1977 இந்தியப் பொதுத் தேர்தல்

இந்தியாவில் பொதுத் தேர்தல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியக் குடியரசின் ஆறாம் நாடாளுமன்றத் தேர்தல் 1977 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஆறாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்ததிலிருந்து ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி தோற்கடிக்கப்பட்டு ஜனதா கட்சி வென்று ஆட்சியமைத்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

விரைவான உண்மைகள் மக்களவைக்கான 542 இடங்கள், பதிவு செய்த வாக்காளர்கள் ...
Remove ads

பின்புலம்

இத்தேர்தலில் 518 தொகுதிகளில் இருந்து 518 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபபட்டனர். இவர்களைத் தவிர இரு ஆங்கிலோ-இந்தியர்களும், வடகிழக்கு பிரதேசத்திலிருந்து (தற்கால அருணாசலப் பிரதேசம்) ஒருவரும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். முந்தைய தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற இந்திரா காந்தி அடுத்த ஐந்து வருடங்களில் படிப்படியாகத் தனது செல்வாக்கினை இழந்தார். ரே பரேலி தொகுதியில் இந்திராவிடம் தோற்ற ராஜ் நாராயண் என்ற வேட்பாளர், இந்திரா காந்தி தனது அரசு அதிகாரத்தை தேர்தல் பிரச்சாரத்துக்கு முறைகேடாக பயனபடுத்தினார் என்று அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 1975ல் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து இந்திரா தன் பதவியைத் தக்க வைக்க நாட்டில் நெருக்கடி நிலையினை அறிவிக்கச் செய்தார். பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களின் பல அடிப்படை உரிமைகள் முடக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் சிறையிலடைக்கப்பட்டனர்; காங்கிரசுக்கு எதிரான மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. நெருக்கடி நிலையினை எதிர்த்து சோசலிசக் கட்சித் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் ஒரு பெரும் மக்கள் இயக்கம் உருவானது. 1976ல் நடக்க வேண்டிய நாடாளுமன்றத் தேர்தல் ஒரு ஆண்டுத் தள்ளிப் போனது. தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இந்திராவை எதிர்க்க நிறுவன காங்கிரசு, பாரதீய ஜனசங்கம், பாரதீய லோக்தளம், சோசலிசக் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின. இந்திரா அரசு மீதான பெரும் மக்கள் அதிருப்தியால் ஜனதா கட்சி பெருவாரியான இடங்களில் வென்றது. இந்திராவும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் தேர்தலில் தோற்றனர். ஜனதா கட்சியின் தலைவர் மொரார்ஜி தேசாய் நாட்டின் முதல் காங்கிரசு கட்சி சாராத பிரதமரானார்.

Remove ads

முடிவுகள்

மொத்தம் 60.49% வாக்குகள் பதிவாகின.[2]

மேலதிகத் தகவல்கள் கூட்டணி, கட்சி ...
Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads