குவாதர் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

குவாதர் மாவட்டம்
Remove ads

குவாதர் மாவட்டம் (Gwadar District), பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். தெற்கு பலூசிஸ்தானில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் குவாதர் நகரம். இம்மாவட்டம் மக்ரான் கோட்டத்தில் உள்ளது. அரபிக்கடல் கடற்கரையில் அமைந்த இம்மாவட்டத்தில் குவாதர் துறைமுகம் அமைந்துள்ளது. சீனாவையும், குவாதர் துறைமுகத்தையும் இணைக்கும் சீனா–பாக்கித்தான் பொருளாதார பாதை இம்மாவட்டம் வழியாகச் செல்கிறது.

விரைவான உண்மைகள் குவாதர் மாவட்டம், நாடு ...
Remove ads

அமைவிடம்

பலூசிஸ்தான் மாகாணத்தில் தெற்கில் அமைந்த குவாதர் மாவட்டத்தின் தெற்கில் அரபிக்கடல், வடக்கில் ஈரானின் சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணம், கிழக்கில் லாஸ்பெலா மாவட்டம், மேற்கில் கெச் மாவட்டம் மற்றும் ஆவாரன் மாவட்டங்களும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் குவாதர் வட்டம், ஜிவானி வட்டம், ஓர்மரா வட்டம், பஸ்னி வட்டம், சண்ட்சர் வட்டம் என 5 வருவாய் வட்டங்களும் மற்றும் 18 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.

புவியியல்

.

Thumb
1958க்கு முன்னர் ஓமான் நாட்டின் பகுதியாக இருந்த குவாதர் பகுதி

அரபிக்கடல் ஓரத்தில் 620 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்த குவாதர் மாவட்டம், பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டா நகரத்திற்கு தென்மேற்கில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கு எல்லையாக ஈரானின் சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணம் உள்ளது. ஓமான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த குவாதர் மாவட்டப் பகுதிகளை 1958ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு விலை கொடுத்து பாகிஸ்தானுடன் இணைத்துக் கொண்டது. இம்மாவட்டத்தின் தலைமையிட நகரமான குவாதர் கடற்கரையில் குவாதர் துறைமுகம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குவாதர் மாவட்டததின் மொத்த மக்கள் தொகை 3,05, 160 ஆகும். பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 111 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 50.30% ஆகும். இம்மாவட்ட மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 29.32% ஆக உள்ளது. இம்மாவட்ட மக்கள் தொகையில் 52.12% பேர் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.

சமயங்கள்

குவாதர் மாவட்டத்தில் இசுலாமியர்கள் 99.15% மற்றும் இந்து, கிறித்தவம்,சீக்கியம், பிற சமயத்தினர் 0.85% உள்ளனர்.[2]

மொழிகள்

குவாதர் மாவட்டத்தில் பலூச்சி மொழி 97.66%, சிந்தி மொழி 0.45%, பஞ்சாபி மொழி 0.42%, உருது மொழி 0.4% மற்றும் பிற மொழிகள் 1.07% பேசுகின்றனர்.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads