லஸ்பெலா மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லஸ்பெலா மாவட்டம் (Lasbela District) (Urdu: لسبیلہ Lasbēla [ləsˈbeːla], Lasi: வார்ப்புரு:Naskh Lasɓēlō [ləsˈɓeːloː], Balochi: لسبݔله Lasbèla [lasˈbeːla]), பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கே அமைந்த பலூசிஸ்தான் மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் உத்தல் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் தெற்குப் பகுதி அரபுக்கடல் ஒட்டியுள்ளது. 6,80,977 மக்கள் தொகையும், 15,153 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட இம்மாவட்டம், கராச்சி நகரத்திற்கு மேற்கே 125 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக பலூச்சி மொழி மற்றும் சிந்தி மொழி பேசப்படுகிறது.ஹிங்கோல் தேசியப் பூங்காவின் ஒரு பகுதி இம்மாவட்டத்தில் உள்ளது.
Remove ads
அமைவிடம்
லஸ்பெலா மாவட்டத்திற்கு மேற்கில் குவாதர் மாவட்டம், தெற்கில் அரபுக்கடல், கிழக்கில் கீர்தார் மலைத்தொடர்களும், வடக்கில் குஸ்தர் மாவட்டம் உள்ளது.
புவியியல்
லஸ்பெலா மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறு போராலி ஆறு ஆகும். பிற ஆறுகள் ஹிங்கோல் மற்றும் போர் ஆகும். இம்மாவட்டத்தின் கிழக்கில் கீர்தார் மலைத்தொடர்களும், மேற்கில் ஹாலா மலைத்தொடர்களும், தெற்கில் அரபிக்கடல் உள்ளது.
தட்ப வெப்பம்
இம்மாவட்டத்தின் கோடைக்கால வெப்பம் 45 °C வரையிலும், குளிர்கால வெப்பம் 10-20 °C வரையிலும் உள்ளது. இதன் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 60–100 மிமீ ஆக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
துணை ஆணயாளர் தலைமையில் நிர்வகிக்கப்படும் லஸ்பெலா மாவட்டம் உத்தல், லக்ரா, பேலா, கன்ராஜ், லியாரி என 5 வருவாய் வட்டங்களும், 22 ஒன்றியக் குழுக்களும் கொண்டுள்ளது.[4]
பொருளாதாரம்
லஸ்பெலா மாவட்டத்தின் தென்கிழக்கில் நாளொன்றுக்கு 120,000 பீப்பாய் அளவிற்கு எரி எண்ணை சுத்திகரிப்பு ஆலை உள்ளது. மேலும் இதனருகில் 1350 மெகா வாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையம் உள்ளது.[5] இம்மாவட்ட மக்களின் முதன்மைத் தொழில் கடல் மீன் பிடித்தல், ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் வேளாண்மை ஆகும். கனிம வளங்கள் அதிகம் கொண்ட இம்மாவட்டத்தில் ஜிப்சம் மற்றும் சுண்ணாம்பு வெட்டி எடுக்கப்படுகிறது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 115,539 குடியிருப்புகள் கொண்ட லஸ்பெலா மாவட்ட மக்கள் தொகை 6,80,977 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 105.04 ஆண்கள் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 36.47% ஆகும்.[6][7]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 30.7% ஆக உள்ளனர்.[8]மக்கள் தொகையில் 3,30,585 (48.55%) பேர் நகர்புறங்களில் வாழ்கின்றனர்[6]
மொழிகள்
இம்மாவட்டத்தில் பலூச்சி மொழி 75.32%, சிந்தி மொழி 9.96%, பிராகுயி மொழி 8.09%, பஷ்தூ மொழி 2.56% மற்றும் பிற மொழிகள் 4.07% மக்கள் பேசுகின்றனர்.
சமயங்கள்
இம்மாவட்டத்தில் இசுலாம் 96.55%, இந்து சமயம் 2.92% கிறித்தவம் 0.37%, பிற சமயங்கள் 0.16% பயில்கின்றனர்.[2]
Remove ads
கல்வி
- லஸ்பெலா வேளாண்மை, நீர் & கடல்சார் அறிவியல் பல்கலைக்கழகம், உத்தல் நகரம்
- பலூசிஸ்தான் உண்டு & உறைவிடக் கல்லூரி, உத்தல் நகரம்
இதனையும் காண்க
நூல் பட்டியல்
- 1998 District census report of Lasbela. Census publication. Vol. 57. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads