2017 பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2017 பிபா U-17 உலகக் கோப்பை போட்டி என்பது 17 வது முறையாக நடத்தப்படும் பிபா U-17 உலகக் கோப்பை போட்டியாகும், மேலும் இது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 17 வயதுக்குட்பட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த தேசிய அணிகள் போட்டியிடும் ஒரு சர்வதேச ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியாகும். இந்த முறை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியாவிற்குக் டிசம்பர் 5, 2013 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்தப் போட்டி 6 அக்டோபர் 2017 ஆம் தேதி தொடங்கி 28 அக்டோபர் 2017 தேதி வரை நடைபெறும். இதுவே இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும் எந்தவொரு சர்வதேச கால்பந்தாட்ட போட்டியாகும்.
Remove ads
போட்டி நடத்தும் நாடு தேர்ந்தெடுத்தல்
2017 பிபா U-17 உலகக்கோப்பையை நடத்துவதற்கான தேர்வில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பம் 28 மே 2013 ஆம் தேதி அன்று அஜர்பைஜான், இந்தியா, அயர்லாந்து குடியரசு மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் சமர்பித்தன.[1] இதற்கான முடிவை பிபா 15 நவம்பர் 2013 ஆம் தேதி [2] அன்று வெளியிட்டது. அந்த குறிப்பில் இந்தியா போட்டி நடத்துவதற்கான உரிமையை வென்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.[3]
போட்டியில் பங்குபெற தேர்ச்சிபெற்ற அணிகள்
போட்டி நடத்தும் நாடு எனபதன் அடிப்படையில் இந்தியா முதல் முறையாக 2017 பிபா U-17 உலகக்கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பை பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா தவிர்த்து 23 அணிகள் உலகக்கோப்பை போட்டியில் விளையாட தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் சேர்த்து முதல் முறையாக உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்த முறை நியூ கடலோனியா மற்றும் நைஜர் நாடுகள் தகுதி பெற்றுள்ளன்.
- 1.^ உலகக் கோப்பையில் முதல் முறையாக களமிறங்கும் அணிகள்.
Remove ads
அமைப்பு
போட்டிக்குத் தயாராகுதல்
இந்த போட்டிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு இடங்களுக்கு பிபா U-17 உலகக் கோப்பைக்கு முன்னதாக அரங்கங்கள் பெரும் புனரமைப்பு செய்யப்பட்டது.[4] அனைத்து விளையாட்டு அரங்குகளுக்கும் புதிய இருக்கைகள், புதிய உடைமாற்றும் அறைகள், ரசிகர்கள் ஆபத்துகாலத்தில் தப்பிக்க புதிய வழிகள் மற்றும் புதிய பயிற்சி மைதானங்கள் என்று புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் அமைப்பாளர்களின் குழு இயக்குநர் ஜாவியர் செபி இவ்வாறு கூறுகிறார், மெதுவாக தொடங்கிய புனரமைப்பு வேலைகள், பின்னர் வேகம் எடுத்து என்றார். மேலும் "கடந்த இரு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட ஒரு நீண்ட செயல்முறை ஆகும், இந்தியாவில் இது போன்ற விஷயங்களை ஆரம்பிக்க நேரம் எடுக்கிறது ஆனால் செயல்படுத்தும் வேகம் எடுத்தவுடன் விரைவாக செய்து முடிக்கப்படும். அதனால் திட்டங்களை செயல் படுத்துவதில் நான் எப்போதும் இந்தியாவை ஒரு மிகச் சிறந்து நாடு என்று கூறுவேன் என்றார்" [5]
போட்டியின் சின்னம்
2016 AFC U-16 சாம்பியன்ஷிப் போட்டியின் போது கோவாவில் 2016 செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டது.[6] பிபாவின் செய்தி வெளியீட்டின் படி இந்த சின்னம் "போட்டி நடத்தும் நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரங்களின் கொண்டாட்டமாக வடிவமைக்கப்பட்டது, இந்திய பெருங்கடலின் முக்கிய கூறுகள், ஆல மரம், காத்தாடி மற்றும் நட்சத்திர தீவு கொண்டதாக வடிவமைக்கப்பட்டது, இது அசோக சக்கர்த்தின் விளக்கமாகும், அசோக சக்ரம் இந்திய தேசிய அடையாளத்தின் ஒரு பகுதியாகும்." [6]
பார்வையாளருக்கான அனுமதிச் சீட்டுகள்
2017 பிபா U-17 உலக கோப்பைக்கான நுழைவுச் சீட்டு விற்பனை தில்லியில் ஒரு விழாவில் மே 16, 2017 அன்று சிறப்பு விருந்தினர் கார்ல்ஸ் பியொல்லால் தொடங்கிவைக்கப்பட்டது.[7] பொது டிக்கட்டுகள் விற்பனை அதிகாரபூர்வமாக 17 மே 2017 அன்று 19:11 மணிக்கு தொடங்கியது. இது 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற (IFA Shield) கால்பந்துப் போட்டியில் முதல் முறையாக மோகன் பகான் அணி கிழக்கு யாக்சயர் ரெஜிமன்ட் அணியுடன் வெற்றி பெற்றதான் நினைவுகொள்ளும் வகையில் தொடங்கபட்டது.[7]
போட்டி நடைபெறும் இடங்கள்
*பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இருக்கைகள் எண்ணிக்கை 29,000 மட்டும் பிபாவால் அனுமதிக்கப்பட்டுள்ளது
Remove ads
அணிகள்
2017 பிபா U-17 உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியிலும் தலா 21 வீரர்கள் கொண்ட அணியாக இருக்கும்.[9] இதில் பங்குபெரும் ஒவ்வொரு தேசிய நாடும் தங்களுது அணியில் விளையாடும் வீரர்கம்ளின் பட்டியலை 21 செப்டம்பர் 2017 குள் வெளியிட வேண்டும். 24ங்கு அணிகளையும் சேர்த்து மொத்தம் 504 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்குபெருவர். 26 செப்டம்பர் 2017 ஆம் தேதி அன்று பிபா அனைத்து அணிகளின் வீரர்கள் குறித்த விபரங்களை அதிகார பூர்வமாக வெளியிட்டது.[10][11]
Remove ads
குழுகள் நிலை
ஒவ்வொரு குழுவில் இருந்தும் சிறந்த முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் இரண்டு அணிகள் மற்றும் குழுவில் சிறந்த மூன்றாம் அணிகள் என்ற முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகள் மொத்தம் 16 அணிகள் அடுத்தச் சுற்று (சுற்று 16) ஆட்டத்திற்கு தகுதி பெரும். குழுவில் உள்ள ஒவ்வொரு அணியின் நிலை பின்வரும் முறைகளை பயன்படுத்தி வரிசைப்படுத்தப் படுகிறது (ஒழுங்குபடுத்துதலுக்கான கட்டுரை 17.7) [12]
குழுவிற்குள் நடக்கும் அனைத்துப் போட்டிகளில் ஒரு அணியால்,
- எடுக்கப்படும் புள்ளிகள்
- அடிக்கப்படும் கோல்களின் வித்தியாசம்
- அடிக்கப்படும் கோல்களின் மொத்த கூட்டுத்தொகை அல்லது எண்ணிக்கை
குழு அ
பார்வையாளர்கள்: 17,500
நடுவர்: Anastasios Sidiropoulos ( கிரீஸ்)
குழு ஆ
பார்வையாளர்கள்: 23,112
நடுவர்: Anastasios Sidiropoulos (Greece)
குழு இ
குழு ஈ
குழு உ
மூலம்: FIFA
இந்திராகாந்தி விளையாட்டரங்கம், குவகாத்தி
பார்வையாளர்கள்: 12,640
நடுவர்: Hamada Nampiandraza (Madagascar)
குழு ஊ
மூலம்: FIFA
மூன்றாவது இடத்தில் உள்ள அணிகளின் தரவரிசை
மூன்றாம் இடம் பிடித்த முதல் நான்கு அணிகள் கீழ்கண்ட விதிகளின் படி தேர்ந்தெடுக்கப்படும். (ஒழுங்குப்படுத்துதலுக்கான விதிகளின் கட்டுரை 17.7):[12]
- அனைத்து குழு போட்டிகளிலும் பெற்ற புள்ளிகள்;
- அனைத்து குழு போட்டிகளிலும் அடித்த கோல்களின் வேறுபாடு;
- அனைத்து குழு போட்டிகளிலும் அடித்த கோல்களின் எண்ணிக்கை;
- ஒழுக்கத்தோடு விளையாடியதற்கான புள்ளிகள்;
- பிபா ஒழுங்குபடுத்தல் குழுவால் சீட்டுக் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுப்பது.
மூலம்: FIFA
குறிப்புகள்:
குறிப்புகள்:
- Ranked by disciplinary points (New Zealand: 6 pts; Guinea: 9 pts).
Remove ads
ஆட்டமிழக்கும் நிலை
அடுத்தச்சுற்றாட்டங்களின் அட்டவணை
16 அணிகளின் சுற்று | காலிறுதிகள் | அரையிறுதிகள் | இறுதிப்போட்டி | |||||||||||
16 October — தில்லி | ||||||||||||||
![]() | 0 | |||||||||||||
22 October — கொல்கத்தா | ||||||||||||||
![]() | 4 | |||||||||||||
![]() | 1 | |||||||||||||
18 October — ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (கொச்சி) | ||||||||||||||
![]() | 2 | |||||||||||||
![]() | 3 | |||||||||||||
25 October — இந்திராகாந்தி விளையாட்டரங்கம் | ||||||||||||||
![]() | 0 | |||||||||||||
![]() | 1 | |||||||||||||
16 October — தில்லி | ||||||||||||||
![]() | 3 | |||||||||||||
![]() | 0 | |||||||||||||
21 October — கோவா | ||||||||||||||
![]() | 5 | |||||||||||||
![]() | 1 | |||||||||||||
17 October — கொல்கத்தா | ||||||||||||||
![]() | 4 | |||||||||||||
![]() | 0 (5) | |||||||||||||
28 October — கொல்கத்தா | ||||||||||||||
![]() | 0 (3) | |||||||||||||
![]() | 5 | |||||||||||||
17 October — கோவா | ||||||||||||||
![]() | 2 | |||||||||||||
![]() | 5 | |||||||||||||
21 October — இந்திராகாந்தி விளையாட்டரங்கம் | ||||||||||||||
![]() | 1 | |||||||||||||
![]() | 2 | |||||||||||||
18 October — பாட்டில் விளையாட்டு அரங்கம் (நவி மும்பை) | ||||||||||||||
![]() | 1 | |||||||||||||
![]() | 2 | |||||||||||||
25 October — பாட்டில் விளையாட்டு அரங்கம் (நவி மும்பை) | ||||||||||||||
![]() | 0 | |||||||||||||
![]() | 1 | |||||||||||||
17 October — இந்திராகாந்தி விளையாட்டரங்கம் | ||||||||||||||
![]() | 3 | மூன்றாம் இடம் | ||||||||||||
![]() | 1 | |||||||||||||
22 October — ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (கொச்சி) | 28 October — கொல்கத்தா | |||||||||||||
![]() | 2 | |||||||||||||
![]() | 3 | ![]() | 2 | |||||||||||
17 October — கோவா | ||||||||||||||
![]() | 1 | ![]() | 0 | |||||||||||
![]() | 2 | |||||||||||||
![]() | 1 | |||||||||||||
16-சுற்றுஆட்ட அட்டவணை
காலிறுதிச் சுற்று
Fatorda Stadium, மட்காவ்
நடுவர்: Clément Turpin (France)
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், கொச்சி
அறையிறுதிச் சுற்று
பட்டேல் அரங்கம், நவி மும்பை
மூன்றாம் இடத்திற்கான போட்டி
இறுதிப் போட்டி
பார்வையாளர்கள்: 66,683
நடுவர்: என்ரிக் சாசிரஸ் பராகுவே தேசிய காற்பந்து அணி
Remove ads
விருதுகள்
கீழ்கண்ட விருதுகள் இறுதிப் போட்டியின் முடிவில் வழங்கப்பட்டது.
Remove ads
புதிய சாதனைகள்
28 அக்டோபர் 2017 ஆம் தேதி நடந்து முடிந்திருக்கும் பிஃபா 17 வயதுக்குடபட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி பல புதிய சாதனைகளை படைத்திருக்கிறது.
- முதல் முறையாக இந்தியா பங்குபெரும் முதல் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியாகும்.
- முதல் முறையாக இங்கிலாந்து உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை வென்று கோப்பை பெற்றுக்கிறது.
- அதிக பார்வையாளர்கள் பார்த்த போட்டி என்ற சாதனையை படைத்திருக்கிறது. சுமார் 13 இலட்சம் பார்வையாளர்கள் போட்டியை நேரில் சென்று பார்த்திருக்கிறார்கள்.[13]
- அதிக எண்ணிக்கையிலான கோல்கள் அடித்த (மொத்தம் 182 கோல்கள்) என்ற் புதிய சாதனையை படைத்திருக்கிறது.[13]
இறுதித் தரவரிசை அட்டவணை
Remove ads
கோல் அடித்தவர்களின் பட்டியல்
கவனிக்கவும்: தடிமனான பெயர்கள் இருக்கும் வீரர்கள் இன்னும் போட்டியில் உள்ளனர்.
- 8 goals
- 6 goals
- 5 goals
- 4 கோல்கள்
- 3 கோல்கள்
- 2 கோல்கள்
பவுல்லின்ஹொ
ஆன்டிரஸ் கோமீஸ்
ஏஞ்ஜல் கோம்ஸ்
டேனி லோடர்
அலக்ஸ் ஃபிலிப்ஸ்
வில்சன் ஐசிடார்
ரிச்சர்டு டான்சோ
இப்ராஹிம் சோமா
ஃபான்ஜி தோரி
யோநிஸ் டெல்பி
மொஹமத் ஷரிவ்
தாய்சி மியாசரோ
ஃபோடீ கொநாடீ
டியாகோ லினிஸ்
ரொபர்டொ டி ல ரோசா
அந்தோனி கலிநோ
ஆலன் பிரான்சிஸ்கோ ரோடிரிக்
அனிபல் விகா
சீசர் ஜில்பர்ட்
ஆன்டிரு காரிலிடான்
- 1 கோல்
மார்கோஸ் அந்தோனி சில்வா சான்டோஸ்
டிபர் சிகாடோ
ஜான் விடல்
யகசி ஜார்கின்
மார்கன் சிப்ஸ் ஒயிட்
பில் ஃபோடான்
சலாம் ஹட்சன் ஒடி
எமிலி சுமித் ரோ
யாசின் அடிலி
கிலாடி கோம்ஸ்
மேக்ஸன் கியாரட்
லென்னி பின்டர்
நோ அவுகு
யன் ஆரல் பிசக்
ஷாவர்டி செர்டின்
நிகோலஸ் குன்
ஜான் யாபோ
சாதிக் இப்ராஹிம்
மொஹமத் குடு
இம்மானுல் டோகு
ஜோஸா கானாலஸ்
ஜீக்சன் சிங் தொநொஜம்
மொஹமத் கோபிஷாவி
சயத் கரீம்
வஹித் நம்தாரி
மொஹமத் சர்தாரி
தாஹா ஷரியாடி
அலிகரீம்
தகிபியோசா குபோ
டோசி சுசிகி
சிமி கமாரா
சலாம் ஜிடோ
காமரூன் வாடஞஸ்
ஜேகோப் ஜிநொ
மேக்ஸ் மாடா
சார்லஸ் பிராக்
சலிம் அப்துர்ஷமி
பிலாஸ் அர்மோ
ஜியோவானி போகடோ
பெர்னான்டொ டேவிட் கார்டோசா
லியனார்டோ கோஹினர்
செர்ஜி கோமீஸ் மார்டின்
ஜுயன் மிரன்டா
மொஹமத் மெளகிஸ்
கிரன் கிஜின்
அஹமத் குடு
ஜார்ஜ் அகோடா
அயா அகினோலா
கிறிஸ் டர்கின்
Remove ads
ஒளிபரப்பும் உரிமை
பிஃபா 2017 - 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஊடகம் மற்றும் ஒளிபரப்பும் உரிமையை 21 செப்டம்பர் 2017 ஆம் தேதி வெளியிட்டது.[14] இந்தியாவிற்கான ஒளிபரப்பும் உரிமையை சோனி டென் (Sony TEN) மற்றும் சோனி ஈஸ்பின் (Sony ESPN) [15] பெற்றது.அமெரிக்காவில் Fox Sports 2 தொலைக்காட்சியும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் Eurosport தொலைக்காட்சியும் பெற்றுள்ளது.[16]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads