அரகண்டநல்லூர்

From Wikipedia, the free encyclopedia

அரகண்டநல்லூர்map
Remove ads

அரகண்டநல்லூர் (ஆங்கிலம்:Arakandanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் உள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு திருக்கோவிலூர் அருகில் இருக்கிறது கிழக்கே விழுப்புரம் 32 கி.மீ.; மேற்கே திருவண்ணாமலை 36 கி.மீ.; வடக்கே செஞ்சி 52 கி.மீ. மற்றும் தெற்கே கள்ளக்குறிச்சி 45 கி.மீ. தொலைவில் உள்ளது. திருக்கோயிலூர் தொடருந்து நிலையம் அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தான் அமைத்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

4.64 ச.கி.மீ. பரப்பும், 12 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 34 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,876 வீடுகளும், 5,713 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 85.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 986 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 884 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 695 மற்றும் 117 ஆகவுள்ளனர்.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads