சாண்டோங்
மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாண்டோங் (எளிய சீனம்: 山东), என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது சீனாவின் கிழக்குப் பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது.
சீன நாகரிகத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே, சீன வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த பிரதேசமாக இது விளங்குகின்றது. தாவோயியம், சீன பௌத்தம் மற்றும் கன்பூசியம் ஆகிய மத கலாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இது உள்ளது.
வடசீன சமவெளியின் கிழக்குக் கரையில் மஞ்சள் ஆற்றின் கீழ்ப்பகுதியில் இம்மாகாணம் அமைந்துள்ளது. இதன் வடக்கே பொகாய் கடலும், வடமேற்கே ஏபெய் மாகாணமும், மேற்கே ஹெனான் மாகாணமும், தெற்கே சியாங்சு மாகாணமும், தென்கிழக்கே மஞ்சள் ஆறும் எல்லைகளாக உள்ளன. ஹெனான்-சியாங்சு மாகாணங்களுக்கிடையே சிறு பிரதேசம் அன்ஹுயி மாகாணத்துடன் எல்லையாக உள்ளது.
Remove ads
வரலாறு
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் புதிய கற்காலக் கலாச்சாரங்களின் இருப்பிடமாக இது விளங்கியது. பின்னர் பல அரசமரபினரின் கட்டுப்பாட்டில் இப்பிர்தேசம் இருந்தது. நவீன சாண்டோங் மாகாணம் மிங் அரசமரபினரால் உருவாக்கப்பட்டது.
புவியியல்
இது பெரிதும் சமவெளியான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. வடமேற்கு, மேற்கு மற்றும் தென்மேற்குப் பிரதேசங்கள் வட சீன சமவெளியின் பகுதிகளாகும். மத்திய பகுதி மலைப்பாங்கானதாகக் காணப்படுகின்றது. டாய் மலை இவற்றுள் முக்கியமானது.
அரசியல்
சீனாவின் ஏனைய பகுதிகளைப்போலவே இங்கும் இரு கட்சி அரசமைப்பைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் அதி உயர் அரச அதிகாரியாக மாகாண ஆளுநர் விளங்குகின்றார்.
நிர்வாகப் பிரிவுகள்
இம்மாகாணம் 17 மேல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை 137 கவுண்டி அலகுகளாகப் பிரிக்கப்பட்டு மேலும் 1941 நகர நிலை அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மக்கட் பரம்பல்
குவாங்டாங்கிற்கு அடுத்தபடியாக, சீனாவின் அதிக மக்கட்டொகை கொண்ட மாகாணமாக இது விளங்குகின்றது. இம்மாகாணத்தில் பெரும்பான்மையாக ஆன் சீனர்கள் வசிக்கின்றனர். மேலும் மஞ்சு இனக்குழு, ஊய் இனக்குழு போன்றவை சிறுபான்மையினராக உள்ளனர்.
போக்குவரத்து
பெய்ஜிங்-கவுலூன் நகரங்களுக்கிடையிலான சிங்சு தொடர்வண்டிச் சேவையும் பெய்ஜிங்-சாங்காய் நகரங்களுக்கிடையிலான சிங்கு தொடர்வண்டிச் சேவையும் இம்மாகாணம் ஊடாகச் செல்கின்றன. சீன மாகாணங்களுள் தரமானதும் அடர்ந்ததுமான அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை சாண்டோங் கொண்டுள்ளது. இங்குள்ள அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பின் மொத்த நீளம் சுமார் 3000 கிலோமீட்டர்களுக்கு (1900 மைல்) மேலானது. இது சீன மாகாணங்களிடையே மிக அதிகமானதாகும்.
Remove ads
சுற்றுலா
புகழ்பெற்ற 72 நீரூற்றுக்களைக் கொண்ட மாகாணத் தலைநகரமான சிலின் நகரம், தாவோயிசத்திற்குப் புகழ்பெற்ற பெங்லாய் நகரம், கடற்கரை நகரமான கிங்டோ, அகழ்வாரய்ச்சி மையமான கிங்சோ போன்றவை முக்கிய சுற்றுலா மையங்கள் ஆகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads