ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் என்பது வன்னியில் இலங்கை அரசு நடத்திய ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், உடனடியாக அங்கு போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழகம், மலேசியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமிழர்கள் சிலர் தீக்குளிப்பு நடவடிக்கைகளில் இறங்கிய நிகழ்வுகளைக் குறிக்கும். ஈழத்தமிழருக்கு ஆதரவாக முதன் முதலாக 1995 ஆம் ஆண்டில் தீக்குளிப்பில் இறங்கி உயிரை மாய்த்துக் கொண்டவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ரவூஃப் ஆவார்.[1] அதன் பின்னர் 2009 சனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் தமிழ்நாட்டில் பதினைந்து பேர், மலேசியாவில் ஒருவர், சுவிட்சர்லாந்தில் ஒருவர் என மொத்தம் பத்தொன்பது பேர் இறந்துள்ளார்கள்.

Remove ads

தமிழ்நாடு.

திருமுட்டம் மு.ந.ஆறுமுகம்(எ)நல்ல உதயசூரியன்

ஈழத்தமிழருக்கு ஆதரவாக முதன் முதலாக 1989 ஆம் ஆண்டில் தீக்குளிப்பில் இறங்கி உயிரை மாய்த்துக் கொண்டவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுட்டம்.மு.ந.ஆறுமுகம் (எ) நல்ல உதயசூரியன் ஆவார். 1989 ஆம் ஆண்டில் திருமுட்டத்தில் நடைப்பெற்ற ஈழத்தமிழர் போராட்டத்தின் போது திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக தன் உயிரை தீக்குளித்து உயிர்நீத்த கட்சி தியாகி.[2]

அப்துல் ரவூப்

ஈழத்தமிழருக்கு ஆதரவாக 1995 ஆம் ஆண்டில் தீக்குளிப்பில் இறங்கி உயிரை மாய்த்துக் கொண்டவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ரவூஃப் ஆவார். 1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்ற இராணுவத்தாக்குதல்களின் போது குடாநாட்டில் இருந்து பெரும் தொகையானோர் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். இந்த இடப்பெயர்வினால் துயரடைந்த இவர் அப்துல் ரவூப் திருச்சியில் 1995 திசம்பர் 15 அன்று தீக்குளித்து சாவடைந்தார்.[1]

முத்துக்குமார்

Thumb
முத்துக்குமார், சென்னை, சனவரி 29, 2009

தமிழ்நாட்டில் 2009, சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எ‌ண்ணெ‌‌யை உட‌லி‌ல் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். இறக்க முன்பு முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், "இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் நடுவண் அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது." என்று குறிப்பிட்டார்.[3] பார்க்க: விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

பள்ளப்பட்டி ரவி

Thumb
ரவி, பள்ளப்பட்டி, திண்டுக்கல், பிப்ரவரி 2, 2009

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் சனவரி 31 2009 சனிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நகரின் பேருந்து நிலையம் அருகில் தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். செய்தி அறிந்த தலைவர்கள் அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்தனர். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னரும் பலனின்றி பிப்ரவரி 2, 2009 அன்று மரணமடைந்தார். தனது கணவர் தீக்குளித்ததைப் பற்றி ரவியின் மனைவி சித்ரா கூறுகையில் 'எனது கணவர் இலங்கைத் தமிழர்களின் அவலங்களை பத்திரிகை, வானொலி மூலமாக அறிந்து சதா கவலையுடன் இருந்தார் எனவும், முத்துக்குமார் தீக்குளித்ததை நினைத்து மிகவும் கவலையுடன் இருந்தார் என்றும், அவர் இதனால் மனமுடைந்தே தனது உடலில் எண்ணெயை ஊற்றி தீக்குளித்துள்ளார்' என்று தெரிவித்துள்ளார். ரவி தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயரிட்டிருந்தார்.[4].

சீர்காழி இரவிச்சந்திரன்

Thumb
இரவிச்சந்திரன், சீர்காழி, பெப்ரவரி 7, 2009

சீர்காழி காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலர் இரவிச்சந்திரன் என்பவர் 2009, பெப்ரவரி 7 அன்று அதிகாலை 1.30 மணியளவில் உடலில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டு, தமிழ் வாழ்க..... தமிழீழம் வெல்க...... ராஜபக்சே ஒழிக..... காங்கிரஸ் ஒழிக........ எனக் குரல் கொடுத்துக் கொண்டே தம்மைத் தாமே எரித்துக் கொண்டார். அன்று மாலை 4 மணியளவில் அவர் மருத்துவமனையில் இறந்தார்[5].

அமரேசன்

Thumb
அமரேசன், சென்னை, பெப்ரவரி 8, 2009

சென்னை வண்ணாரப்பேட்டை நமச்சிவாயம் தெருவைச் சேர்ந்தவர் அமரேசன் (வயது 65). இவர் 2009, பெப்ரவரி 8 அன்று சுங்கச்சாவடி பேருந்து நிலையம் எதிரில் தனது உடலில் மண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அமரேசன் உயிரிழந்து விட்டார். அமரேசன், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்தாக கூறப்படுகிறது. இவரின் இறுதி நிகழ்வுகள் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்தப்பட்டது. அமரேசனின் உடலம் மூலகொத்தளம் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது[6].

சோதி என்கிற தமிழ்வேந்தன்

Thumb
ஜோதி, கடலூர், பெப்ரவரி 18, 2009

கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் 2009, பெப்ரவரி 18அன்று மதியம் 2.30 மணியளவில் கடலூர் கோர்ட் அலுவலகத்துக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியபடியே தீக்குளித்தார். கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தமிழ் வேந்தன். உயிருக்கு போராடி வரும் நிலையில் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தமிழ் வேந்தன், “ ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் அதிகம் படிக்காதவன். படித்தவர்கள் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காக போராடுங்கள் என்று கூறினார். தமிழ்வேந்தனின் சிகிச்சை பலனின்றி இந்திய நேரம் இரவு 1.20 மணியளவில் மருத்துவமனையில் மரணமானார். தமிழ்வேந்தனுக்கு 7 மாதமே ஆன கைக்குழந்தை இருந்தது[7][8].

சிவப்பிரகாசம்

Thumb
சிவபிரகாசம், சென்னை, பெப்ரவரி 21, 2009

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்; தமிழர்கள் நலம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி திமுக இளைஞர் அணி சார்பில் பெப்ரவரி 21, 2009 மாலை, சென்னை, மாவட்ட தலைநகர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் மாபெரும் இளைஞர் சங்கிலி போராட்டம் இடம்பெற்றது. அப்போது, செல்லம்மாள் கல்லூரி அருகே நின்றிருந்த தரமணி மகாத்மா காந்தி நகர் வினைதீர்த்த விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம் (55) என்பவர் 2 லீட்டர் பெட்ரோலை எடுத்து வந்து தன் மீது ஊற்றிக் கொண்டார். இலங்கையில் உடனடியாக போரை நிறுத்து என்று கத்திக் கொண்டே உடலில் தீ வைத்துக் கொண்டார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவற்துறையினர்ர் அவரைக் காப்பாற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவர் பெப்ரவரி 22 இல் உயிரிழந்தார். தீக்குளித்த சிவப்பிரகாசம் கையில் ஒரு கடிதத்தை வைத்திருந்திருக்கிறார். முதல் அமைச்சர் மு. கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "தலைவர் அவர்களுக்கு, இலங்கையில் போரை நிறுத்த வேண்டும். அங்கு தமிழர்களுடைய உயிரை காக்க வேண்டும்" என்று எழுதியிருந்தார்[9].

கோகுலகிருஷ்ணன்

Thumb
கோகுலகிருஷ்ணன், விருதுநகர், பெப்ரவரி 25, 2009

சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன்(வயது 55), பெப்ரவரி 25, 2009 காலையில் திமுக கொடி, மண்ணெண்ணெய் கேன், கடிதம் சகிதம் கையில் வைத்துக்கொண்டு விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப் போகிறேன் என்று குரல் கொடுத்தபடியே மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ பற்ற வைத்துக்கொண்டு தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார்.இலங்கையைச் சேர்ந்தவரான கோகுலரத்தினம் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு எதிலியாக வந்து, பின்னர், இந்தியக் குடியுரிமை பெற்று அரசு சார்பில் சிவகாசி அடுத்த ஆனையூர் காந்திநகரில் உள்ள 'சிலோன்' குடியிருப்பில் வாழ்ந்து வந்தார்.இவருடைய உடலின் அருகே சுருட்டப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைப் பிரித்துப் பார்த்தபோது அதில் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது. அதில், தமிழக முதல்வர் கலைஞர் விரைவில் குணமடைய வேண்டும். இலங்கையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடி வரும் இராமதாஸ், திருமாவளவன், வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்யக்கூடாது என எழுதப்பட்டிருந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.[10]

சீனிவாசன்

Thumb
சீனிவாசன், வாணியம்பாடி, மார்ச் 1, 2009

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான கூலித் தொழிலாளி சீனிவாசன் இலங்கையில் நடந்து வரும் போரில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக்கோரி பெப்ரவரி 26, 2009 இரவு 10.50 மணியளவில் தனது வீட்டருகே இருந்த தேமுதிக கொடி கம்பத்துக்கு அருகில் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.தீ பற்றி எரிய ஆரம்பித்தவுடன், தீயின் எரிச்சலால், அவர் கத்திக்கொண்டு ஓடிய அவரை குடும்பத்தாரும், ஊராரும் சேர்ந்து தீயை அணைத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் தீக்காயம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சீனிவாசனை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்[11]. மார்ச் 2, 2009 அன்று மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.[12]

சதாசிவம் சிறீதர்

Thumb
சதாசிவம் சிறீதர், சென்னை, மார்ச் 5, 2009

சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர்(எழில்வளவன்) (வயது 33), 99 ஆவது வட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தவர். இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்துச் சென்னையில் புதன்கிழமை, மார்ச் 4, 2009, தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிறீதரன் மருத்துவ சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை, மார்ச் 5, 2009 அன்று உயிரிழந்தார்[13]. இவரது மனைவியின் பெயர் லக்ஸ்மி ,இவருக்கு ஈழச்செல்வன், தமிழ்ச்செல்வன் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நாகலிங்கம் ஆனந்த்

Thumb
நாகலிங்கம் ஆனந்த், கடலூர், மார்ச் 15, 2009

கடலூர் அருகே உள்ள அன்னவள்ளியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆனந்த்(23). விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டரான இவர் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி 2009, மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார். ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்காததால் ஆனந்த் மனவேதனை அடைந்திருந்தார். இந்நிலையில், திடீரென தனது வீட்டிற்கு வெளியே நடுத் தெருவில் நின்றபடி "இலங்கைத் தமிழர்கள்!" வாழ்க என்றும், "இலங்கையில் போரை நிறுத்த வேண்டும்" என்றும் ஆவேசமாக முழக்கமிட்டபடியே உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இவர் தீயிட்டுக் கொள்வதைத் தடுக்கப் பலர் முயற்சித்த போதிலும், அவர்களை எல்லாம் தள்ளிவிட்டுவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தீயிட்டுக் கொண்டார். உடல் கருகிய நிலையில் மயங்கி விழுந்த அவரை அப்பகுதி மக்கள் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி மார்ச் 17 செவ்வாய் காலை உயிரிழந்தார்[14].

இராசசேகர்

Thumb
இராசசேகர், அரியலூர், மார்ச் 17, 2009

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டுநாகலேரியை சேர்ந்தவர் இராசசேகர் (வயது 24). ஒரு குழந்தையின் தந்தையான இவர் பாமகவைச் சேர்ந்த இவர் ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை எண்ணி, கடந்த சில நாட்களாகவே வேதனைப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கட்டத்தில் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கப் போவதாக இராசசேகர் கூறியிருக்கின்றார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் தாய் ரோகம்பா, மகனுக்கு ஆறுதல் கூறியதுடன் தீக்குளிக்கும் எண்ணத்தைக் கைவிடும்படி கூறியிருக்கிறார். ஆனால், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் இராஜசேகர் தனது வீட்டு வாசலில் முன்பாக உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இராஜசேகர் சேர்க்கப்பட்டார்[15]. சிகிச்சை பலனின்றி மார்ச் 17 செவ்வாய் காலை இவர் உயிரிழந்தார்[14].

பாலசுந்தரம்

Thumb
பாலசுந்தரம், புதுக்கோட்டை, மார்ச் 22, 2009

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களம் பகவான் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். மார்ச் 22, 2009, மதியம் 12 மணியளவில், தனது வீட்டிற்கு வெளியே மண்ணெண்ணெயை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார்[16]. கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு ஆகிய ஊர்களில் ஈழத்தமிழர்ளின் அவல நிலையை விளக்கும் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளை காவல்துறையினர் அகற்றினர். இதை தாங்க முடியாத பாலசுந்தரம், தனது கட்சிகாரர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். இரண்டு நாட்களாக ஈழத்தமிழர்களின் நிலைமை குறித்து தனது குடும்பத்தாரிடமும், கட்சிக்காரர்களிடம் கவலை தெரிவித்து வந்த பாலசுந்தரம், மார்ச் 22, 2009, மதியம் 12 மணி அளவில், தனது வீட்டிற்கு வெளியே தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார். பின்னர் இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாலசுந்தரத்தை காப்பற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்[17].

மாரிமுத்து

Thumb
மாரிமுத்து, சிவகாசி, மார்ச் 22, 2009

விருதுநகர் மாவ‌ட்ட‌ம், சிவகாசி காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 62). காங்கிரஸ் தொண்டரான இவ‌‌ர், மார்ச் 22, 2009 இரவு வீட்டு வாசலில் உள்ள காங்கிரஸ் கொடிக்கம்பத்தின் முன்பு நின்று கொண்டிருந்தபோது திடீரென்று உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இ‌தி‌ல் மா‌ரிமு‌த்து‌‌க்கு பல‌த்த தீ‌க்காய‌ம் ஏ‌ற்ப‌ட்டது. தகவல் அ‌றி‌ந்து சிவகாசி காவ‌ல்துறை‌யின‌ர் விரைந்து வந்து மா‌ரிமு‌த்துவை சிவகாசி அரசு மருத்துவமனையில் சே‌ர்‌த்தன‌ர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து சிகிச்சை பல‌னின்றி உ‌யிரிழ‌ந்த‌ா‌ர். இறப்பதற்கு முன்பு மாரிமுத்து ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார். அந்த கடிதம் கொடிக்கம்பத்தின் அருகே கிடந்தது. காங்கிரஸ், தே.மு.தி.க, தி.மு.க ஆகிய கட்சிகளுக்கிடையே கூட்டணி ஏற்பட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களை சோனியா காந்தி காப்பாற்ற வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் எழுதி வைத்திருந்தார்[18].

சிவானந்தன்

Thumb
சிவானந்தன், கரூர்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தன் (வயது 46) , சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயில் அருகே ஏப்ரல் 17, 2009 இரவு இலங்கையில், இராணுவத்தின் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு தன் மீது மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் சிவானந்தனை, கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்[19]. இவர் பழ. நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத் தொண்டராவார்.

சுப்பிரமணி

Thumb
சுப்பிரமணி, திருப்பூர்

ஈழத்தமிழர்களை காக்கக் கோரி பண்ருட்டியை சேர்ந்த அதிமுக தொண்டரான சுப்பிரமணி (வயது 43). ஏப்ரல்23, 2009 அன்று கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு இரு மகன் மற்றும், மனைவி உள்ளனர்.இலங்கையில் ஈழத்தமிழர்கள் போரில் சிக்கி தவிப்பதை பற்றி அடிக்கடி தனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடம் பேசி வந்ததுள்ளார். இவர் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுவதை பற்றி தனது டைரியில் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது[20][சான்று தேவை]

கிருஷ்ணமூர்த்தி

Thumb
கிருஷ்ணமூர்த்தி, சீகம்பட்டி, ஏப்ரல் 18, 2011

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்காவில் உள்ள குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தின் திரு. ராமசுப்பு அவர்களின் மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்தவர். இவர் உடன் பிறந்த இரு தம்பிகளின் படிப்பு செலவுகளை இவரே கவனித்து வந்தார். சில மாதங்களாகவே, இலங்கையில் அதிபர் ராஜபக்சே நடத்திய இனபடுகொலை, இளம் பெண்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துதல், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் நடத்தப்பட்ட படுகொலைகள் போன்றவை கிருஷ்ணமூர்த்தியின் மனதை பாதித்துள்ளன. தனது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கிருஷ்ணமூர்த்தி வெளிப்படுத்தவில்லை. இதற்கிடையில் 18.04.2011 அன்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி பத்த வைத்துக்கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன் என்றவாறு மயங்கி விழுந்தார். இதனையடுத்து மயக்கம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்து வமனை யில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று அவரது குடு ம்பத்தாரிடம் கிடைத்தது. அதில், ஈழத்தமிழர்களுக்கு தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை பொறுத்துக் கொள்ள முடியாது தான் தீக்குளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.[21]

Remove ads

மலேசியா

ராஜா

Thumb
இராஜா, மலேசியா, பெப்ரவரி 7, 2009

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி 2009 பெப்ரவரி 7 அன்று மலேசியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ராஜா (வயது27) என்பவர் தீக்குளித்து இறந்தார். ராஜா தீக்குளித்த இடத்தில் பெரிய டைரி, பணப்பை, தீப்பெட்டி ஆகியவை கிடந்தது. அந்த டைரியில் ராஜா உருக்கமான கடிதம் ஒன்றை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதி இருந்தார். அதில் இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம், உடனடி பேச்சு வார்த்தை மூலம் அப்பாவி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ அமெரிக்காவின் புதிய அதிபர் ஓபாமா உடனே இலங்கை செல்ல வேண்டும். அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், நார்வே சமாதான தூதர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் செல்லவேண்டும். என்றும் எழுதப்பட்டிருந்தன[22].

Remove ads

சுவிட்சர்லாந்து

முருகதாசன்

Thumb
முருகதாசன், சுவிட்சர்லாந்து, பெப்ரவரி 12, 2009

சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் லண்டனைச் சேர்ந்த ஈழத்தமிழரான துன்னாலை வர்ணகுலசிங்கம் முருகதாசன் என்ற 27 வயது இளைஞர் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். இவர், 7 பக்கங்களுக்கு "உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு ஈகப்பேரொளி முருகதாசன் தீக்குளித்தார்[23]. பார்க்க: முருகதாசன் கடிதம்

இவற்றையும் பாக்க

மேலதிகத் தகவல்கள் ஈழப் போராட்டகாரணங்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads