2007 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் From Wikipedia, the free encyclopedia

2007 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
Remove ads

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2007 (2007 Indian vice-presidential election) என்பது 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க 10 ஆகத்து 2007 அன்று நடைபெற்ற தேர்தலாகும். இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த முகமது அமீத் அன்சாரி இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தற்போதைய, பைரோன் சிங் செகாவத் மறுதேர்தலைக் கோரவில்லை; அதற்குப் பதிலாக 2007 தேர்தலில் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவர் பிரதிபா பாட்டிலிடம் தோல்வியடைந்தார். பாட்டில் பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இவர் குடியரசுத் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

விரைவான உண்மைகள் வேட்பாளர், கட்சி ...
Remove ads

பின்னணி

இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். பைரோன் சிங் செகாவத்தின் பதவிக்காலம் ஆகத்து 18, 2007 வரை இருந்ததால், இவரைத் தொடர்ந்து பொறுப்பேற்பவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் தேவைப்பட்டது.[1]

வாக்காளார்கள்

இத்தேர்தலில் 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 545 மக்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 790 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிகாரிகள்

தேர்தல் அதிகாரி: முனைவர் யோகேந்திர நரேன், பொதுச் செயலாளர், மக்களவைஉதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்: என். சி. ஜோஷி & ரவி காந்த் சோப்ரா[1]

Remove ads

முடிவுகள்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2007-முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads