அகரவரிசை

From Wikipedia, the free encyclopedia

அகரவரிசை
Remove ads

அகரவரிசை (alphabetical order) என்பது ஒரு மொழியில் உள்ள எழுத்துகளை, அம்மொழியின் முறைப்படி, அடுக்கப்பட்ட எழுத்துகளின் வரிசை ஆகும். ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே அகரம் முதல் எழுத்தாக இருப்பதால், அகரம் தொடங்கி, எழுத்துகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. தனித்தனி எழுத்துகளாக கோர்த்து சொற்கள் ஆக்கப்படும் மொழிகளுக்கு இவ்வரிசை அடிப்படையான ஒன்று. இதனைத் தமிழில் நெடுங்கணக்கு என்று சொல்வர். ஏதாவதொரு பணிக்காக சொற்களை வரிசைப்படுத்தும் பொழுது, அகரத்தில் தொடங்கும் சொற்களை முதலில் தொகுத்து, பின் அடுத்து வரும் எழுத்துகளில் தொடங்கும் சொற்களை வரிசைப் படுத்துவர். ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தைப்போலவே அடுத்து வரும் எழுத்துகளும், அகர வரிசைப்படி அமைக்கப்படும்.[1][2][3]

Thumb
Remove ads

தமிழ்

தமிழின் அகர வரிசை அமைந்த முறை: (1) முதலில் 12 உயிரெழுத்துகள் கொண்ட வரிசை, (2) தனி எழுத்தாகிய ஓர் ஆய்த எழுத்து, (3) 18 மெய்யெழுத்துகள் கொண்ட வரிசை, (4) உயிரோடு சேர்ந்த மெய்யெழுத்துகளாகிய 216 உயிர்மெய் எழுத்துகள். எனவே மொத்த எழுத்துகள் 247.

உயிர் : அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
ஆய்த எழுத்து : ஃ
மெய் : க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

உயிர்மெய் எழுத்துகள் வரிசை:

மேலதிகத் தகவல்கள் உயிரெழுத்துக்கள்→மெய்யெழுத்துக்கள் ↓, அ ...
Remove ads

ஆங்கிலம்

ஆங்கில மொழியின் அகரவரிசையில், உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் என்று ஏதும் பிரிவில்லாமல் கீழ்க்காணுமாறு எழுத்துகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இவற்றுள் A, E, I, O, U ஆகிய ஐந்து எழுத்துகளும், உயிர் எழுத்துகள் (Vowels) எனப்படும். ஆங்கில அகரவரிசையில், மொத்தம் 26 எழுத்துகள் உள்ளன.

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads