இசுட்டேட்டன் தீவு

From Wikipedia, the free encyclopedia

இசுட்டேட்டன் தீவு
Remove ads

இசுட்டேட்டன் தீவு (Staten Island, /ˌstætən ˈlənd/) அமெரிக்க மாநிலம் நியூயார்க்கில் உள்ள நியூயார்க் நகரத்தின் ஐந்து பரோக்களில் தென்மேற்கில் உள்ள பரோ ஆகும். நியூயார்க் மாநிலம் மற்றும் நகரத்தின் தெற்கு முனையில் இது அமைந்துள்ளது. இங்குள்ள மாநாட்டு மாளிகைப் பூங்கா நியூயார்க் மாநிலம் மற்றும் நியூயார்க் நகரத்தின் தெற்கு எல்லையாக உள்ளது.[2] இந்த பரோவை நியூ செர்சியிலிருந்து ஆர்தர் கில், கில் வான் குள் என்ற இரு கடலோடைகள் பிரிக்கின்றன; நியூயார்க் நகரத்தின் மற்ற பகுதிகளிலிருந்து நியூயார்க் விரிகுடா பிரிக்கிறது. 2013 கணக்கெடுப்பின்படி இசுட்டேட்டன் தீவின் மக்கள்தொகை 472,621 ஆகும்.[1] நியூயார்க்கின் ஐந்து பரோக்களில் மிகவும் குறைந்த மக்கள்தொகை உள்ள பரோ இதுவாகும். ஆனால் பரப்பளவில் 59 sq mi (153 km2) உடன் மூன்றாவது பெரிய பரோவாக உள்ளது. இதுவும் ரிச்மாண்ட் கவுன்ட்டியும் ஒரே நிலப்பரப்பை குறிக்கின்றன;1975 வரை இந்த பரோவும் ரிச்மாண்ட் பரோ என்றே அழைக்கப்பட்டு வந்தது.[3] நகர அரசின் அக்கறையின்மையைக் கருதி இசுட்டேட்டன் தீவு சிலநேரங்களில் "மறந்துபோன பரோ" என இங்கு வாழ்வோரால் குறிப்பிடப்படுகின்றது.[4][5]

Thumb
இசுட்டேட்டன் தீவு குறுங்கப்பற்சேவை கீழ் மேன்காட்டனுக்கும் இசுட்டேட்டன் தீவின் செயின்ட்.ஜார்ஜ் குறுங்கப்பல் முனையத்திற்குமிடையே கட்டணமில்லாச் சேவை வழங்குகிறது.
விரைவான உண்மைகள் இசுட்டேட்டன் தீவு டச்சு: Staateneilandஇசுட்டேட்டன் தீவு, நியூயார்க், நாடு ...

வாகனப் போக்குவரத்துக்காக புரூக்ளினிலிருந்து வெர்ரசானோ-நேரோசு பாலம் மூலமாகவும் நியூ செர்சியிலிருந்து அவுட்டர்பிரிட்ஜ் கிராசிங், கோத்தல்சு பாலம், பயோன் பாலம் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்தின் இந்த பரோ மட்டுமே சப்வே தொடர்வண்டியால் இணைக்கப்படாது உள்ளது. இசுட்டேட்டன் தீவு கட்டணமில்லாத குறுங்கப்பல் சேவையால் மேன்காட்டனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 21 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்லும் இச்சேவை[6] 1700 களிலிருந்து இயக்கத்தில் இருக்கின்றது. ஒன்பது குறுங்கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விடுதலைச் சிலை, எல்லிசு தீவு, மற்றும் கீழ் மேன்காட்டன் காட்சிகளை காணும் வாய்ப்புள்ளதால் சுற்றுலாப் பயணிகளிடமும் இச்சேவை மிகவும் பெயர் பெற்றுள்ளது.

நியூயார்க்கின் ஐந்து பரோக்கள் கண்ணோட்டம்
ஆட்பகுதி மக்கள்தொகை நிலப் பரப்பளவு
பரோகவுன்ட்டி1 சூலை 2013
மதிப்பீடு
சதுர
மைல்கள்
சதுர
கிமீ
மன்ஹாட்டன்நியூ யார்க்1,626,1592359
பிரான்க்சுபிரான்க்சு1,418,73342109
புருக்ளின்கிங்சு2,592,14971183
குயின்சுகுயின்சு2,296,175109283
இசுட்டேட்டன் தீவு ரிச்மாண்ட்472,62158151
8,405,837303786
19,651,12747,214122,284
மூலம்: ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம்[7][8][9]
Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads