அமிர்தானந்தமயி

From Wikipedia, the free encyclopedia

அமிர்தானந்தமயி
Remove ads

மாதா அமிர்தானந்தமயி தேவி (பூர்வாசிரமப் பெயர்: சுதாமணி, செப்டம்பர் 27, 1953) ஓர் இந்திய முற்போக்கு ஆன்மீகவாதியும் சமூக சேவையாளரும் ஆவார். இவர் பக்தர்களால் அம்மா என்றும் மேலைநாட்டு பக்தர்களால் அரவணைக்கும் அன்னை ("Hugging saint") என்றும் அழைக்கப்படுகிறார். அவர் புகழ்பெற்ற பல வளாகம் கொண்ட ஆராய்ச்சி பல்கலைக்கழகமான அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் ஆவார். இன்று மாதா அமிர்தானந்தமயி மடம் அறக்கட்டளை முலம் பரவலாக உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கேரளத்திலும் தமிழ் நாட்டிலும் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்ற துறைகளில் சமூகசேவை செய்து செய்கிறார். 2004 சுனாமிக்கு பிறகு இவர் இந்தியாவிலும் இலங்கையிலும் 100 கோடி ரூபாய் கணக்கில் உதவி திட்டத்தை உருவாக்கினார்.[1]

விரைவான உண்மைகள் மாதா அமிர்தானந்தமயிதேவி, பிறப்பு ...

இவர் சுற்றுச்சூழல், மத ஒற்றுமை, அறிவியல், ஆன்மீகம் ஆகியவை குறித்து எழுதியும், பேசியும் உள்ளார்.

Remove ads

வாழ்க்கை வரலாறு

இளமைப் பருவம்

இவர் கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆலப்பாடு ஊராட்சியில் தற்போது அமிர்தபுரி ஆசிரமம் இருக்கும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் கோலி அரையன், மீனவ தலித் சமூகத்தில், எளிய குடும்பத்தைச் சேர்ந்த சுகுனாநந்தன், தமயந்தி தம்பதியினருக்கு 1953, செப்டம்பர் 27, ஆம் நாள் மூன்றாவது மகளாக பிறந்தார். இவருக்கு ஒன்பது வயது ஆகும்போது வீட்டு வேலைகளை செய்யவும், இவருடைய சிறிய சகோதரிகளை கவனித்துக் கொள்ளவும், இவருடைய மூன்றாம் வகுப்பு தொடக்க கல்வியை பாதியிலேயே நிறுத்த நேர்ந்தது.[2][3]

Remove ads

தரிசனம்

மாதா அமிர்தானந்த மயி தன் பக்தர்களை ஒரு தாயைபோல கட்டி அரவணைத்து ஆறுதல் கூறி தரிசனம் தருகிறார். அவ்வாறு அரவணைக்கும் போது தன் ஆன்மீக ஆற்றலின் ஒரு துளியைப் பக்தர்கள் பெறுவதாகவும், அதை அவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார் எனவே அம்மாவின் பக்தர்களும் சீடர்களும் இவரை அரவணைக்கும் அன்னை (Hugging Saint ) என அழைக்கின்றனர்

உலகளாவிய தொண்டுகள்

1987ம் ஆண்டு முதல் அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் நிகழ்ச்சிகளை நடத்தி தொண்டுகள் செய்துவருகின்றார்.

அடிமைத்தன ஒழிப்பு அறிக்கை

உலகத்தில் பரவலாக நிலவுகின்ற சமூகத் தீமைகளுள் மிகக் கொடியவையாக உள்ள அடிமைத்தனம், மனிதரை விலைபேசுதல், கொத்தடிமை ஊழியம், விபச்சாரத்தில் மனிதர்களை ஈடுபடுத்தல், மனித உடல் உறுப்புகளை வாங்கி விற்றல் முதலியன உள்ளன.

பலசமய கூட்டறிக்கை

இன்று உலகத்தில் சுமார் 35 மில்லியன் மக்கள் மேற்கூறிய அடிமைத்தனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு விடுதலை கொணர நாட்டுத் தலைவர்களும் சமூக அமைப்புகளும் உழைக்க வேண்டும் என்றும் அடிமைத் தனம் உலகம் முழுவதிலும் 2020ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கப்பட முயற்சி எடுக்க வேண்டும் என்றும் 2014, திசம்பர் 2ஆம் நாள் வத்திக்கான் நகரத்தில் உலக சமயத் தலைவர்கள் கூடி வாக்குறுதி எடுத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டார்கள்.

அமிர்தானந்தமயி ஆற்றிவருகின்ற சமூக முன்னேற்றப்பணி உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று காட்டுகின்ற வகையில் அவர் உலக சமயத் தலைவர்கள் பலரோடு இணைந்து அடிமைத்தன ஒழிப்பு அறிக்கையில் கையெழுத்திட்டார்.[4]

சமூகத்தில் வேரோட்டமான மாற்றம் கொணர்வதற்காக இவ்வாறு கத்தோலிக்க, கீழை மரபுவழி, ஆங்கிலிக்க சபை, யூத, சுனி மற்றும் ஷியா, இந்து, புத்த சமயப் பிரதிநிதிகளும் தலைவர்களும் ஒன்றுகூடி வந்து கோரிக்கை விடுப்பது இதுவே முதன்முறை என்று அமைப்பாளர் ஆண்ட்ரூ ஃபோரஸ்டு கூறினார்.[5]

“மனிதர் அனைவரும் சம மதிப்பு கொண்டவர்கள் என்றும், அடிப்படையான மனித மாண்பு உடையவர்கள் என்றும், சுதந்திர உரிமை பெற்றவர்கள் என்றும் உலக மக்கள் அனைவரும் ஏற்கவேண்டும்.” மனிதர்கள் பிற மனிதர்களால் அடிமைகள் ஆக்கப்படுவது இன்றைய உலகிற்கு “மாபெரும் இழுக்கு” என்று திருத்தந்தை பிரான்சிசு கூறினார்.

சிறார் தொழிலில் ஈடுபட்டோரை விடுவிக்கும்போது, அவர்களுடைய குடும்பங்களுக்கும் உதவிசெய்ய வேண்டும் என்று அமிர்தானந்தமயி கேட்டுக்கொண்டார்.

பங்கேற்றவர்கள்

திருத்தந்தை பிரான்சிசு உட்பட யூதம், இசுலாம், இந்து சமயம், புத்தம் போன்ற பிற சமயங்களைச் சார்ந்த தலைவர்களும் இந்த அறிக்கை வெளியீட்டில் பங்கேற்றனர். அவர்களின் பெயர்ப்பட்டியல் வருமாறு:

  1. திருத்தந்தை பிரான்சிசு - கத்தோலிக்க கிறித்தவ சமயத்தின் உலகளாவிய தலைவர்
  2. மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு - கீழை மரபுவழி திருச்சபையின் உயர் தலைவர் (பிரதிநிதி:மேதகு இம்மானுவேல்)
  3. மேதகு ஜஸ்டின் வெல்பி - ஆங்கிலிக்க சபைப் பெருந்தலைவர்; காண்டர்பரி பேராயர்
  4. புத்த பிக்கு வணக்கத்துக்குரிய திக் நாட் ஹான் (பிரதிநிதி: புத்த பிக்குணி வணக்கத்துக்குரிய திக் நூ சான் கோங்) - புத்தம்
  5. அல்-அசார் பெரும் இமாம் முகம்மது அகமது எல்-தாயேப் (பிரதிநிதி:முனைவர் அப்பாஸ் அப்தல்லா அப்பாஸ் சுலைமான்)- இசுலாம்
  6. பெரும் அயத்தொல்லா முகம்மது தாக்கி அல்-மொதர்ரேசி - இசுலாம்
  7. பெரும் அயத்தொல்லா ஷேக் பஷேர் உசேன் அல் நஜாபி (பிரதிநிதி: ஷேக் நாசியா ரசாஸ் ஜாபர்)- இசுலாம்
  8. ஷேக் ஒமார் அபூத் - இசுலாம்
  9. அம்மா அமிருதானந்தமயி - இந்து சமயம்
  10. வணக்கத்துக்குரிய தாதுக் கிரிண்டே தம்மரத்தன நாயக் மகா தேரோ - மலேசிய புத்தத் துறவி
  11. முதன்மை ரபி டேவிட் ரோசன் - யூதம்
  12. ரபி ஸ்கோர்க்கா - யூதம்
Remove ads

பதவிகள்

Remove ads

அயல் நாட்டில் பணிகள்

1993ல் உலக சமய நாடாளுமன்றத்தின் 100ஆம் ஆண்டு விழாவில் சொற்பொழிவாற்றினார்.

தலைமையிடம்

இவரின் தலைமை ஆசிரமம் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அமிர்தபுரி என்ற கடலோர கிராமத்தில் அமைந்துள்ளது.

விருதுகள்

  • 1993, 'உலக மதங்களின் நூற்றாண்டு பாராளுமன்றத்தின் தலைவர்' (உலகின் மதங்களின் பாராளுமன்றம்)[6]
  • 1993, இந்து மறுமலர்ச்சி விருது "ஆண்டின் இந்து" (இந்து மதம் இன்று)[7]
  • 1998, கேர் & சேர் பன்னாட்டு மனிதாபிமான விருது (சிகாகோ)
  • 2002, கர்ம யோகி ஆப் தி இயர் (யோகா ஜர்னல்)[8]
  • 2002, அகிம்சைக்கான உலக இயக்கத்தால் காந்தி-கிங் விருது அகிம்சை (ஐக்கிய நாடுகள், ஜெனிவா)[9][10]
  • 2005, மகாவீர் மகாத்மா விருது (இலண்டன்)[11]
  • 2005, பன்னாட்டு சுழற்சங்க நூற்றாண்டு பழம்பெரும் விருது (கொச்சி)[12]
  • 2006, ஜேம்சு பார்க்சு தற்கால நம்பிக்கை விருது (நியூயார்க்)[13]
  • 2006, தத்துவஞானி குரு அருள்மிகு ஞானேசுவரா உலக அமைதி பரிசு (புனே)[14]
  • 2007, லீ பிரிக்சு சினிமா, வெரிடே (சினிமா வெரிடே, பாரிசு)[15]
  • 2010, நியூ யார்க்கு மாநிலப் பல்கலைக்கழகம் தனது பஃபலோ வளாகத்தில் 25 மே 2010 - கௌரவ முனைவர் பட்டம்.[16]
  • 2012. உலகின் வாழும் ஆன்மீக செல்வாக்கு மிக்க முதல் 100 நபர்களின் வாட்கின்சு பட்டியலில் அம்மா இடம்பெற்றார்.[17]
  • 2013, 23 ஏப்ரல் 2013 அன்று திருவனந்தபுரத்தில் (இந்தியா) இந்து நாடாளுமன்றத்தால் முதல் விஸ்வரெட்னா பர்ஸ்கார் (வார்த்தையின் ரத்தின விருது) வழங்கப்பட்டது[18]
  • 2013. 60வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், மிச்சிகன் மாநிலத்தின் சார்பாக அம்மாவிற்கு உலகின் உண்மையான குடிமகள் விருது. உலகளவில் அம்மாவின் தொண்டு பணிகளை அங்கீகரிக்கிறது.
  • 2014, தி ஹஃபிங்டன் போஸ்ட்டால் 50 சக்திவாய்ந்த பெண் மதத் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[19]
  • 2018, இந்திய அரசின் தூய்மை இந்தியா பிரச்சாரமான தூய்மை இந்தியா திட்டப் [127] பங்களிப்பிற்காக பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்டது.[20]
  • 2019, மைசூர் பல்கலைக்கழகம். கௌரவ முனைவர் பட்டம்[21]
  • 2023, தலைவர், குடிமை 20, ஜி20-இன் அதிகாரப்பூர்வ நிச்சயதார்த்த குழு உறுப்பினர்[22][23]
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads