அராலி வண்ணப்புரம் சிவன் கோவில்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

அராலி வண்ணப்புரம் சிவன் கோவில்map
Remove ads

வண்ணப்புரம் சிவன் கோவில் அல்லது விசாலாட்சி அம்பாள் சமேத விசுவநாதேசுவரர் தேவத்தானம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலிக் கிராமத்தின் மத்தியிலே, வண்ணப்புரம் என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது.[1]

விரைவான உண்மைகள் அராலி வண்ணப்புரம் சிவன் கோவில், ஆள்கூறுகள்: ...
Remove ads

ஆலய அமைப்பு

இத் தேவஸ்தானத்திலே விநாயகப்பெருமான், விஸ்வநாதேஸ்வரர், விசாலாக்ஷி அம்பாள், சதாசிவேஸ்வரர், கயவல்லி மகாவல்லி சமேத சுப்பிரமணியர், சனீஸ்வரர், தட்ஷணாமூர்த்தி, சந்தானகோபாலர், நவக்கிரகமூர்த்திகள், நந்தி பலி பீடம், வைரவர், சண்டேசுரர் முதலிய தெய்வாம்ச மூர்த்தங்கள் இற்றைக்குப் பல  ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப் பெற்று அன்பர்கள் அடியார்கள் யாவருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐந்து பிரிவுகளை உள்ளடக்கிய அராலிக் கிராமத்தின் மத்தியிலே ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோயாதம் என்னும் ஐந்து திருமுகங்களுடன் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களையும் புரிந்துகொண்டு  ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் வீற்றிருக்கின்றார். பரிவார மூர்த்தங்கள் அவரைச் சுற்றிவர அவரவர்க்கு ஆகம ரீதியாக வகுக்கப்பட்ட இடங்களில் வீற்றிருக்கின்றனர்.அங்கே நித்திய

Thumb
தீர்த்தக்குளம்

நைமித்திய கருமங்கள் யாவும் காலத்துக்கு காலம் ஆகம முறைப்படி தவறாது நடைபெற்று வருகின்றன. ஆலயத்தின் தெற்கு திசையில் விசாலமான தீர்த்தக்கேணி அமைந்துள்ளது. பொதுவாக உலக மக்கள் யாவருக்கும், சிறப்பாக அராலி, வட்டுக்கோட்டை கிராம மக்களுக்கும் வழிபாடு செய்வதற்கேற்ற சிவஸ்தலம் இவ்வாலயம் என்றால் மிகையாகாது.

Remove ads

ஆலயத்திற்கான  வேறு பெயர்கள்

இத்தேவஸ்தானம் அக்காலத்தில் வண்ணாம் புலம் சிவன் கோவில், அராலி சிவன் கோவில், அராலி விசுவநாதசுவாமி கோவில், கொட்டைக்காட்டு சிவன் கோவில் என வழங்கி வந்தமையால் பழைய உறுதிச் சாதனங்களிலோ, கையெழுத்துப் பிரதிகளிலோ மேற்கூறிய ஏதாவதொரு பெயர் காணப்படலாம். தற்பொழுது அராலி வண்ணப்புரம் விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் தேவஸ்தானம் என வழங்கப்பெற்று வருகின்றது.

ஆலய வரலாறு

யாழ்ப்பாண வண்ணார்பண்ணை வைத்திலிங்கச் செட்டியாரும், பிரம்மஸ்ரீ நா. விஸ்வநாத சாஸ்திரிகளும் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வந்து,யாழ்ப்பாணத்தில் வந்து  செட்டியார்  ,விரும்பிய லிங்கம் ஒன்றை சாஸ்திரிகளை  எடுக்கச் சொல்ல, அவர் சிறிதாக  இருந்த சிவலிங்கத்தை எடுத்தார். பின் இரு சிவலிங்கத்தையும் நிறுத்துப் பார்த்தபோது சிறிதாக  இருந்த சிவலிங்கமே பாரமாய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் இருந்து செட்டியார் எடுத்த லிங்கம் செல்வத்தைக்கொடுப்பது என்றும், சாஸ்திரியார் எடுத்த லிங்கம் மோட்சத்தைக்குறிப்பது என்றும் கூறினாராம். இதற்குச்  சாட்சியாக வண்ணைவைத்தீஸ்வரன் கோவிலுக்கு தருமசாதனம் செய்யப்பட்ட நிலம் ஏராளமாக யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. மோட்சத்தை கொடுக்கவல்ல லிங்கத்தை சாஸ்திரியார்  எடுத்து இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தார். மற்றைய லிங்கம் வண்ணார்பண்ணையில் செட்டியாரவர்களால்   பிரதிஷ்டை செய்விக்கப்பெற்றது. இருவருக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. வண்ணார்பண்ணைச் சிவனும், வண்ணபுரம் சிவனும் ஒரேகாலத்தில் பிரதிஷ்டை செய்யப் பெற்றன.

இத் தேவஸ்தானம் இன்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன் அராலி மேற்கிலிருந்து காலஞ்சென்ற சந்திரசேகர ஐயர் இராமலிங்க ஐயர் என்பவர் அவ்வூர் பரமர் விநாயகரிடத்தில் 1713ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 08 ஆம் திகதி அறுதி வாங்கிய ஓலை உறுதிப்படி அராலி தெற்கும் மேற்கும் இறையிலிருக்கும் வண்ணாம் புலம் என்னும் காணியிலும், குறித்த இராமலிங்க ஐயரின் சகோதரர்களாலும், அப்பரம்பரையினாலும் வாங்கி விடப்பட்ட காணியிலும், சிதம்பர உடையார் என்பவராலும் சந்ததியனராலும் வாங்கி விடப்பட்ட காணியிலும் குறித்த இராமலிங்க ஐயரின் பேரனாகிய நா. விஸ்வநாதசாஸ்திரியார் அவர்களால் 1796 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 5 ஆம் திகதி சங்குஸ்தாபனம் (அஸ்திவாரம்) செய்யப்பெற்று ஊர்ப் பொதுத் தருமமாகக் கோவில் கட்டுவித்துக் காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டு வந்து 1843 ஆம் ஆண்டு ஆனி மாதம் 24 ஆம் திகதி பிரதிஸ்டை செய்யப்பெற்று விசுவநாதசுவாமி கோவில் என்னும் பெயருடன் அக்காலத்தில் வழங்கி வந்தமை அறியக்கூடியதாக இருக்கின்றது.

இன்றைக்கு நூற்றைம்பது வருடங்களுக்கு முன் அதாவது கோவில் ஆரம்பகாலத்தில் விநாயகர் கோவில், விசுவநாத சுவாமி கோவில், விசாலாட்சி அம்பாள் கோவில், சுப்பிரமணியர் கோவில், வைரவர் கோவில் என்பனவும் பின்பு காலத்துக்கு காலம் இன்று வரையில் (பல வருடங்கள் முன் பின்னாக ) சதாசிவேஸ்வரன் கோவில், சனீஷ்வரன் கோவில், சண்டேசுவரர் கோவில், சந்தானகோபாலர் கோவில், தட்சணாமூர்த்தி கோவில், நவக்கிரக கோவில் முதலியனவும் கட்டப்பெற்று அந்தந்த மூர்த்திகள் பிரதிஸ்டை செய்யப் பெற்றிருக்கின்றன.

உற்சவ மூர்த்தங்களாக விநாயகர், கெளரியம்பாள் சமேத சந்திரசேகரர், அல்லியங்கோதா சமேத சோமாஸ்கந்தர், கயவல்லி மகவல்லி சமேத சுப்பிரமணியர், சிவகாமசவுந்தரியம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர், (ஸ்ரீ நடராஜப் பெருமான் ) சண்டேசுவரர் முதலிய தெய்வாம்ச மூர்த்தங்களும் பிரதிஸ்டை செய்யப்பெற்று  அவரவர்க்குரிய திருவிழா நாட்களில் வீதிவலம் வந்து அன்பர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தினசரி மூன்று காலப்பூசைகளும் வெள்ளிக்கிழமை தோறும் பஜனை வழிபாடுகளும், மாதாந்த விசேஷ தினங்களும், நவராத்திரி, திருவெம்பாவை, நடராஜர் அபிஷேக தினங்கள் ஆறும், ஆனி உத்தர தினத்தை தீர்த்தமாகக் கொண்டு முன்பு 9 நாட்கள் கொடியேற்றத்  திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றது.

கோயிற் பராமரிப்பு

ஆரம்ப காலந் தொடங்கி சிதம்பார உடையார், ஆறுமுக உடையார், விசுவநாதர், ஆறுமுகம், சு. இராமலிங்கம் என்பவர்களால் முறையே

Thumb
ஆலய உட்புறத் தோற்றம்

பரிபாலிக்கப்பெற்று வந்தது. 1974 ஆம் ஆண்டு  பிற்பகுதி தொடக்கம் "ஆலய பரிபாலனசபை" பொறுப்பேற்று இன்றுவரை பரிபாலித்து வருகின்றது.

=== திருப்பணிகள் ===

Thumb
மணிக்கோபுரம்

கோவில்  திருப்பணிகள் காலத்துக்கு காலம் தேவைக்கேற்ப பொதுமக்களின் பொருள் கொண்டு நடைபெற்று வருகின்றது. 1964 இல் சகல கோவிற் திருத்தங்களும், 1978 இல் மணிக்கோபுரம் ஒன்றும், 1984, 1895 இல் சகல கோவிற் திருத்தங்களும் 1990 இல் நடராஜர்

கோவிலும், 2008 ஆம் ஆண்டு அன்னதான மடமும், அண்மையில் 2015 ஆம் ஆண்டில் விசாலமான தேர்முட்டியும் குறிப்பிடத்தக்க பெருந்திருப்பணிகளாக நிறைவேறியிருக்கின்றன.

தருமசாதனம்

Thumb
அன்னதான மடம்

இத்தேவஸ்தானத்திற்கு எத்தனையோ அன்பர்கள் காணிகள், வளவுகள் தருமசாதனம் செய்திருக்கிறார்கள். திருப்பணிகளைத் தனித்தும் பொருள் சேகரித்தும் நிறைவேற்றியுள்ளனர்.

Remove ads

கொடியேற்ற விழா

முதன் முதல் ஆரம்பம் 1864 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று, 1888-1898 நிறுத்தப்பட்டு, பின்பும் 1915 வரை நடைபெற்றது. பின்பும் சில காலம் நிறுத்தப்பட்டு இருந்தது. 1926 இல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பின் இரண்டு, மூன்று வருடம் நடைபெற்று பின்பு நிறுத்தப்பட்டது. 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் 1966 தொடக்கம் திருவிழா ஆரம்பித்து நடைபெற்று வந்தது. 1984-1987 நிறுத்தப்பட்டு, 1988 தொடக்கம் தொடர்ச்சியாக திருவிழா நடைபெற்று வருகின்றது.

Remove ads

நாவலர் தினம்

1856 ஆம் ஆண்டு நடைபெற்ற விக்னேஷ்வரப் பிரதிஷ்டையின் பொது கோவில் ஆதீனகர்த்தாவும் பிரதிஸ்டோற்சவ ஆசாரியருமாகிய ச. கங்காதரக்குருக்கள் (செல்லையாக்குருக்கள்) அவர்களால் நாவலர் பெருமான் (ஆறுமுக நாவலர்) அழைக்கப்பட்டு வந்து தரிசனம் செய்த நாவலர், விநாயகர், விசுவநாதசுவாமி, விசாலட்சி அம்பாள் மூவர் பேரிலும் மூன்று விருத்தப் பாமாலை சூட்டி வணங்கினார்.

பூசகர் விபரம்

கோவில் ஆரம்ப காலந்தொடக்கம் இன்றுவரையும் நா. விஸ்வநாதசாஸ்திரியார் மரபினர்களே வம்சாவளி முறையாகப் பூசையைச் செய்துகொண்டு வருகிறார்கள். அக்காலத்தில் 1878 இல்,

  1. சித்திரை - வைகாசி - சு. நாராயணகுருக்கள்
  2. ஆனி - கார்த்திகை - க. திரியம்பகக்குருக்கள்
  3. ஆடி - ஐப்பசி - க. கணேசக்குருக்கள்
  4. ஆவணி - புரட்டாதி - வி. கணபதிக்குருக்கள்
  5. மார்கழி - பங்குனி - க. சுப்பிரமணியக்குருக்கள்
  6. தை - மாசி - கி. சிவகடாட்சகுருக்கள் 

என்போர் பூசர்களாயிருந்தனர். இவர்கள் யாவரும் நா. விஸ்வநாத சாத்திரியார் மரபினரேயாகும். இவர்களும் இவர்கள் மரபினரிற் சிலரும் காலம் செல்லச் செல்ல பூசையைக் கைவிட வேண்டியவர்களாகிப் பிற இடங்களுக்குச் சென்றனர். சிலர் தற்போது வேறிடங்களில் இருக்கின்றனர்.

தற்போது கோயிற் பூசை 12 மாதங்களும் க. கணேசக்குருக்கள், க. சுப்பிரமணியக்குருக்கள் மரபினரால் செய்யப்பெற்று வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக க. சுப்பிரமணியக்குருக்கள் அவர்களின் மகன் பிரம்மஸ்ரீ .சி. சிவகணேஷக்குருக்கள் அவர்களே இக்கோவிலில் பூசை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Remove ads

கந்தபுராண மடம்

Thumb
கந்தபுராண மடம்

இன்றைக்கு 200 வருடங்களுக்கு மேல் அமைக்கப்பெற்ற மடம் ஓன்று ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் வாசலுக்கு தென்பாகத்தில் உள்ள திருக்குளத்திற்கு அப்பால் அமைந்திருக்கின்றது. இம்மடம் கோவில் ஆரம்பத்திற்கு முன் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் இம்மாதத்தில் புராணபடனங்கள் படிப்பதும், இம்மடத்தில் தான், நா. விஸ்வநாதசாஸ்திரிகள் சிவபூசை செய்து புராணங்கள் படிப்பதும், புராணபடனங்கள் கேட்பதற்கு ஊர்மக்கள்

வந்துபோவதென்பதும் வழக்கமாக இருந்தது. அவ்வாறு கேட்க வந்தவர்களில் சிதம்பர உடையாரும் ஒருவராவர். புராணபடனங் கேட்க வந்தவர்களுக்கு விஸ்வநாதசாஸ்திரியார் இவ்விடத்தில் ஓர் சிவாலயம் அமைக்க வேண்டுமெனக் கூறிய போது சிதம்பர உடையார் முன்வந்து நிலம் தருமசாதனம் செய்து அத்துடன் ஆக வேண்டிய உதவிகளும்  செய்தார். விஸ்வநாதசாஸ்திரியார் அப்போது தங்கள் நிலத்துடன் அவரின் நிலத்தையும் சேர்த்து அவ்விடத்தில் ஊர்பொதுத்தருமமாக கோவிலைக் கட்டுவித்து சிவப்பிரதிஷ்டை செய்தார். இம்மடம் தற்போது வைரவர் மடம் எனப் பெயர் வழங்கி வருகிறது. வருடாவருடம் ஆனி மாதத்தில் வைரவர் பொங்கல் திருநாள் இம்மடத்தில் விசேடமாக நடைபெற்று வருகின்றது.

Remove ads

சிவஸ்ரீ நா. விஸ்வநாத சாஸ்திரிகள்

இக்கோவிலை தாபித்தவரான விஸ்வநாத சாஸ்திரிகள், இவ் வண்ணப்புரத்தைப் பற்றி நூறு பாடல்கள் கொண்ட ஓர் அந்தாதி பாடியுள்ளார். இது அச்சில் வரவில்லை. வண்ணப்புரம் சிறப்புகள் யாவும் இதிலடங்கியிருக்கிறது. விசுவநாதசுவாமி பேரில் ஊஞ்சற் பாடல் 10 உம் இவராலே பாடப்பெற்றன.

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads