லகிரு திரிமான்ன
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லகிரு திரிமான்ன (Lahiru Thirimanne,சிங்களம்: ළහිරු තිරිමාන්න பிறப்பு: செப்டம்பர் 8 1989), இலங்கை, கொழும்பு, மொரட்டுவயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இடதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித விரைவு வீச்சாளர் ஆவார்.[1]
Remove ads
சர்வதேச போட்டிகள்
சனவரி 5, 2010 இல் டாக்காவில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணி,இந்தியத் துடுப்பாட்ட அணி மற்றும் இலங்கைத் துடுப்பாட்ட அணி ஆகிய நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.இந்தத் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[2] 38 பந்துகளில் 22ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இலங்கை அனி வென்றது.[3] சூன் 16,2011 இல் சௌதாம்டனில் நடந்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். திலகரத்ன டில்சான் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[4] போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 62 பந்துகளில் இவர் 10 ஓட்டங்கள் எடுத்து ஜேம்ஸ் அண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.[5] பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 157 பந்துகளில்38 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[6]
அடிலெய்டு நீள்வட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார்.[7] 2014 ஆம் ஆண்டில் நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தத் தொடரில் திலகரத்ன டில்சான் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு துவக்க வீரராக களம் இறஙக் வாய்ப்பு கிடைத்தது. வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் குசல் பெரேராவுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் நூறு ஓட்டங்கள் எடுத்தார். இந்தத் தொடரில் இலங்கை அணி ஐந்தாவது முறையாக வென்று சாதனை படைத்தது. இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இவர் முதலிடம் பிடித்தார். இவரின் சராசரி 55.80 ஆகும். இஞ்சியோனில் நடைபெற்ற 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அந்த அணியை வீழ்த்தி கோப்பை வென்றார்.
நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். சனவரி 23, 2015 இல் நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அஞ்செலோ மத்தியூஸ் காயம் காரணமாக விலகியதால் இவர் தலைவராக நியமிக்கப்பட்டார். துவக்கவீரராக களமிறங்கிய இவர் 45 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் 2 இலக்குகளை வீழ்த்தினார். ஆனால் இந்தப்போட்டியில் 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. 6 ஆவது போட்டியில் தோல்வியடைந்தது. எழாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 4-2 எனும் கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை வென்றது.
Remove ads
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads