விஸ்வதேவர்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விஷ்வதேவர்கள் (visvedevas) (சமசுகிருதம்:|विश्वेदेव), ப.ச.ரோ.அ: Viśvēdēva) வேதங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு தெய்வங்களின் முழுமையைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும்.[1] இது புராணங்களில் தெய்வங்களின் குறிப்பிட்ட வகைப்பாட்டையும் குறிக்கிறது.[2]விஸ்வதேவர்கள் சில சமயங்களில் கடவுள்களின் மிகவும் விரிவான கூட்டமாகக் கருதப்படுகிறார்கள். இந்த வகைப்பாட்டில் எந்த தெய்வமும் விடுபட்டதாகக் கூறப்படவில்லை.[3]

இலக்கியம்

ரிக் வேதம்

சமசுகிருத வேத இலக்கிய அறிஞர் ரால்ஃப் டி. எச். கிரிஃபித்தின் கூற்றுப்படி, ரிக் வேதத்தில் கீழ் கண்ட மந்திரங்களில் விஸ்வதேவர்களை குறித்துள்ளது. 1.3, 1.89, 3.54-56, 4.55, 5.41-51, 6.49-52, 7.34-37, 39, 40, 42, 43, 8.27-30, 58, 83 10.31, 35, 36, 56, 57, 61-66, 92, 93, 100, 101, 109, 114, 126, 128, 137, 141, 157, 165, 181.

ரிக் வேத மண்டலம் 3.54.17 மந்திரத்தில் விஸ்வ தேவர்களின் தலைவராக இந்திரனைக் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.[4]

ஞானிகளே, உங்கள் எல்லா மகத்தான தெய்வங்களும் இந்திரனில் நிலைத்திருப்பது இதுவே:(This is, ye Wise, your great and glorious title, that all ye Deities abide in Indra) (ரால்ஃப் டி. எச். கிரிஃபித்தின் ஆங்கில் மொழி பெயர்ப்பு)

ரிக் வேதத்தில் பல் தெய்வங்கள் குறிப்பிட்டாலும், முப்பத்தி மூன்று தேவர்களை மட்டும் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் 11 தேவர்கள் மட்டுமே பூமியிலும், வானத்திலும் மற்றும் சொர்க்கத்தில் வாசம் செய்கிறார்கள்.[5]

மனுஸ்மிருதி

மனுதரும சாத்திரத்தில் (iii, 90, 121) விஸ்வதேவர்களுக்கு அன்றாடம் படையல் இடவேண்டும் என்று கூறுகிறது.

புராணங்காள்

பிற்கால இந்து சமய புராணங்களில் ஆதித்தர்கள், வசுக்கள், துசிதா, அபாஸ்வரர்கள், அனிலன், மகாராஜிகர்கள், சத்தியர்கள் மற்றும் உருத்திரர்கள் ஆகியோருடன் விஷ்வ தேவரையும் சேர்த்து 9 கணதேவதைகளாக கணக்கிட்டனர்.

விஷ்ணு புராணம் மற்றும் பத்ம புராணங்களின்படி காசியபர்-அதிதி தம்பதியர்களுக்கு பிறந்தவர்களே கீழ்கண்ட விஷ்வதேவர்கள் எனக் குறிப்பிடுகிறது.[6]

மகாபாரதம்

விஸ்வதேவர்கள், விஸ்வாமித்திரனின் சாபத்தால் பூமியில் திரௌபதியின் மகன்களாக 5 உபபாண்டவர்களாக.அவதரித்ததாக விவரிக்ககிறது [7]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads