லக்கி மார்வாத் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லக்கி மார்வாத் மாவட்டம் (Lakki Marwat) (பஷ்தூ: لکی مروت ولسوالۍ, Urdu: ضلع لکی مروت), பாக்கித்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இது பன்னு மாவட்டத்தின் சில வட்டங்களைக் கொண்டு 1 சூலை 1992 அன்று நிறுவப்பட்ட்து. இதன் ஆட்சித் தலைமையிடம் லக்கி மார்வாத் நகரம் ஆகும்.
Remove ads
அமைவிடம்
கைபர் பக்துன்வா மாகாணத்த்தின் தெற்கில் அமைந்த லக்கி மார்வாத் மாவட்டத்தின் வடக்கில் கரக் மாவட்டம், பன்னு மாவட்டம் தெற்கில் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம், மேற்கில் தாங்க் மாவட்டம், தெற்கில் தேரா இஸ்மாயில் கான் மாவட்டம், மேற்கில் பஞ்சாப் மாகாணத்தின் மியான்வாலி மாவட்டம் ஆகியன எல்லைகளாக உள்ளன.
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், லக்கி மார்வாத் சுதேச சமஸ்தானமாக விளங்கியது.
புவியியல்
இம்மாவட்டத்தில் 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் உயரமுள்ள மார்வாத் மலைத்தொடர்களும், நீரோடைகளும், சமவெளிகளும் நிறைந்துள்ளன.
மாவட்ட ஆட்சி
லக்கி மார்வாத் மாவட்டம் மூன்று வட்டங்களைக் கொண்டது. அவைகளாவன:
- லக்கி மார்வாத் வட்டம்
- சராய் நௌரங் வட்டம்
- காசனிகேல் வட்டம்
இம்மாவட்ட மூன்று நகராட்சிகளை கொண்டுள்ளது.[3] மாவட்டத்தில் மவுசாசா எனும் வருவாய் அலகுகள் 157 உள்ளன.[3]
மாகாணச் சட்டமன்றம்
இம்மாவட்டத்திலிருந்து கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டுள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 9,02,138 பேர் ஆவர். அதில் ஆண்கள் 455,402 பேரும் பெண்கள் 446,732 பேருமாக உள்ளனர். எழுத்தறிவு 44.13% கொண்டுள்ளது. 90.11% விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 206 பேர் மட்டுமே உள்ளனர்.[2] இம்மாவட்டத்தில் பஷ்தூ மொழியை 98.68% மக்கள் பேசுகின்றனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads