அசிரிய மக்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அசிரியர்கள் (Assyrians) எனப்படுவோர் தற்போதைய ஈராக், ஈரான், துருக்கி, மற்றும் சிரியா ஆகிய நாடுகளைத் தாய்நாடாகக் கொண்ட ஒரு இனக்குழு ஆகும்[14]. கடந்த 20ம் நூற்றாண்டில் இவர்களில் பலர் காக்கேசியா, வட அமெரிக்கா, மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

பல்லாயிரக்கணக்கான அசிரியர்கள் ஈராக்கிய அகதிகளாக ஐரோப்பா, முன்னாள் சோவியத் நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். முதலாம் உலகப் போர் காலத்திலும், ஒட்டோமான் பேரரசு உடைந்த காலத்திலும் இவர்கள் தங்கள் நாடுகளை விட்டுத் தப்பி ஓடினர். இதனை விட ஈரானில் இஸ்லாமியப் புரட்சி[15], ஈராக்கில் ஆகஸ்ட் 7, 1933 இல் இடம்பெற்ற படுகொலைகள், ஈராக்கில் 1914-1920 காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் போன்ற நிகழ்வுகளும் அசிரியர்களின் இடப்பெயர்வுக்குக் காரணங்களாக அமைந்தன.

மிக அண்மையில் 2003 இல் ஆரம்பித்த ஈராக்கியப் போரை அடுத்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இவர்களில் 40 விழுக்காட்டினர் அசிரியர்கள் ஆவர்[16].

Remove ads

இசுலாமிய நாடுகளில் அசிரிய மக்கள் கொல்லப்படுதல்

  • முதல் உலகப் போரின் போது 1915 - 1918 ஆண்டுகளில் 7,50,000 அசிரிய மக்கள் துருக்கியின் உதுமானியப் பேரரசால் கொல்லப்பட்டனர்.[17]
  • சிரியா உள்நாட்டுப் போரில் 2012 முதல் 2017 முடிய அசிரிய மக்களை இசுலாமிய அரசு பயங்கரவாதிகள் மற்றும் பிற இசுலாமிய பயங்கரவாத அமைப்புகள் தாக்கிக் கொன்றதாலும், அசிரியர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டதாலும், அசிரிய மக்கள் சிரியாவை விட்டு அகதிகளாக வெளியேறினர்.[18]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads