ரியாசன் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரியாசன் மாகாணம் (Ryazan Oblast, உருசியம்: Ряза́нская о́бласть, ரிசான்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் ரியாசன். மக்கள்தொகை 1,154,114 (2010).[7]
Remove ads
புவியியல்
இம்மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே விளதீமிர் மாகாணம், வடகிழக்கே நீசுனி நோவ்கோரத் மாகாணம், கிழக்கே மொர்தோவியா, தென்கிழக்கே பென்சா மாகாணம், தெற்கே தம்போவ் மாகாணம், தென்மேற்கே லீபெத்சுக் மாகாணம், மேற்கே தூலா வட்டாரம், வடமேற்கே மாசுக்கோ மாகாணம் ஆகியன அமைந்துள்ளன.

மக்கள்தொகை
2010 கணக்கெடுப்பின் படி, மக்கள்தொகை 1,154,114[7]. இவர்களில் உருசியர்கள் - 95.1%, உக்ரைனியர் - 0.8%, ஆர்மீனியர்கள் - 0.5%, மோர்துவின்கள் - 0.5%, தத்தார்கள் - 0.5%, அசெரிகள் - 0.4%, உசுபெக்குகள் - 0.3%, ஏனையோர் - 1.9%[11]
சமயம்
2012 அதிகாரபூர்வ தரவுகளின்படி,[12][13] 63% உருசிய மரபுவழித் திருச்சபையினர், 3% பொதுக் கிறித்தவர்கள், 1% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 1% முஸ்லிம்கள், 1% சிலாவிக் பழங்குடி சமயத்தவர்கள், 15% சமய சார்பற்றவர்கள், 9% is இறைமறுப்பாளர்கள் ஆவர்.[12]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads