விவியன் ரிச்சர்ட்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர் ஐசக் விவியன் அலெக்சாண்டர் ரிச்சர்ட்ஸ் (Sir Isaac Vivian Alexander Richards) (பி. சென்.ஜான்ஸ் ஆண்டீகா, மார்ச் 7 1952) ஒரு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர்.அவரது இரண்டாவது பெயரான விவியன் அல்லது இன்னும் பரவலாக விவ் அல்லது கிங் விவ் என்று அறியப்பட்டார்.[1] துடுப்பாட்ட வரலாற்றில் தற்போது வரை உள்ள மிகச் சிறந்த மட்டையாளர்கள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2][3][4][5] இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் , டான் பிராட்மன், சோபர்ஸ், ஜாக் ஹாப்ஸ், மற்றும் ஷேன் வோர்ன் ஆகியாருடன் ஒருவராக 2000ஆம் ஆண்டு 100 வல்லுனர்கள் அடங்கியக்குழு ஒன்று வாக்களித்தது.[6]

பெப்ரவரி 2002 ஆம் ஆண்டு விசுடனால் எக்காலத்திலும் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆடியதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] அதே ஆண்டு திசம்பரில், விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அவரை சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரராக மட்டுமன்றி தேர்வுத் துடுப்பாட்டத்திலும் டான் பிராட்மன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இவர்களை அடுத்து மூன்றாவது சிறந்த மட்டையாளராக தெரிவு செய்தது.[8] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருபது முறை ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற முதல் துடுப்பாட்ட வீரர் ஆவார்.
ஒட்டுமொத்தமாக 121 தேர்வுத் துடுப்பாட்டங்களில் 8,540 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.இவரின் தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 50.23 ஆகும். இவற்றில் 24 நூறுகள் (துடுப்பாட்டம்) அடங்கும். துடுப்பாட்ட அணித்தலைவராக விளையாடிய 50 போட்டிகளில் 24 இல் வெற்றி பெற்று 8 போட்டிகளில் மட்டுமே தோற்றுள்ளார். இவர் முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளில் 36,000 ஓட்டங்களுக்கு அதிகமாகவும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் சுமார் 7,000 ஓட்டங்களும் பெற்றுள்ளார். தற்போது ரிச்சர்ட்ஸ் அவ்வப்போது துடுப்பாட்ட விளக்கவுரையாளராகவும், அணியை வழிகாட்டுபவராகவும் உள்ளார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
மார்ச் 7, 1952 இல் சென் ஜோன்ஸ், அன்டிகுவாவும் பர்புடாவில் பிறந்தார். இவரின் பெற்றோர் மால்கம் மற்றும் கிரேடல் ரிச்சர்ட்ஸ் ஆவர். இவர் புனித ஜான் ஆண்கள் பள்ளியிலும் ஆண்டிகுவா கிராமர் (இலக்கணப்) பள்ளியில் உதவித்தொகையுடன் பயின்றார்.[9]
தனது இளம்வயது முதலே துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். இவரின் இளைய சகோதரர் மெர்வின் ரிச்சர்ட்ஸ் மற்றும் டொனால்டு ஆகியோரும் ஆண்டிகுவா அணிக்காக விளையாடினர். அவர்கள்தான் ரிச்சர்ட்சை துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட ஊக்கப்படுத்தினர். துவக்கத்தில் ரிச்சர்ட்ஸ் தனது ஆரம்பகாலங்களில் தனது தந்தை பட் எவான்சன் மற்றும் ஆண்டிகுவா அணித் தலைவராக இருந்த தனது அண்டை வீட்டாரரருடன் பயிற்சி செய்து வந்தார்.[10]
Remove ads
துடுப்பாட்ட வாழ்க்கை
ஜனவரி, 1972 இல் முதல்தர போட்டிகளில் ரிச்ச்ர்ட்ஸ் தனது 19 வயதில் விளையாடினார்.[11] தனது 22 வயதில் அன்டிகுவா பர்புடா , லீவர்ட் ஐலாண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். 1973 இல் இவரின் திறமையை சாமர்செட் துடுப்பாட்ட துணை அவைத்தலைவராக இருந்த லென் கிரீட் கண்டறிந்தார்.[12]
தேர்வுத் துடுப்பாட்டம்
ரிச்ச்ட்ஸ் 1974 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் முதன்முறையாக விளையாடினார். அந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் 192 ஓட்டங்கள் எடுத்தார். அதிலிருந்து மேற்கு இந்தியத் தீவுகளின் சிறந்த துவக்க வீரராக அறியப்படுகிறார்.
1976 ஆம் ஆன்டில் 11 போட்டிகளில் விளையாடினார். அதில் மொத்தம் 1710 ஓட்டங்கள் எடுத்தார். அதில் 7 நூறு (துடுப்பாட்டம்) அடங்கும் . இந்தத் தொடரில் இவரின் சராசரி 90.00 ஆகும். இதன் இரண்டாவது போட்டியில் காளக்காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. பின் ஓவலில் நடைபெற்ற போட்டியில் 291 ஓட்டங்கள் பெற்றார். ஒரு ஆண்டுக் கால காலத்தில் ஒரு துடுப்பாட்ட வீர்ர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் இவரின் சாதனை 30 ஆண்டுகாலங்கள் எவராலும் முறியடிக்கப்படவில்லை. பின் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முகம்மது யூசுப் நவம்பர் 30, 2006 இல் இந்தச் சாதனையை முறியடித்தார்.
சர்வதேச சாதனை
- தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேக சதம் (56 பந்துகளில் சதம்) எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[13] இச்சாதனையை இவர் 1986 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்தார்.[14]. 2014 ஆம் ஆண்டு இச்சாதனை மிஸ்பா-உல்-ஹக்ஆல் சமன் செய்யப்பட்டது. 2016 இல் பிரண்டன் மெக்கல்லம் சமன் செய்தார்.[15]
- தேர்வுத் துடுப்பாட்டத்தில் நேர அடிப்படையில் 6வது அதிவேக சதம்.[81 நிமிடங்களில்)
- தேர்வுத் துடுப்பாட்டத்தில் 1986 இல் மட்டை சராசரி 150 க்கும் அதிகமாக வைத்து நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[16]
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேகமாக 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இவர் 21 போட்டிகளில் இந்தச் சாதனையைப் படைத்தார். பின் இந்தச் சாதனையானது கெவின் பீட்டர்சன், பாபர் அசாம், ஜொனாதன் ட்ரொட், குவின்டன் டி கொக் ஆகியோர்களால் சமன் செய்யப்பட்டது.[17]
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் நான்காவது வீரராக களம் இறங்கி அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். (189*) [18]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads