ரெம்பாவ் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரெம்பாவ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Rembau Railway Station; மலாய்: Stesen Keretapi Rembau) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், ரெம்பாவ் மாவட்டம், ரெம்பாவ் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். ரெம்பாவ் நகர்ப்பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், ரெம்பாவ் நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது. சிரம்பான்-கிம்மாஸ் மின்மயமாக்கப்பட்ட இரட்டை கண்காணிப்பு திட்டத்தின் கீழ் இந்த நிலையம் மேம்படுத்தப்பட்டது.[1]
பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. 2013-ஆம் ஆண்டில், இந்த நிலையத்தில் கேடிஎம் கொமுட்டர் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. [2]
Remove ads
பொது
முன்பு, இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி மற்றும் கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகளால் சேவை செய்யப்பட்டது. சிரம்பான் மற்றும் கிம்மாஸ் இடையே இரட்டை தடம் மற்றும் மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிலையம் கட்டப்பட்டது. மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[3]
தொடக்கத்தில், 2011-ஆம் ஆண்டில் மட்டுமே சிரம்பான் வழித்தடம், சுங்கை காடுட் பயணிகள் தொடருந்து நிலையம் வரையில் நீட்டிக்கப்பட்டது. பின்னர் 2012-ஆம் ஆண்டில், ரெம்பாவ் தொடருந்து நிலையம் வரையில் சிரம்பான் வழித்தடம் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் சுங்கை காடுட் தொடருந்து நிலையத்திலேயே பெரும்பாலான தொடருந்துகள் தங்களின் சேவைகளை நிறுத்திக் கொண்டன.[4]
சிரம்பான் வழித்தடம்
2015-ஆம் ஆண்டில் சிரம்பான் வழித்தடம் சேவை புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் வரை நீட்டிக்கப்பட்டது. அந்தச் சிற்றிடைப் போக்குவரத்துச் சேவை அப்போது ஓர் இடைவழிச் சேவையாக இருந்தது. 2011-ஆம் ஆண்டில் கிம்மாஸ் வரை இருந்த சிற்றிடைப் போக்குவரத்துச் சேவை தம்பின் வரை குறைக்கப்பட்டது.[5]
புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் வரையிலான சிற்றிடைப் போக்குவரத்துச் சேவை மொத்தமாகக் கலைக்கப்பட்டது. இப்போதைய பயணிகள் தொடருந்துகள் கோலாலம்பூரில் இருந்து சுங்கை காடுட் மற்றும் தம்பின் வரை செல்கின்றன. ரெம்பாவ் தொடருந்து நிலையம், ரெம்பாவ் நகரத்திற்கு மட்டும் அல்லாமல் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமப்பகுதிகளுக்கும் சேவை செய்கிறது.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads