கரக் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

கரக் மாவட்டம்map
Remove ads

கரக் மாவட்டம் (Karak District) (பஷ்தூ: کرک ولسوالۍ, Urdu: ضِلع کرکpronounce) பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள பக்துன்வா மாகாணத்தின் தென்மத்திய பகுதியில் அமைந்த மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தெற்கில் கோஹாட் மாவட்டம், வடக்கில் பன்னு மாவட்டம் மற்றும் லக்கி மார்வாத் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. கைபர் பக்துன்வா மாகாணத் தலைநகரம் பெசாவரிலிருந்து 123 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மாவட்டம் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டது.

விரைவான உண்மைகள் கரக் மாவட்டம், கைபர் பக்துன்வா, நாடு ...

3372 சகிமீ பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின், 2017-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள்தொகை 7,06,299 ஆகும்.[2] இம்மாவட்ட மக்களில் 99.7% பஷ்தூ மொழி பேசுகின்றனர். உருது மற்றும் ஆங்கிலம் சிறிதளவில் பேசப்படுகிறது.[3]:24 இம்மாவட்டத்தில் இந்துப்பு குன்றுகள் அதிகம் உள்ளது.

Remove ads

வருவாய் வட்டங்கள்

  • பண்டாஅ தௌத் ஷா வட்டம்
  • கரக் வட்டம்
  • தக்த் -இ- நஸ்ரதி வட்டம்

கிருஷ்ணன் கோயில்

இம்மாவட்டத்தில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயில் டிசம்பர் 2020-இல் அடிப்படைவாத இசுலாமியர்களால் இடித்து, தீவைக்கப்பட்டது.[4]இக்கோயிலை மீண்டும் இரண்டு வாரத்திற்குள் பாகிஸ்தான் அரசு கட்டித் தரவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. [5]மலேசியாவில் உள்ள இந்திய இசுலாமிய மதபோதகரான சாகிர் நாயக், பாகிஸ்தான் போன்ற இசுலாமிய நாடுகளில் பிற சமயத்தினர் கோயில் இருப்பதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். [6]

Remove ads

மாவட்ட நிர்வாகம்

வருவாய் வட்டங்கள்

  • பண்டா தௌத் ஷா வட்டம்
  • கரக் வட்டம்
  • தக்த் -இ- நஸ்ரதி வட்டம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads