வங்காளதேசத்தில் இந்து மதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வங்காள தேசத்தில் இந்து சமயம் இரண்டவது பெரிய சமயம் ஆகும். உலகில் அதிக இந்துகள் வசிக்கும் இடத்தில் வங்காளதேசம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதலிரண்டு இடங்களில் இந்தியாவும் நேபாளமும் உள்ளன. வங்காளதேசத்தின் மொத்த மக்கட்தொகையில் 14% பேர் இந்துகள் ஆவார்.[1][சான்று தேவை] பிரிவினைக்கு முன் இந்தியாவோடு வங்காளதேசம் இருந்த காரணத்தினால் இங்குள்ள இந்துகளின் சமய மற்றும் பழக்க வழங்கங்கள் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநில இந்துகளின் பழக்கவழக்கங்களை ஒத்திருக்கும். டாக்காவில் அமைந்துள்ள தாக்கேஸ்வரி கோயில் புகழ் பெற்றது.



Remove ads
இந்து சமய மக்கள்தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வங்காள தேசத்தில் இந்து சமய மக்கள் தொகை 11,379, 000 ஆக இருந்தது. வங்காள தேசத்தில் கோபால்கஞ்ச் மாவட்டம், குல்னா மாவட்டம், தினஜ்பூர் மாவட்டம், சில்ஹெட் மாவட்டம், சுனாம்கஞ்ச் மாவட்டம், மைமன்சிங் மாவட்டம், ஜெஸ்சூர் மாவட்டம், சிட்டகாங் மாவட்டம் மற்றும் தேசியத் தலைநகர் டாக்காவில் இந்துக்கள் பரவலாக வாழ்கின்றனர்.
வங்காள தேசத்தின் கலை, கல்வி, இலக்கியம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் இந்துக்களின் பங்களிப்புகள் அவர்களின் எண்ணிக்கைக்கு மிக அதிகமாகும்.
அரசியலில் இந்துக்கள் அவாமி லீக், வங்காள தேச பொதுவுடமைக் கட்சி மற்றும் ஜாதிய சமாஜ்தாந்திரிக் தளம் போன்ற அரசியல் கட்சிகளை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். ஆனால் இசுலாமிய அடிப்படைவாத அரசியல் கட்சிகளிடமிருந்து இந்துக்கள் விலகியே உள்ளனர்.[2]
இந்துக்கள் தங்களது நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை காத்துக் கொள்வதற்கு வங்காள தேச இந்து நல அறக்கட்டளை செயல்படுகிறது.
1990 ஆண்டு முதல் இந்துகளுக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்தியாவிற்கு அகதிகளாக குடியேறினர். [3]
1941ல் வங்காளதேச மொத்த மக்கள் தொகையில், இந்துக்கள் 28% ஆக இருந்தனர். 1947ல் இந்தியப் பிரிவினையின் போது, இலட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்ததால், 1951ல் இந்து மக்கள் தொகை 22.05% ஆக வீழ்ச்சியுற்றது.
1965 இந்திய - பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானிய அரசு இந்துக்களை எதிரிகளாக கருதினர்.[4][5][6]
1971ல் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரில், இந்துகளுக்கு எதிராக, பாகிஸ்தானிய இராணுவத்தினர் நடத்திய இனப்படுகொலையின் போது, இருபது இலட்சம் இந்துக்கள், வங்காள தேசத்தை விட்டு, இந்தியாவிற்கு அகதிகளாக திரும்பினர். 1974 வங்காள தேச மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்து மக்கள் தொகை 13.5%ஆக வீழ்ச்சியடைந்தது.
வங்காள தேச விடுதலைக்குப் பிறகும், இந்துக்களை இந்தியாவின் கைக்கூலிகள் என்றும் அரசின் மீது நம்பிக்கையற்ற குடிமக்கள் என்றே முத்திரைக் குத்தப்படுகின்றனர். [4]
பியூ ஆய்வு நிறுவனத்தின் (Pew Research Organisation) அறிக்கையின்படி, 2050ல் வங்காள தேச மக்கள்தொகையில், இந்துக்கள் 7% ஆகவும்; இசுலாமிய மக்கள்தொகை 92% ஆக இருக்கும் என கணித்துள்ளனர்.
இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகள்

Remove ads
அரசியல் பிரதிநிதித்துவம்
1974ல் வங்காள தேச மக்கள் தொகையில் 13.5% ஆக இருந்த இந்து சமய மக்கள்தொகை 2001ல் 9.2% ஆக வீழ்ச்சியுற்றது.
300 உறுப்பினர்கள் கொண்ட வங்க தேச நாடாளுமன்றத்தில், இந்து சமயத்தின் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
பெண்களுக்கான 50 நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களில், இந்து சமயப் பெண்கள் சார்பில் ஒருவர் கூட பிரதம அமைச்சரால் நியமிக்கப்படவில்லை.[7]
இந்துக்களின் மீதான கலவரம்,2013
2013 ஆம் ஆண்டு இந்துகள் குறி வைத்து தாக்கப்பட்டனர். இந்துகளின் வீடுகள் சூறையாடப்பட்டன. வழிபாட்டிடங்கள் தாக்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
தாக்கப்பட்ட கோயில்களின் விவரம்
Remove ads
புகழ் பெற்ற வங்காள தேச இந்துக்கள்
அரசியல்
- சுரேந்திர குமார் சின்கா
- தோழர் மோனி சின்கா, வங்காள தேச பொதுவுடமைக் கட்சி நிறுவனச் செயலாளர்.
- புலின் டே
- திரைலோக்கிய சக்கரவர்த்தி
- சுரன்ஜித் சென்குப்தா
தற்போதைய அமைச்சர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- ஜெய சென்குப்தா (அவாமி லீம்)
- சுனம்கஞ்ச் (அவாமி லீம்)
- இரமேஷ் சந்திர சென்
- மனோரஞ்சன் சில் கோபால்
இலக்கியம் மற்றும் ஊடகவியல்
- நிர்மலேந்திர கூன்
- அருணாப் சர்க்கார்
- பிமல் குகா
- அவிஜித் ராய்
- மாணிக் சந்திர சகா
- சுதேஸ் போஸ்
- காஜல் பானர்ஜி
- மகாதேவ் சகா
கலைகள்
- சிசிர் பட்டாச்சாரியா
- நிதின் குண்டு
- பார்த்தா பிரதீம் மஜும்தார்
- சர்க்கார் பிரோதி
- சுனில் தர்
- சிவநாராயணன் தாஸ்
வணிகர்கள்
- ரனதா பிரசாத் சகா (கொடையாளர், குமுதினி கல்லூரி நிறுவனம் மற்றும் குமுதினி மருத்துவ மனை, மிர்சாபூர் மாவட்டம்
கல்வியாளர்கள்
- தேவப்பிரியா பட்டாச்சாரியா, பொருளாதார அறிஞர்
- அஜோய் ராய்
- கபேரி கயான்
- புராபி பாசு
- கட்டியாயநிதாஸ் பட்டாச்சாரியா
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இரண்மய சென் குப்தா
- அருண் குமார் பசக்
- சுவோ ராய்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads