அமெரிக்கன் எயர்லைன்சு பறப்பு 11

From Wikipedia, the free encyclopedia

அமெரிக்கன் எயர்லைன்சு பறப்பு 11map
Remove ads

அமெரிக்க எயர்லைன்சு பறப்பு 11 (American Airlines Flight 11) என்பது 2001 செப்டம்பர் 11 இல் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களின் ஒரு பகுதியாக ஐந்து அல் காயிதா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட உள்ளூர் பயணிகள் விமானம் ஆகும். கடத்தல் காரனில் ஒருவனான முகம்மது அட்டா நியூயார்க் நகரின் உலக வணிக மையத்தின் வடக்குக் கோபுரத்தின் மீது வலுக்கட்டாயமாக செலுத்தி மோத வைத்ததில், கடத்தல்காரர் உட்பட அதிலிருந்த அனைத்து 92 பேரும் கொல்லப்பட்டனர். அத்துடன், கட்டடத்தில் இருந்த பெருந்தொகையானோரும் கொல்லப்பட்டனர். போயிங் 767 விமானம் அமெரிக்கன் எயார்லைன்சின் வழமையான தனது பாஸ்டனில் இருந்து லாஸ் ஏஞ்சலசு நோக்கி சென்று கொண்டிருந்தது.

விரைவான உண்மைகள் கடத்தல் சுருக்கம், நாள் ...

வானூர்தி புறப்பட்டு 15 நிமிடத்தில் கடத்தல்காரர் மூவரைக் காயப்படுத்தினார் (ஒருவரைக் கொன்றும் இருக்கலாம்). பின்னர் விமானியறைக்குள் சென்று, விமானிகள் தலைவரையும், முதலாம் நிலை அதிகாரியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அல்-கைதா உறுப்பினரும், விமான ஓட்டுநராகப் பயிற்சி எடுத்தவருமான ஆட்டா என்பவன் விமான அறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். விமானிகளின் சமிக்கைகள் எதுவும் வராததான், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் விமானம் தமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்தார்கள். பயணிகளுக்கு அட்டாவின் அறிவுறுத்தல்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களுக்கும் கேட்டதில், விமானம் கடத்தப்பட்டிருப்பதை அறிந்தார்கள். விமானத்தில் இருந்த விமானப் பணிப்பெண்கள் ஏமி சுவீனி, பெட்டி ஓங் ஆகியோர் அமெரிக்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்குத் தொடர்பை ஏற்படுத்தி, கடத்தல்காரர் பற்றியும், காயமடைந்தோர் பற்றியும் தெரிவித்தார்கள்.

இறுதியில், விமானம் உலக வணிக மையத்தின் வடக்குக் கோபுரத்தின் மீது 08:46:40 உள்ளூர் நேரத்திற்கு மோதியது. இக்காட்சியை நியூயார்க் நகரின் பல வீதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கண்டனர். ஆனாலும், மிகச் சிலரே இக்காட்சியைக் காணொளியாகப் பதிவு செய்தனர். யூலசு நோடெட் என்பவர் மோதுகையின் முழுக் காட்சியையும் காண்ளியாகப் படம் பிடித்திருந்தார். மோதுகையினால் ஏற்பட்ட தாக்கத்தினால், 102 நிமிடங்களில் கட்டடம் முழுவதும் இடிந்து வீழ்ந்தது. இதன் மூலம் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்.

Remove ads

பறப்பு

அமெரிக்கன் ஏர்லைன்சு பறப்பு11 வானூர்தி போயிங் 767-200ஈஆர் ரகம் 1987 இல் சேவைக்கு விடப்பட்டது.[1] இதில் 158 பயணிகள் பயணம் செய்ய முடியும். ஆனால், செப்டம்பர் 11 இல் 81 பயணிகளும் 11 பணியாளர்களும் இருந்தனர்.[2][3]

விமானத்தில் இருந்த அனைத்து 92 பேரும் கொல்லப்பட்டனர்.[4] இவர்களில் பிரேசியர் தொலைக்காட்சித் தொடரின் தயாரிப்பாளர் டேவின் ஏசல், அவரது மனைவி லின், நடிகை பெரி பெரென்சன் ஆகியோரும் அடங்குவர்.[5] நடிகர் மார்க் வால்பர்க் கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்துச் செய்தார்.[6]

Remove ads

கடத்தல்

Thumb
போர்ட்லாந்து விமானநிலையத்தில் அட்டா (நீலச் சட்டை), ஒமாரி இருவரும் செப்டம்பர் 11 இல் பாதுகாப்புக் கடவையைத் தாண்டிச் செல்கின்றனர்.

தாக்குதலின் தலைவர் முகம்மது அட்டா, மற்றும் அப்துலசீசு அல்-ஒமாரி இருவரும் போர்ட்லாந்து பன்னாட்டு விமான நிலையத்தை 2001 செப்டம்பர் 11 காலை 05:41 மணிக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து கோல்கன் எயார் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்து பாஸ்டன் சென்றனர்.[2] எவ்விதப் பிரச்சினையும் இன்றி இருவரும் விமானத்தில் ஏறினர்.[7] மேலும் மூன்று கடத்தல்காரர்கள் வாலீத் அல்-சேரி, வைல் அல்-சுக்காமி, சதாம் அல்-சுக்காமி லோகன் விமானநிலையத்தை 06:45 மணிக்கு வந்தனர்.[2] 07:40 மணிக்கு ஐவரும் 07:"45 இற்குப் புறப்படவிருந்த விமானத்தில் ஏறினர்.[8] [9]

கடத்தல் நாடகம் 08:14 மணிக்குத் தொடங்கியது. கட்டுப்பாட்டு அறையுடனனான விமானிகளின் தொடர்பு அறுந்தது.[8] காப்டன் ஒகொனோவ்ஸ்கி கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.[10][11] 08:16 மணிக்கு விமானம் வேறு திசையில் செல்லத் தொடங்கியது.[8] விமானப் பணிப்பெண் ஏமி சுவீனி கொடுத்த தகவலின் படி, பணிப்பெண்கள் கரென் மார்ட்டின், பார்பரா காயப்படுத்தப்பட்டனர். டேனியல் லெவின் என்ற பயணியின் கழுத்து வெட்டப்பட்டது.[12] வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் அட்டா பயணிகளுக்கு விடுத்த எச்சரிக்கையைக் கேட்க முடிந்தது.[13] 08:26 மணிக்கு, விமானம் தெற்கு நோக்கிப் பறக்கத் தொடங்கியது.[13]

இதே வேளையில் இரண்டு எஃப்-15 போர் விமானங்கள் 08:53 மணிக்குப் புறப்பட்டன.[8][14] ஆனால் அதற்கிடையில் 11 விமானம் வடக்குக் கோபுரத்தை மோதியிருந்தது.

Remove ads

பயணிகளின் தேசியம்

குறிப்பு: கடத்தல்காரரின் தேசியம் இப்பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.

மேலதிகத் தகவல்கள் தேசியம், பயணிகள் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads