ஷிகர் தவான்

இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

ஷிகர் தவான்
Remove ads

ஷிகர் தவான் (Shikhar Dhawan, பிறப்பு: திசம்பர் 5, 1985, தில்லி) ஒரு இந்தியத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டியின் இந்திய அணியின் உதவி அணி தலைவரும் ஆவார்.. இவர் இடது-கை மட்டையாளர். துவக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். சில சமயங்களில் வலது கை சுழற்பந்துவீச்சாளராகவும் செயல்படுகிறார். இவர் டில்லி அணிக்காக உள்ளூர் போட்டிகளிலும் ,இந்தியத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார். 2014 முதல் 2014 ஆண்டு பருவலகாலங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணித் தலைவராக இருந்தார். நவம்பர், 2004 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். அதற்கு முன்பாக 17வயதுக்கு உட்பட்டோருக்கான மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடினார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், பிறப்பு ...

2010 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகம் ஆனார். பின் 2013 இல் மொகாலியில் இதே அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் அறிமுகம் ஆனார். அந்த அறிமுகப் போட்டியில் 174 பந்துகளில் 187 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டிகளில் விரைவாக நூறு ஓட்டங்கள் அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[4] 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணம் , 2013 மற்றும் 2017 ஐசிசி வாகையாளர் கோப்பை ஆகிய போட்டிகளில் நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியதன் மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 1000 ஓட்டங்களைக் கடந்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[5][6] ப்ரெட்டோரியாவில் ஆகஸ்டு, 2013 இல் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணியில்விளையாடினார். அந்தப் போட்டியில் 150 பந்துகளுக்கு 248 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[7] 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இந்திய அணியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரரானார்.[8] அதன் பின்பு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 3000 ஓட்டங்களைக் கடந்த இந்திய வீரர் ஆனார். பின் விரைவாக 4000 ஓட்டங்களைக் கடந்த இந்திய வீரர் ஆனார். ஜோகானஸ்பேர்க்கில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டித் தொடரின் நான்காவது போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் 100 ஆவது போட்டியில் நூறு அடித்த முதல் இந்திய வீரர் மற்றும் ஒன்பதாவது சர்வதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.

Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

ஷிகர் தவான் டிசம்பர் 5, 1985 இல் புது தில்லியில் பிறந்தார். இவரின் தந்தை மகேந்திர பால் தவான்

இவர் பஞ்சாபி காத்ரி குடும்பத்தைச் சார்ந்தவர். தாய் சுனைனா. தவானுக்கு ஷ்ரேஸ்தா எனும் தங்கை உள்ளார். புதுதில்லியில் உள்ள புனித மார்க் சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். தனது 12 ஆம் வயது முதல் சான்னட் கிளப்பில் தரக் சின்ஹாவிடம் பயிற்சி எடுத்தார்.[9][10] இவர் 12 சர்வதேச துடுப்பாட்டக் காரர்களை உருவாக்கியுள்ளார்.[11] துடுப்பாட்ட அகாதமியில் சேர்ந்த போது குச்சக் காப்பாளராக இருந்தார்.[10]

Remove ads

துடுப்பாட்ட வாழ்க்கை

ஆரம்ப காலங்களில்

தவான் முதன்முதலில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான தில்லி மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக 1999 ஆம் ஆண்டின் விஜய் மெர்ச்சண்ட் வாகையாளர் கோப்பையில் விளையாடினார் . அதற்கு அடுத்த ஆண்டில் நடந்த இதே தொடரில் சிறப்பாக விளையாடினார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த மட்டையாளர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.இந்தத் தொடரில் தில்லித் துடுப்பாட்ட அணி இரண்டாம் இடத்தினைப் பிடித்தது.இந்தத் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 199 ஓட்டங்கள் எடுத்தார். இவரது மட்டையாட்ட சராசரி 83,88 ஆக இருந்தது.[12] பிப்ரவரி 2001 இல் விஜய் ஹசாரே கோப்பைக்கான வடக்கு மண்டல 16 வயதுக்குட்பட்ட அணியில் தேர்வு செய்யப்பட்டார். தென் மண்டலத்திற்கு எதிரான அரையிறுதியில் 30 மற்றும் 66 ஓட்டங்கள் எடுத்தார்.[13]

தில்லி 16 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக இவர் 2000/01 ஏ.சி.சி 17 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டார். மூன்று போட்டிகளில் விளையாடிய இவரது சராசரி 85 ஆக இருந்தது.[14] பின்னர் இவர் 2001 அக்டோபரில் தில்லி 19 வயதுக்குட்பட்ட அணியில் 15 வயதில் கூச் பெஹார் கோப்பைக்காக சேர்க்கப்பட்டார் . 2001/02 விஜய் மெர்ச்சண்ட் கோப்பையில் , தவான் 5 போட்டிகளில் 70.50 சராசரியோடு 282 ஓட்டங்கள் எடுத்தார்.[15]

அக்டோபர் 2002 இல், கூச் பெஹார் கோப்பைக்கான தில்லி 19 வயதுக்குட்பட்ட அணியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதில் அவர் 8 போட்டிகளில் விளையாடி 388 ஓட்டங்கள் எடுத்தார், இதில் இரண்டு நூறுகள் அடங்கும். இவரின் மட்டையாட்ட சராசரி 55 ஆகும்.[16] பின்னர் இவர் ஜனவரி 2003 இல் வினூ மங்கட் கோப்பையில் வடக்கு மண்டல 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். மத்திய மண்டலத்திற்கு எதிரான அரையிறுதியில் அவர் 45 மற்றும் 12 ஓட்டங்கள் எடுத்தார், ரோஹ்தக்கில்கிழக்கு மண்டலத்திற்கு எதிராக இறுதிப் போட்டியில் 71 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அந்தப் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்தார்.[17] பிப்ரவரி 2003 இல் நடைபெற்ற சி.கே.நாயுடு கோப்பைத் தொடரில் , வட மண்டல 19 வயதுக்குட்பட்டோருக்கான துடுப்பாட்டத் தொடரில் இவரது மட்டையாட்ட சராசரி 55.50 ஆக இருந்தது.[18] அக்டோபரில் நடந்த கூச் பெஹார் கோப்பையில் 6 போட்டிகளில் 444 ஓட்டங்களை எடுத்தார். இவரது மட்டையாட்ட சராசரி 74 ஆக இருந்தது.[19] பின்னர் இவர் தில்லி 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற எம்.ஏ.சிதம்பரம் கோப்பைத் தொடரில் தவானின் சராசரி 66.66 ஆக இருந்தது, இது தலைவராக அவரது முதல் தொடராகும்.[20]

Remove ads

புள்ளி விவரங்கள்

தேர்வுத் துடுப்பாட்ட நூறுகள்

மேலதிகத் தகவல்கள் தேர்வுத் துடுப்பாட்ட நூறுகள், # ...

தனிப்பட்ட வாழ்க்கை

2012 ஆம் ஆண்டில், தவான் தனது காதலியும் தன்னை விட பன்னிரண்டு வயது மூத்தவரான மெல்போர்னைச் சேர்ந்த ஆயிஷா முகர்ஜி என்ற தொழில்முறை குத்துச்சண்டை வீரரை மணந்தார்.[21][22] முகர்ஜியை, தவானுக்கு ஹர்பஜன் சிங் அறிமுகப்படுத்தினார். அவரின் முதல் திருமணத்தின் மூலம் இரண்டு மகள்களின் தாயாக இருந்தார்.[23] 2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில், அவர் சோராவர் என்ற மகனைப் பெற்றெடுத்தார். ஷிகர் தவான் பிரபலமான ஹேண்டில்பார் மீசையால் நன்கு அறியப்பட்டவர்.[24] வீட்டில் இவரது புனைபெயர் பாபு.[25]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads