அக்கராயன்

From Wikipedia, the free encyclopedia

அக்கராயன்
Remove ads

அக்கராயன் என்பவர் இலங்கையின் யாழ்ப்பாண அரசின் தெற்கு பகுதியாக விளங்கிய வன்னி நாட்டை ஆண்ட ஆட்சியாளர் ஆவார். இவர் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆவார். இங்குள்ள அக்கராயன் குளம் இவரால் உருவாக்கப்பட்டது ஆகும். 2018 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் அக்கராயன் சிலை நிறுவப்பட்டது.[1][2] அக்கராயன் ஆறு இவர் பெயரிலேயே வழங்கப்படுகிறது இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாகி கிளிநொச்சி மாவட்டம் வழியாக யாழ்ப்பாண மாவட்டம் கடல்நீரேரியில் கலக்கிறது.

விரைவான உண்மைகள் அக்கராயன், ஆட்சி ...
Remove ads

இலங்கையில் ஆட்சி பகுதி

வன்னி நாடுக்கு வடக்கே யாழ்ப்பாண அரசும், தெற்கே கண்டி இராச்சியமும் கோட்டை அரசும், மேற்கு மற்றும் கிழக்கே இந்திய பெருங்கடலால் சூழப்பட்டது. நாட்டுக்கு தென்கிழக்கே திரிகோண மலை அமைந்துள்ளது. இலங்கையின் தற்போதைய மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்ட பகுதிகளை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பே வன்னி நாடாக இருந்தது. இது மேலும் புத்தளம், திருகோணமலை, அனுராதபுரம் மாவட்டங்களில் சில பகுதியையும் உள்ளடக்கியதாகும். இதன் தெற்கே உள்ள கண்டி இராச்சியமும் (தென்கிழக்கு), கோட்டை அரசும் "(தென்மேற்கு) இப்பகுதிகளையும் மற்றும் தெற்கு இலங்கை பகுதிகளையும் உள்ளடக்கிய மற்ற இரு இராச்சியங்கள் ஆகும்.

Thumb
யாழ்ப்பாண,வன்னி, கண்டி,கோட்டை அரசுகள்
Remove ads

வன்னியர்

இலங்கையின் இடைக்கால பகுதியில் வாழ்ந்த ஆட்சியாளர்கள் ஆவர்.1990 ஆம் ஆண்டுகளில் தற்போதைய வட மாகாணம், இலங்கையில் வாழ்ந்த இலங்கைத் தமிழரின் ஒரு சாதி பிரிவினர் வன்னியர் என வழங்கப்படுகிறனர்.[3][4]

வன்னியன் என்ற சொல் போர்வீரன் என்றும், வன்னிய நாயன் என்பது போர் விரர்களின் தலைவன் என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டது. வன்னியப்பற்று - படையில் பணிபுரியும் வீரர்கட்கு அளிக்கப்பெற்ற நிலம் அல்லது ஊர். (வன்னியர் - படை வீரர்). வன்னியன் பட்டம் உள்ள சாதிகள்

  1. குறவர் பட்டம் - கூடைகட்டி வன்னியன்
  2. இருளர் பட்டம் - தேன் வன்னியன்
  3. பள்ளி – வன்னியன்
  4. மறவர் பட்டம் – வன்னியன், வன்னி குட்டி, வன்னியடி
  5. கள்ளர் பட்டம் - வன்னியர், வன்னிகொண்டார், வன்னியமுண்டார், வன்னியனார், நல்லவன்னியர்
  6. வலையர் பட்டம் – வன்னியர்
  7. அகமுடையர் பட்டம் - வன்னிய முதலியார், வன்னிய பிள்ளை
  8. கொங்கு வேளாளர் - வன்னியர் கவுண்டர்
  9. பார்க்கவகுலம் - வன்னிய மூப்பனார்
  10. பரதவர் - வன்னியர்
Remove ads

தோற்ற கோட்பாடுகள்

வன்னியர் தோற்ற கோட்பாடுகளைப் பற்றி பல கருத்துக்கள் நிலவி வருகிறது. அதில் ஒன்று தற்போதைய இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தமிழ் இனக்குழு வன்னியர் குலத்தைக் குறிக்கிறது.[4][5] இவர்கள் பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் போர் தளபதிகளாக இருந்தது வந்துள்ளனர் இதன் கவுரவ பட்டமாக வன்னியர் என வழங்கப்பட்டனர் என ஒரு கருத்து நிலவுகிறது. இவர்கள் பல குல மற்றும் இனக்குழுக்களின் வழிவந்தவர்கள் ஆவர்.[3][4][6][7]ஒரு சில இலங்கை வரலாறு ஆய்வாளர்கள் வனம் என்ற காடு பொருள் படுமாறு காட்டுப்பகுதியில் ஆட்சி செய்பவர்கள் என்பதால் அவர்கள் வன்னியர் என வழங்கப்பட்டனர் எனக் கூறுகின்றனர்.[4]

12 ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் எழுச்சி மற்றும் இராசரட்டை அரசு வீழ்ச்சியினாலும் வடக்கே யாழ்ப்பாண அரசும் தெற்கே கண்டி அரசும், கோட்டை அரசும் உருவாகியது. பல அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் வன்னியர் என்ற பட்ட பெயர்களைக் கொண்டு வன்னி நாட்டை யாழ்ப்பாண அரசு காலகட்டத்தில் ஆட்சி செய்து வந்தனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாண அரசுக்கு கட்டுப்பட்டவர்களாகவும் உள்நாட்டு மக்களின் தேவையறிந்து சுயமாக ஆட்சி செய்து வந்தவர்கள் ஆவர். வன்னி நாடு யாழ்ப்பாண அரசுக்கு வரிகளாக பணம், தேன், தந்தங்கள், யானைகள் முதலியவற்றை ஆண்டு தோறும் வழங்கி வந்தது.[4][8][5][9] இந்த வரிசையில் அக்கராயன் என்ற வன்னிய குல ஆட்சியாளர் வன்னி நாட்டை ஆண்டு வந்தார்.

வன்னியர்களின் வீழ்ச்சி

1621 ஆம் ஆண்டு போர்த்துக்கல் யாழ்ப்பாண அரசை வென்றது. இதன் பின் வன்னி நாடு போர்த்துக்கேய இலங்கைக்கு உட்பட்ட பகுதியாக மாறியது. போர்த்துக்கேய இலங்கை பகுதி டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவர்களது ஆட்சிக்கு எதிராக வன்னி நாடு கடைசி மன்னர் பண்டார வன்னியன் கண்டி இராச்சியத்துடன் இணைந்து பலமாக எதிர்தார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவ தலைமை அதிகாரி வான் டெரிபெர்கு பண்டார வன்னியரை தோற்கடித்து கொன்று வன்னி நாட்டை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்[10]. தற்போது இது வட மாகாணம், இலங்கை என வழங்கப்படுகிறது.[11]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads