ஸ்டூடண்ட் நம்பர் 1
செல்வா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்டூடண்ட் நம்பர் 1 என்பது 2003ஆம் ஆண்டய இந்திய தமிழ் அதிரடி திரைப்படமாகும். செல்வா இயக்கிய இப்படத்தில் அறிமுக நடிகர் சிபிராஜ், ஷெரின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, மணிவண்ணன், யுகேந்திரன், நாசர் ஆகியோர் பிறபாத்திரங்களில் நடித்தனர்.[1]
இந்த படம் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் காஜலா ஆகியோர் இதே பெயரில் நடித்த 2001ஆம் ஆண்டைய பிளாக்பஸ்டர் தெலுங்கு படத்தின் மறு ஆக்கம் ஆகும். ஸ்டூடண்ட் நம்பர் 1 விமர்சகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகி வணிக ரீதியாக ஆபிஸில் தோல்வியடைந்தது.[2]
Remove ads
நடிகர்கள்
- சிபிராஜ் சிபியாக
- செரின் ஷிருங்கார் அஞ்சலியாக
- மணிவண்ணன் பேராசிரியராக
- யுகேந்திரன் சத்யாவாக
- நாசர் இராகவனாக
- தலைவாசல் விஜய் வழக்கறிஞராக
- இரவிக்குமார் நீதியரசராக
- நிழல்கள் ரவி காவல் ஆய்வாளராக
- வினு சக்ரவர்த்தி "லீக்டு" சாம்பசிவம்
- பாண்டு சாம்பசிவத்துடன் இருப்பவராக
- வனிதா கிருஷ்ணசந்திரன் சிபியின் தாயாராக
- பிரீத்தி சிபியின் சகோதரியாக
- விதார்த் சத்தியாவின் வகுப்புத் தோழராக
- மனோபாலா தாசாக
- வாசு (நகைச்சுவை நடிகர்) பேருந்து நடத்துநராக
- லொள்ளு சபா மாறன் சத்தியாவின் வகுப்புத் தோழராக
Remove ads
தயாரிப்பு
சென்னையில் பதினைந்து நாட்கள் கால அட்டவணையில் முதலில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதன் பிறகு உருசியா சென்ற படப்பிடிப்புக் குழு இரண்டு பாடல்களைப் படமாக்கி வந்தது. மீதமுள்ள பாடல்கள் ஆந்திராவில் படமாக்கபட்டன. விசாகப்பட்டினம் கடற்கரையில் சுமார் இரண்டு லட்சம் செலவில் படப்பிடிப்புக்காக தற்காலிக கட்டமைப்பு உருவாக்கபட்டது. ஆறு நாட்கள் செலவழித்து ஒரு பாடல் படமாக்கபட்டது. நடன இயக்குநர் தருண்ராஜ் நடன அசைவுகளை செய்வித்தார். சிபிராஜிக்கு படமாக்கபட்ட முதல் காட்சி குறித்து குறிப்பிடுகையில் "நான் கல்லூரி நூலகத்திற்குள் நுழைவதாகவும், செரினும் அவரது நண்பர்களும் ஒலிப் பேழையில் பதிவு செய்யபட்ட இசைக்கு நடனமாடுவதைக் காண்டு அந்த இசைக் கருவியை நிறுத்தி அந்தப் பெண்களுக்கு அறிவுரை கூறுவதாக " காட்சி படமாக்கபட்டது என்று கூறினார்.[3]
Remove ads
இசை
மரகத மணி இசையமைத்த இந்த படத்தின் இசையை பிரமிட் மியூசிக் வெளியிட்டது. பாடல் வரிகள் நா. முத்துக்குமார், கபிலன் அண்ணாமலை ஆகியோரால் எழுதப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads