ஹரிச்சந்திரா (1944 திரைப்படம்)
1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹரிச்சந்திரா 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டு கே. பி. நாகபூசணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா அரிச்சந்திரனாகவும், பி. கண்ணாம்பா சந்திரமதியாகவும் நடித்து வெளிவந்தது. எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் பலரும் இதில் நடித்திருந்தனர்.
Remove ads
பாத்திரங்கள்
Remove ads
பாடல்கள்
மொத்தம் 15 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன.
- அகிலசர்வே சனெங்கள் ராஜனே பொய் பேசான் (குழுப் பாடல்)
- மாசிலாச் செல்வமே வாழ்க நீ (சந்திரமதி)
- மலர்மாரன் வாளியால் வாடுகின்றோம் (பாணப் பெண்கள்)
- நிராதரவானோம் பராத்பரநாதா நீ கண் பாராய் (சந்திரமதி)
- ஆண்பிள்ளைக் கீடோ - அடி அசடே (காலகண்டன், காலகண்டி)
- காசிநாதா கங்காதரா கருணை செய்வாய் (ஹரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன்)
- சத்திய நீதி மாறா இம்மாதை வாங்குவாருண்டோ (ஹரிச்சந்திரன்)
- சின்னபய பேச்சைக் கேட்டு சீறி விழுகவேணாம் (வீரபாகு, செல்லி)
- எனையாளும் தயாநிதே ஈசா கருணா விலாசா (ஹரிச்சந்திரன்)
- இதுவே புண்ய பூமி (ஹரிச்சந்திரன்)
- நல்ல நேரமடா நாமும் விளையாடவே (லோகிதாசன்)
- பாலனிறந்த இடம் எது தானோ (சந்திரமதி)
- என்னாருயிரே கண்மணியே (சந்திரமதி)
- வாடா என் கண்ணின் மணியே (சந்திரமதி)
- மனமே வீணாய்த் தளராதே (பின்னணிப் பாடல்)
Remove ads
துணுக்குகள்
இத்திரைப்படம் வெளிவந்த அதே நேரத்தில் கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட "ஹரிச்சந்திரா" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் 1943ல் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருந்தது. இத்திரைப்படமே முதன் முதலில் தென்னிந்தியாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த முதலாவது திரைப்படம் ஆகும்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads