல முக்கிய நகரங்களுக்கும் தொடருந்துச் சேவை உள்ளது. குனுப்பூர் தொடருந்து நிலையமும் மிக முக்கியமான தொடருந்து நிலையம் ஆகும்.
மக்கள் தொகையியல்
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி ராயகடா மாவட்டத்தின் மக்கள் தொகை 9,67,911 ஆகும்.[6] இது பிஜி நாட்டின் மக்கள் தொகை [7] மற்றும் அமெரிக்காவின் மொன்ட்டானா மாகாணத்தின் மக்கள் தொகைக்கு சமமானதாக உள்ளது.[8] மக்கள் தொகை அடிப்படையில் மொத்தமுள்ள 640 இல் 454 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.[6] சதுர கிலோ மீட்டருக்கு 136 பேர் இருக்கிறார்கள் (350 / சதுர மைல்).[6] 2001-2011 கால தசாப்தத்தில் இதன் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.74% ஆகும்.[6] ராயகடாவின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1048 பெண்கள் உள்ளனர்.[6] எழுத்தறிவு வீதம் 50.88 விழுக்காடு ஆகும்.[6][9]
Remove ads
உட்பிரிவுகள்
இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு குணுபூர், பிஸ்ஸம்-கட்டக், ராயகடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் கோராபுட் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads