2022 இந்திய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2022-ஆம் ஆண்டில் 7 இந்திய மாநிலங்களுக்கான சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளது[1]. அவைகள்:

  1. கோவா
  2. மணிப்பூர்
  3. பஞ்சாப்
  4. உத்தரப் பிரதேசம்
  5. உத்தராகண்டம்
  6. இமாச்சலப் பிரதேசம்
  7. குஜராத்

பிப்ரவரி & மார்ச் 2022 சட்டமன்றத் தேர்தல்கள்

கீழ்கண்ட சட்டமன்றத் தேர்தல்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று, முடிவுகள் 10 மார்ச் 2022 அன்று வெளியிடப்பட உள்ளது.

  1. 2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்
  2. 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்
  3. 2022 உத்தராகண்ட் சட்டமன்றத் தேர்தல்
  4. 2022 கோவா சட்டமன்றத் தேர்தல்
  5. 2022 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல்

நவம்பர் & டிசம்பர் 2022 சட்டமன்றத் தேர்தல்கள்

  1. இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2022
  2. குசராத்து சட்டமன்றத் தேர்தல், 2022

தேர்தல் அட்டவனை

மேலதிகத் தகவல்கள் தேர்தல் நாள், மாநிலம் ...

ஐந்து மாநிலத் தேர்தல்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து 7 கட்டமாக தேர்தல்நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெறும். பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 10-ஆம் தேதி நடைபெறும்.[3] [4]

Remove ads

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் 2022

10 மார்ச் 2022 அன்று வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கட்சி உத்தரப் பிரதேசம், உத்தராகண்டம், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது.[5] மேலும் பஞ்சாபில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி ஆட்சியை இழந்தது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads