வீரண்ணா (திரைப்படம்)
2005 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வீரண்ணா (Veeranna) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். பி. கலாநிதி இயக்கிய இப்படத்தில் நெப்போலியன், அனாமிகா, பிரீத்தி வர்மா, ஷீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பி. கலைமணி எழுதிய இந்த படத்திற்கு, சௌந்தரியன் இசை அமைத்தார். படமானது 2005 திசம்பர் 18 அன்று வெளியானது.[1][2][3]
Remove ads
கதை
மரியப்பன் ( நெப்போலியன் ) ராஜேஸ்வரியின் ( ஷீலா ) விசுவாசமிக்க ஊழியர். அதே சமயம் ராஜேஸ்வரி கிராம மக்களை பலவகைகளில் கொடுமைக்கு ஆளாக்குகிறார். மரியப்பனின் மகன் வீரண்ணா (நெப்போலியன்), ஒரு இராணுவ அதிகாரி, அவர் தனது கிராமத்திற்கு திரும்பி, அமைதியாக வாழ விரும்புகிறான். அவனது உறவுப் பெண்ணான வெண்ணிலா அவனை நேசிக்கிறாள். ஒரு நாள், குழந்தைகள் ஆற்றின் தண்ணீரைக் குடிக்கும்போது, தொழிற்சாலை கழிவினால் அவர்கள் நோய்வாய்ப்படுகின்றனர். பொறுப்புள்ள குடிமகனாக, வீரண்ணா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி மீது புகார் அளிக்கிறார். இது தவிர, நிர்வாணமாக இருந்த ராஜேஸ்வரியின் மகள் ஐஸ்வர்யாவை (பிரீத்தி வர்மா) நீரில் மூழ்குவதிலிருந்து வீரண்ணா காப்பாற்றுகிறான். ராஜேஸ்வரி அவனை கிராமத்தை விட்டு வெளியேறும்படி கட்டளையிடுகிறார். ஆனால் வீரண்ணா அதற்கு மறுத்துவிடுகிறான். மேலும் அவன் ஐஸ்வர்யாவை மணக்கிறான். பின்னர் என்ன ஆகிறது என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.
Remove ads
நடிகர்கள்
- நெப்போலியன் மாரியப்பன் மற்றும் வீரண்ணா
- அனாமிகா வெண்ணிலாவாக
- பிரீத்தி வர்மா ஐஸ்வர்யாவாக
- ஷீலா (நடிகை) இராஜேஸ்வரியாக
- வடிவேலு (நடிகர்) பழனிசாமியாக
- மணிவண்ணன் அழகர்சாமியாக
- ஆர். சுந்தர்ராஜன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி பஞ்சுவாக
- பாண்டு
- பாலாஜி மந்திரமூர்த்தியாக
- வடிவுக்கரசி ஜானகியாக
- கிரேன் மனோகர்
- சிசர் மனோகர்
- வாசு (நகைச்சுவை நடிகர்)
- துரைராஜ்
- சிங்கமுத்து
- வி. கே. டி. பாலன்
- சார்லஸ்
- ஏ. அரிச்சந்திரன்
- அஞ்சலிதேவி
- பூர்வஜா
- பிரவீணா
- ஜான் பாபு விருந்தினர் தோற்றத்தில்
Remove ads
இசை
இத் திரைப்படத்திற்கு பின்ண்ணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் சவுந்தரியன் அமைத்தார். 2005 இல் வெளியான இசைப்பதிவில், முத்துலிங்கம், விவேகா எழுதிய ஐந்து பாடல்கள் உள்ளன.[4][5]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads